சில ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக அறியப்படும் ஐஎஸ்ஐஎஸ் பாரிஸ் நகரில் நடத்திய கொடூர தாக்குதலுக்கான பதில் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது எனலாம். ஃபிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்கள் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தங்கள் தரப்பில் தாக்குதல்களை நடத்த சைபர் போர் ஒன்றை அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் அறிவித்தது அனைவரும் அறிந்ததே..
இண்டர்நெட் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரை இயங்க விடாமல் தடுக்கும் முயற்சியில் தற்சமயம் அனானமஸ் ஈடுப்பட்டுள்ளனர் என கூறப்படுகின்றது.
தொழில்நுட்பம் அபார வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் எவ்வாறு தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர் என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
கேமிங் ப்ரியர்கள் அதிகம் விளையாடும் ப்ளே ஸ்டேஷன் 4 மூலம் தீவிரவாதிகள் தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் உலகில் இருக்கும் யாருடன் வேண்டுமானாலும் கேம் விளையாட ப்ளே ஸ்டேஷன் 4 அனுமதிப்பதோடு அவர்களுடன் ரகசிய தகவல்களை பறிமாறி கொள்ளவும் வழி செய்கின்றது இந்த தகவல்களை உறுதி செய்வதாக அமைகின்றது.
கேமிங் தவிற ஐபோன்களில் கிடைக்கும் ரகசிய செயலிகளை கொண்டும் அவர்கள் தகவல் பறிமாற்றம் செய்ய முடிவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இவர்கள் பயன்படுத்துவது வாட்ஸ்ஆப், சிக்னல் மற்றும் சைலன்ட் போன் போன்ற செயலிகள் தான் என்கினறனர் சைபர் பிரிவு ஆய்வாளர்கள்.
இதோடு டெலிகிராம் போன்ற செயலிகள் உலகெங்கும் ரகசிய தகவல்களை அனுப்ப தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் தங்களது இயக்கத்தினரை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் தகவலை ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐஎஸ் பிரிவினர் ரகசியமாக தகவல்களை பறிமாறி கொள்ள சுமார் 120 தனித்துவம் வாய்ந்த சேவைகளை பயன்படுத்துவதாக அமெரிக்க ராணுவத்தின் ராணுவ பிரிவின் தீவிரவாத ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சேவைகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை அவர்களை உளவு பிரிவிடம் இருந்து பாதுகாப்பதாகவும், இவர்கள் தங்களுக்கான இடத்தை தாங்களாகவே தேர்வு செய்வதோடு இது மிகவும் ஆபத்தானது என அமெரிக்க ராணுவ பிரிவின் தீவிரவாத ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனானமஸ் சைபர் போர் மூலம் ஏகப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த தகவல்கள் ட்விட்டரில் நீக்கப்பட்டுள்ளதோடு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அனானமஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் டெலிகிராம் செயலி தரப்பில் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த சுமார் 78 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலி பயன்படுத்தி தீவிரவாதிகள் மிகவும் சாமர்த்தியமாக தங்களுக்குள் தகவல்களை பறிமாறி கொள்கின்றனர் என மத்திய கிழக்கு ஊடக ஆய்வு மையம் பாரிஸ் தாக்குதலுக்கு முன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கையில் ஆயுதங்களை தயாரிப்பது எப்படி, சைபர் தாக்குதல்களை மேற்கொள்வது எப்படி போன்ற தகவல்கள் பறிமாறிகொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெலிகிராம் செயலி மூலம் 200 பேர் கொண்ட குழுவினருக்கு என்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் அனுப்ப முடியும்.
கடந்த செவ்வாய் கிழமை டெலிகிராம் தரப்பில் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்து 12 மொழிகளில் சுமார் 78 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் தீவிரவாத செயல்களில் பயன்படுத்தப்பட்டது வருத்தமளிக்கின்றது என்றும் இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொடூர தாக்குதலுக்கு பின் வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள், இதன் பின் ஆவது இது போன்ற தாக்குதல்களுக்கு வழி செய்ய கூடாது என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக