சீனாவில் 12 வருடங்களுக்கு முன் உறை நிலையில் பேணப்பட்ட கரு முட்டையைப் பயன்படுத்தி குழந்தையொன்று வெற்றிகரமாக பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி குழந்தையானது அந்நாட்டில் அதி நீண்ட காலம் உறை நிலையில் பேணப்பட்டு பிறந்த சோதனைக் குழாய் குழந்தை என்ற பெயரைப் பெறுகிறது.
கருப்பையில் கட்டிகள் உருவாகும் பிரச்சினைக்குள்ளான 40 வயது பெண்ணொருவரது கருமுட்டைகள் பிற்கால தேவைக்காக உறை நிலையில் பேணப்பட்டன.
அவர் மேற்படி கருமுட்டைகளைப் பயன்படுத்தி 2003 ஆம் ஆண்டில் முதல் தடவையாக கர்ப்பம் தரித்தார்.
அதன் பின் 13 வருடங்கள் கழித்து அந்நாட்டின் குடும்பத்திற்கு ஒரு குழந்தை கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதற்குப் பின்னர் உறை நிலையில் பேணப்பட்டிருந்த தனது கருமுட்டைகளைப் பயன்படுத்தி தற்போது கருத்தரித்து ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக