தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference>Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பதை டேபிள், படம் மற்றும் வேறு ஆப்ஜெக்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வேர்ட் 2007 ஆக இருந்தால், ரிப்பனில் References டேப் தேர்ந்தெடுத்து, பின்னர் Captions குரூப்பில் Insert Caption என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCaption பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது AutoCaption டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் ஒரு ஆப்ஜெக்ட் பாக்ஸ் கிடைக்கும். எந்தவிதமான ஆப்ஜெக்ட் என்பதனை இதில் தேர்ந்தெடுத்து டிக் மார்க் அமைக்கவும். எடுத்துக் காட்டாக, நீங்கள் அமைக்கும் டேபிள்களுக்கான தலைப்பு அமைக்க விரும்பினால், Microsoft Word Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Use Label என்ற கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, எந்த சொல் டேபிள் அல்லது வேறு ஆப்ஜெக்ட் மேலாகத் தலைப்பாக வர வேண்டுமோ, அந்த சொல்லை டைப் செய்திடவும். இதனை அடுத்து Position என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, இந்த தலைப்பு எங்கு வர வேண்டுமோ, அந்த இடத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இவை எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எண்கள் அமையும் இடைவெளி: வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
3. Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக