ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கர்ப்பப்பை வாசல் புற்று நோயை எவ்வாறு தடுக்கலாம்?

பெண்­களை தாக்கும் புற்று நோய்­களில் முதல் இடத்தை பிடிப்­பது மார்­ப­கப்­புற்­றுநோய். அடுத்­த­தாக கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் உள்­ளது.
இப்­புற்று நோய் தொடர்­பான விளக்­கங்கள் கண்­ட­றியும் பரி­சோ­த­னைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளி­வு­ப­டுத்­து­வதன் மூலம் இந்­நோய்த்­தாக்­கத்தைக் குறைப்­பது எமது கட­மை­யாகும்.


கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள்

தாம்­பத்­திய உறவில் ஈடு­ப­டு­கின்ற அல்­லது ஈடு­பட்ட எந்தப் பெண்­ணிலும் பப்­பி­லோமா வைரஸ் (HPV) எனப்­படும் வைரஸின் தொற்று கர்ப்­பப்பை வாசலில் ஏற்­ப­டு­வது வழக்கம். ஆனால் எமது உட­லி­லுள்ள எதிர்ப்பு சக்­திகள் இந்த வைரஸை எதிர்த்து அழித்து விடு­கின்­றன. ஒரு சிறிய பகுதி பெண்­களில் (10%) இந்த எதிர்ப்பு சக்தி சரி­யாகத் தொழிற்­ப­டா­ததால் பப்­பி­லோமா வைரஸ் கர்ப்­பப்பை வாசல் கலங்­க­ளி­லேயே தேங்கி அவற்றின் கட்­ட­மைப்பை சீர்­கு­லைத்து பல வரு­டங்­களில் புற்­று­நோ­யாக உரு­வெ­டுக்கும்.

புகை­பி­டிக்கும் பழக்­க­மு­டை­ய­வர்கள், மிக இளம் வய­தி­லேயே தாம்­பத்­திய உறவை ஆரம்­பித்­த­வர்கள், பாலியல் துர்­ந­டத்தை உடை­ய­வர்கள் போன்­ற­வர்­களில் இம்­மாற்றம் சற்று வீரி­ய­மாக நடை­பெறும்.

கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோயின் நோய் அறி­கு­றிகள்

இந்­நோயின் ஆரம்ப காலப்­ப­கு­தியில் எவ்­வித அறி­கு­றி­க­ளையும் காட்­டாது. இப்­புற்று நோய் சற்று பெரி­தாக வள­ரு­கின்ற போது ஏற்­ப­டக்­கூ­டிய முதல் அறி­குறி அசா­தா­ரண இரத்­தப்­போக்­கு­ட­னான மாத­விடாய் அதா­வது மாத­வி­டாய்க்கு இடைப்­பட்ட நாட்­களில் இரத்­தப்­போக்கு, தாம்­பத்­திய உற­வுக்கு பின்­ன­ரான இரத்­தப்­போக்கு, மாத­விடாய் முடி­வுற்று மெனோபோஸ் (menopause) நிலையை அடைந்த பெண்­களில் பின்னர் ஏற்­படும் இரத்­தப்­போக்கு சில­வே­ளை­களில் இப்­புற்று நோய் துர்­ம­ண­மு­டைய திர­வக்­க­சி­வையும் ஏற்­ப­டுத்தும். அத்­துடன் நோயின் பிந்­திய காலப்­ப­கு­தியில் அடி­வ­யிற்று வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் எவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது?

பெண்­க­ளது அடி­வ­யிற்றைப் பரி­சோ­தித்து கர்ப்­பப்­பையில் அசா­தா­ரண தன்­மைகள் இருப்­ப­தாக சந்­தே­கித்தால் அவ்­வா­றான அசா­தா­ரண பகு­தி­யி­லி­ருந்து சிறிய இழை­யங்­களை எடுத்து பரி­சோ­த­னைக்­காக அனுப்பி நோயை உறு­திப்­ப­டுத்­தலாம்.

மேலும் கொல்­பொஸ்­கோப்பி எனப்­படும் பூதக்­கண்­ணாடி வில்­லைகள் கொண்ட கருவி மூலம் இவ்­வா­றான அசா­தா­ரண மாற்­றங்­களை மிக நுணுக்­க­மாக அவ­தா­னித்து இழை­யங்­களைப் பரி­சோ­தித்து இந்­நோயை உறு­திப்­ப­டுத்­தலாம். மற்றும் இப்­புற்று நோய் எந்­த­ள­வுக்கு வளர்ந்­துள்­ளது என்­ப­தையும் அறிந்து கொள்­ளலாம்.

இக் கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோய்க்­கு­ரிய சிகிச்­சைகள்

கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோய்க்கு இரு­வ­ழி­களில் சிகிச்­சைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அதா­வது சத்­திர சிகிச்சை மற்றும் கதிர்­வீச்சு சிகிச்சை இச்­சி­கிச்­சை­யா­னது பெண்ணின் வயது, அவ­ரது புற்­றுநோய் உக்­கி­ரத்­தன்மை, அவ­ரது தேக ஆரோக்­கிய நிலை மற்றும் அவ­ரது தனிப்­பட்ட விருப்பம் என்­ப­வற்றைப் பொறுத்து தீர்­மா­னிக்­கப்­படும்.

பொது­வாக இப்­புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்­ட­றி­யப்­பட்டால் சத்­திர சிகிச்சை வெற்­றி­ய­ளிக்கும். ஆனால் இந்நோய் சற்றுப் பிந்­திய நிலையில் அறி­யப்­பட்டால் கதிர்­வீச்சு சிகிச்­சையே பொருத்­த­மா­னது.

கர்ப்­பப்பை வாசல் புற்று நோய் வருமுன் தடுத்தல்

இப்­புற்று நோய் வந்­தபின் சிகிச்­சை­ய­ளித்தும் பலன்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­வ­தனால் இதனை வருமுன் தடுப்­பதே சிறந்­தது. இவ்­வாறு வருமுன் தடுப்­ப­தற்கு தாம்­பத்­திய வாழ்க்­கையில் ஈடு­ப­டு­கின்ற அல்­லது ஈடு­பட்ட எந்­த­வொரு பெண்ணும் ஒழுங்­காக கர்ப்­பப்பை வாசல் பரி­சோ­த­னை­யான பப் டெஸ்டை செய்­வது அவ­சியம்.

இந்தப் பரி­சோ­த­னையை மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை 65 வயது வரை செய்­வது சிறந்­தது. இந்தப் பரி­சோ­த­னையை பெண்கள் அனை­வரும் அறிந்­தி­ருந்து தாங்­க­ளா­கவே முன்­வந்து செய்­வதன் மூலம் இந்­நோயை இல­கு­வாக வெற்றி கொள்­ளலாம்.

அவ்­வா­றான பரி­சோ­த­னையில் ஏதா­வது அசா­தா­ரண நிலைகள் கர்ப்­பப்பை வாசலில் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்டால் மிகவும் எளி­மை­யான சிகிச்­சைகள் மூலம் இந்த நோய் வராமல் தடுத்து விடலாம்.

கர்ப்­பப்பை வாசல் புற்று நோயை கண்­ட­றிய மேற்­கொள்ளும் பரி­சோ­தனை எவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது?

இது ஒரு வைத்­திய நிபு­ணரின் ஆலோ­சனைக் கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதற்­காக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­ப­டவோ அல்­லது உங்­களை மயக்­க­ம­டையச் செய்­யவோ தேவை­யில்லை.

அத்­துடன் இதன் போது ஒரு வலியோ நோவோ ஏற்­ப­டாது. இதற்­காக எடுக்கும் நேரம் 5 நிமி­டங்­க­ளாக இருக்கும். இதன் பின் நீங்கள் உடனடியாக வீடு செல்லக்கூடியதாக இருக்கும்

இதன் பின் இரண்டு கிழமைகளில் இப்பரிசோதனை பெறுபேறுகளை வைத்திய நிபுணருடன் நீங்கள் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.
இப்புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஒரு வைரஸின் தாக்கத்தினாலேயே உருவாகின்றது.

இவ்வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் இந்நோயைப் பெரிதளவில் தடுத்து விடும். மேலை நாடுகளில் இத்தடுப்பூசி 13- -16 வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் இத்தடுப்பூசி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல