செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

காத­லையும் கற்­பையும் நெறிப்­ப­டுத்தும் சாதக கிரக அமைப்­புகள்!

ஓர் இல­கு­வான சோதிட விளக்கம்

ஆணோ பெண்ணோ, அவ­ரது தாம்­பத்­திய வாழ்வு செழிப்­பா­கவும் இன்­ப­மா­கவும் இருக்க வேண்­டு­மானால் அவ­ரது சாத­கத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலு­வா­ன­வை­யாக அமைந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்­றினுள் இன்­ப­மா­கிய காமமே மிகவும் சக்­தி­வாய்ந்­தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பல­வற்­றிற்கும் காமமே தூண்­டு­த­லாக இருக்­கி­றது!



ஒரு சாத­கத்தின் கிர­க­நிலை அதன் இலக்­கி­னத்தை முதன்­மை­யாகக் கொண்டு கணிக்­கப்­பட்­டாலும், பொது­வான கோசார பார்­வையில் இராசிச் சக்­க­ர­மென்­பது மேட­ரா­சியை முதன்­மை­யாகக் கொண்டே ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இது தமிழ்ப் புத்­தாண்டின் முதல் மாத­மான சித்­திரை மாதத்தின் முதல் நாளில் சூரியன் மேட­ரா­சியில் பிர­வே­சிப்­பதால் கொண்­டா­டப்­ப­டு­கின்ற தமிழ்ப்­புத்­தாண்டை முதன்­மைப்­ப­டுத்தி ஏற்­பட்ட வழக்­க­மே­யல்­லாது மேடத்தை பிர­தா­னப்­ப­டுத்­தியோ அன்றி மீனத்தை கடை­நி­லைப்­ப­டுத்­தியோ காட்டும் தரப்­ப­டுத்தல் அல்ல.

இந்­த­வ­கையில் இராசிச் சக்­க­ரத்தில் மேடத்­தி­லி­ருந்து எண்­ணி­வரும் மூன்­றா­மி­டத்தைக் கவ­னி­யுங்கள். மிதுனம் என்று அதற்குப் பெயர். மிதுனம் என்ற சொல் மைதுனம் அல்­லது காம­னின்ப நுகர்ச்சி என்னும் பொருளைத் தரு­வ­தையும் நினைவில் கொள்­ளுங்கள். இந்த மிதுனம் எவ்­வாறு குறிக்­கப்­ப­டு­கின்­றது?

ஆண்மை, ஆசை, வலிமை, உறுதி ஆகி­ய­வற்­றைக்­காட்ட வேண்­டிய தாம்­பத்­திய வாழ்க்­கை­யிலே மிதுனம் எனப்­படும் இந்த மூன்­றா­மி­ட­மா­னது சப்­தம ஸ்தான­மா­கிய ஏழா­மி­டத்தின் திரி­கோ­ணஸ்­தா­ன­மா­கவும் (பாக்­கிய வீடு) விளங்­கு­வதைக் கவ­னி­யுங்கள். ஆகவே சப்­தம ஸ்தானம் எனப்­படும் களத்­திர வீடா­கிய ஏழா­மி­டத்­தினால் அடையக் கூடிய தாம்­பத்­திய உற­விலே அள­வற்ற இன்­பமும் திருப்­தியும் பெருக வேண்­டு­மானால் அதற்கு இந்த பாக்­கிய ஸ்தான­மான மூன்­றா­மி­டமும் பலம் பெற்­றதாய் அமைந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்.

புரிந்து கொண்டு விட்­டுக்­கொ­டுத்து வாழும் குடும்ப சுகத்­துக்கும் காதலும் காமமும் சம விகி­தத்தில் கலந்த களத்­திர சுகத்­துக்கும் கார­ண­மான சுக்­கிர பக­வா­னுக்கு அத­னாற்றான் இராசிச் சக்­க­ரத்தில் இரண்­டா­மி­டத்­தையும் ஏழா­மி­டத்­தையும் தந்து சோதிட சாத்­தி­ரத்தின் மூல கர்த்­தாக்கள் சிறப்­பித்­தி­ருக்­கி­றார்கள்.கட்­டிளம் காளை போன்ற ஆண்­மையும் (இடபம்) எதிலும் அதிகம் பற்று வைக்­காமல் தராசு போல எதையும் சம அளவில் காட்­டியபடி நடந்து கொள்ளும் நிதா­னமும் (துலாம் )இல்­ல­ற­வாழ்வின் இன்­றி­ய­மை­யாத தேவைகள் என்­பதை இது காட்­டு­கி­ற­தல்­லவா?

மூன்­றா­மி­ட­மா­னது ஏழா­மி­டத்­தினால் அனு­ப­விக்­கப்­ப­டு­கின்ற இன்­பத்­தினால் ஒருவர் அடை­கின்ற ஆத்ம சந்­தோ­ஷத்­தையும் (தாம்­பத்­திய சுகம்) திருப்­தி­யையும் இதனால் நமக்குத் தெளி­வாக உணர்த்தும் என்று கூறலாம். ஏழா­மி­டத்தின் பஞ்­ச­மஸ்­தா­ன­மா­கிய பதி­னோ­ரா­மிடம் ,ஏழா­மி­டத்தால் அனு­ப­விக்கும் நமது மன­மா­கிய உள்­ளத்­திற்குக் கிடைக்கும் இன்­பத்­தையும் மன நிறை­வையும் உணர்த்தும் என்­பதை நாம் அறிய வேண்டும்.

புரு­ஷார்த்தம் என்­பது சோதிட நூல்­களில் அதி­க­மாகப் பாவிக்­கப்­படும் ஒரு பத­மாகும். புரு­ஷார்த்­தங்கள் என்றால் ஒரு மனித உயிர் அடையக்கூடிய அடைய வேண்­டிய நன்­மைகள் என்று பொருள். இவற்றை நான்­காக வகைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். பெரி­யோர்கள் அவை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்­ப­தாகும். தமிழ்ச் சான்றோர் இவற்றை அறம்,பொருள், இன்பம், வீடு என்று நான்கு பேறு­க­ளாகக் கூறி­யுள்­ளார்கள்.

இந்த நான்கில் தர்மம், அர்த்தம், காமம், என்னும் மூன்றும் அதா­வது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் இப்­போது எடுத்­துள்ள இந்த உடம்­போடு கூடிய பிற­வி­யி­லேயே நம்மால் அடையக் கூடி­யவை மோட்சம் அல்­லது வீடு என்­பது நம் ஆன்மா இந்த உடலைக் கழித்து விட்ட பின்னால் அதனால் மட்­டுமே அடையக் கூடி­யது. முதல் மூன்று தர்­மங்­க­ளையும் நாம் எவ்­வ­ளவு சிறப்­பாக நடத்­து­கி­றோமோ, அதற்­குத்­தக்­க­படி நான்­கா­வ­தான வீடு பேறும் நமக்குக் கிடைக்கும்.

இவற்றுள் அதா­வது இந்த அறம், பொருள், இன்பம் என்ற மூன்­றினுள் காமமே மிகவும் சக்­தி­வாய்ந்­தது. ஆசை, விரக்தி, இன்பம், துன்பம், நட்பு, களிப்பு போன்­ற­வற்­றிற்கும் காமமே தூண்­டு­த­லாக இருக்­கின்­றது காமத்தை நெறிப்­ப­டுத்தி வாழ்­வது நெறி­யோடு செய்து அடை­வது பொரு­ளாகும். இரண்­டிலும் நெறி ஒழுக்கம் வேண்டும். ஆனால், இந்த உணர்­வுகள் நல்­லவை கெட்­டவை எல்­லாமே தெய்­வீக சக்­தி­களின் சங்­கல்­பத்­துக்கு அவை­களின் செல்­வாக்­கிற்­குட்­பட்டே நிகழ்­கின்­றன என்­பதை நாம் விரும்­பியோ விரும்­பா­மலோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இந்த நான்கு புரு­ஷார்த்­தங்­களும் வேதாந்த சித்­தாந்த விசா­ர­ணை­களில் மட்­டுமே விளக்­கப்­ப­டு­வன அல்ல. சோதிட சாத்­தி­ரத்­திலும் இவற்றை அறியும் மரபை நம் முன்­னோர்கள் வகுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். அதன்­படி இலக்­கி­னத்­தி­லி­ருந்து எண்­ணி­வரும் 1ஆம் 5ஆம் 9ஆம் இடங்கள் தர்­மத்தைக் குறிக்கும் திரி­கோண ஸ்தானங்­க­ளாகும். அது­மா­திரி 2, 6,10 ஆகிய இடங்கள் அர்த்­தத்­தையும் 3, 7, 11 ஆகிய இடங்கள் காமத்­தையும் 4, 8, 12 ஆகிய இடங்கள் மோட்­சத்­தையும் குறிக்கும் திரி­கோண ஸ்தானங்­க­ளாகக் கரு­தப்­படும்.

ஒரு சாத­கத்தை நன்­றாக ஆராய்ந்­தோ­மானால் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வாழ்­விலும் இந்த நான்கு புரு­ஷார்த்­தங்­களும் எவ்­விதம் விளங்கும் என்­பதைக் கணக்­கிட்டுக் கூறி­வி­டலாம். இத்­தி­ரி­கோ­ணஸ்­தா­னங்கள் ஒன்று மற்­றொன்றின் செல்­வாக்கைச் சார்ந்து நின்று ஒரு­வரின் வாழ்வை நிர்­ண­யித்து நடத்திச் செல்லக் கூடி­ய­வை­யென்று சான்­றோர்கள் சொல்­வதை நாமும் கவ­னித்து நடந்து கொள்­வதே வாழ்வில் நன்­மை­களை அறி­மு­கப்­ப­டுத்தும்.

நமது வாழ்­வா­னது மூன்று நிலை­களில் நடக்­கி­ற­தென்­பது தத்­து­வமும் இன்­றைய அறி­வி­யலும் ஒப்­புக்­கொண்ட உண்­மை­யாகும். அவை உடல் தொடர்­பான உள­நலம் தொடர்­பான, உயிர் தொடர்­பான வாழ்வு என்­ப­தாகும். உடலை விட உள்ளம் வலி­மை­யா­னது. உள்ளம் உட­லையும் தன் சக்­திக்கு உட்­பட்டு நடக்க வைக்கும் வலிமை கொண்­டது. உள்­ளத்தை விட உயிர் வலி­மை­யா­னது. உயிர் உள்­ளத்தை இயங்க வைக்­கக்­கூ­டி­யது. உள்­ளத்தை ஏவிச் செலுத்தி உட­லையும் இயங்கச் செய்யும் ஆற்றல் பெற்­றது.

எனவே உயி­ராற்றல் பெரு­கினால் உள்­ளத்தின் சக்­தி­பெ­ருகும். உடலின் வலிமையும் மிகு­தி­யாகும்.
உயி­ராற்­றலை பெருக்­கு­வ­தற்கு வழி­காட்­டவே ஆன்­ம­ஞான நூல்கள் அனைத்தும் தோன்­றின. இந்த உடல், உள்ளம், உயிர் மூன்­றி­னதும் சக்­திகள் நம் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் எவ்­விதம் அமைந்­துள்­ளன என்­பதை அறிந்து கொள்ள முடி­யுமா இதற்கு சோதிட மர­பு­களில் வழி­யி­ருக்­கி­றதா என்று கேட்டால் நமது சோதிட மேதைகள் அதற்கும் வழி­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஒரு­வரின் சாத­கத்தை எடுத்­துக்­கொண்டால் அதி­லுள்ள பன்­னிரு வீடு­க­ளிலும் 1, 4, 7,10 ஆகிய வீடு­களை ஆராய்ந்தால் அவ­ரது உடல்­வ­ளமும் போக்கும் பற்­றிய தன்­மையைக் கண்டு விடலாம். 2, 5, 8,11 ஆகிய வீடு­களை ஆராய்ந்தால் அவ­ரது உள்­ளத்தின் தன்­மை­யையும் வலி­மை­யையும் பற்றித் தெரிந்து கொள்­ளலாம். 3, 6, 9, 12 ஆகிய வீடு­களை ஆராய்ந்தால் அவ­ரது உயிரின் இயல்­பையும் சக்­தியின் வேகத்­தையும் அது போகும் போக்­கி­னையும் புரிந்து கொள்­ளலாம். இவை ஒவ்­வொன்றும் ஒன்று மற்­றொன்றின் கேந்­தி­ரத்­தா­ன­மாக இருப்­பவை. ஒன்று மற்­றொன்றின் சக்­தியை தன்­னு­டைய அமைப்பால் ஏற்­ற­படி உரு­வாக்­கவும் முயல்­பவை. இவற்றை ஊன்றி ஆராய்ந்தால் ஒரு­வரின் உடல்­வளம் மன­வளம் ஆத்­ம­நலம் ஆகிய மூன்­றை­யுமே நிர்­ண­யித்துக் கூறலாம் என்­பதும் சோதிட சாத்­தி­ரத்தின் முடி­வாகும்.

நான்கு புரு­ஷார்த்­தங்­களுள் காமம் என்னும் இன்­ப­வாழ்வைக் குறிக்கும் திரி­கோ­ணஸ்­தா­னங்கள் ஒரு­வரின் சாத­கத்­தி­லுள்ள 3, 7, 11 ஆம் இடங்க.ௌன்று நாம் ஏற்­க­னவே கூறினோம். இந்த மூன்று இடங்­க­ளையும் நலம் அடுத்து வகைப்­ப­டுத்­திய உடல் உள்ளம் உயிர் என்­ப­வற்றின் கேந்­திர ஸ்தானங்­க­ளோடு இப்­போது பொருந்திப் பார்ப்போம்.

அவ்­விதம் பார்க்­கும்­போது மூன்­றா­மிடம் உயிர்த்­தொ­டர்பு கொண்­டது என்­ப­தையும் ஏழா­மிடம் உட­லோடு உள்­ளத்­தொ­டர்பும் கொண்­டது என்­ப­தையும் நாம் அறி­யலாம். இதன்­மூலம் காமம் என்னும் இன்­ப­மா­னது உயிர், உள்ளம், உடல் என்ற மூன்­றாலும் அனு­ப­விக்கக் கூடி­ய­தென்­பது நமக்கு விளங்கும்.

இவற்றுள் மூன்­றா­மி­டத்தால் கணித்­த­றி­யப்­படும் காம­வாழ்வு அல்­லது இன்­ப­வாழ்வு உயிர் அல்­லது ஆன்ம இன்­பத்தின் அளவைக் காட்­டு­வ­தாகும். ஏழா­மி­டத்தால் கணித்­த­றி­யப்­படும் காமத்தின் தன்­மை­யா­னது உடல் தொடர்­பாக அமை­யக்­கூ­டிய இன்­பத்தின் அளவைக் குறிப்­ப­தாகும். 11ஆமி­டத்தால் கணித்­த­றி­யப்­படும் காமத்தின் தன்­மை­யா­னது, உள்­ளத்தின் தொடர்­பாக அமை­யக்­கூ­டிய இன்­பத்தின் போக்கைத் தெரி­விப்­ப­தாகும். இந்த மூன்­றி­டமும் சாத­க­மாக இருக்கும் ஒரு­வரின் தாம்­பத்­திய வாழ்வு உடல், உள்ளம் ,ஆன்மா ஆகிய மூன்று நிலை­க­ளிலும் நிறை­வான இன்­பத்தைத் தரு­வ­தா­யி­ருக்கும்.
ஆணா­யினும் சரி, பெண்­ணா­யினும் சரி அவரவரது வாழ்வில் தாம்பத்திய சுகம் செழிப்பாகவும் இன்பகரமாகவும் இருக்க வேண்டுமானால் அவரவர் சாதகத்திலுள்ள 3, 7, 11 ஆகிய இடங்கள் செழுமையாக அமைந்திருக்கின்றனவா என்று அவசியம் பார்க்க வேண்டும்.

மூன்­றா­மி­டத்தின் அமைப்பைப் பொறு த்தே ஒரு­வ­ரது தாம்­பத்­திய வாழ்வில் ஆன்ம திருப்­தியும் ஏழா­மி­டத்தின் அமைப்­பை­யொட்­டியே கணவன் அல்­லது மனை­வி­யோடு அனு­ப­விக்கும் உட­லு­றவின் திருப்­தியும் 11 ஆமி­டத்தின் அமைப்பைப் பொறுத்தே அவ­ரது தாம்­பத்­திய வாழ்வில் திருப்­தியும் போக பாக்­கி­யங்­களால் மன­நி­றைவும் ஏற்­படும் என்­பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த இடங்களில் ஒன்று நன்றாக அமைந்து மற்றது நன்றாக அமையாவிட்டாலும் அந்த நிலையில் திருப்தியும் மற்றநிலைகளில் அதிருப்தியும் நிலவும் என்று கூறலாம். இது விடயத்தில் பலரிடமும் நாம் ஆய்ந்தறிந்த அனுபவம் இதற்குச் சான்றாகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல