பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ள எயார்லாண்டர் 10 என அழைக்கப்படும் உலகின் மிகவும் பெரிய வானூர்தியானது எதிர்வரும் வாரங்களில் தனது கன்னிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் அந்த வானூர்தி தொடர்பான புகைப்படங்களை பிரித்தானிய ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளன.
100 யார் நீளமும் 85 அடி உயரமும் கொண்ட இந்த வானூர்தி தரையிலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கும் வல்லமையைக் கொண்டதாகும்.
ஒரேசமயத்தில் 48 பயணிகள் பயணிக்கக்கூடிய வசதியைக் கொண்ட இந்த வானூர்தி, ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இந்த தூர இருந்து இயக்கும் செயன்முறைமை மூலம் தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேலாக பறக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகும். அதேசமயம் ஆட்களுடன் 5 நாட்களுக்கு தொடர்ந்து பயணிக்கக் கூடியதாகும்.
இந்த வானூர்தி ஹீலியம் வாயு மூலம் செயற்படுகிறது. அதன் வேகம் மணிக்கு 100 மைலாகும்.
அத்துடன் இந்த வானூர்தியை நிலம், நீர் மற்றும் துருவ பனிப் பிராந்தியம் உள்ளடங்கலாக தட்டையான மேற்பரப்பையுடைய எந்தப் பிராந்தியத்திலும் தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக