வெள்ளி, 11 மார்ச், 2016

2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனா­தி­பதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??

விடுதலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரி­ழப்­ப­தற்கு முன்­ப­தா­கவே யுத்தம் முடி­ வ­டைந்­து­விட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அறி­வித்­தி­ருந்தார். ஆனால் போர் முடிந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திக­தி­யன்றும் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரு­ட­னேயே இருந்தார் என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவத் தளபதியு­மான பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.



யுத்­தத்தை வெற்றி கொண்ட பெரு­மையை தாம் அடைந்து கொள்­வ­தற்­காக திட்­ட­மிட்டு என்னை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­னார்கள். நான் நாடு­தி­ரும்­பி­ய­வுடன் என்னை அல­ரி­மா­ளி­கைக்கு அழைத்து முப்­ப­டை­களின் தள­பதி என்ற பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறும் அழுத்­தத்­துடன் தெரி­வித்­தனர் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்­சேகா குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் வெளி­நா­டொன்­றி­லி­ருந்து நாடு திரும்­பிய மஹிந்த ராஜ­பக் ஷ யுத்த வெற்­றியை தன்­வ­சப்­ப­டுத்தும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்­த­மிட்டார். அத்­துடன் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் யுத்த வெற்­றியை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொள்ளும் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தார்.

1990 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­லி­ருந்து வில­கி­யவர் எவ்­வாறு யுத்த வெற்றிக் கீரி­டத்­திற்கு உரிமைக் கோர முடியும் எனவும் சரத்­பொன்­சேகா கேள்­வி­யெ­ழுப்­பினார்.

வௌ்ளைக் கொடி விவ­காரம் தொடர்பில் உண்­மையைக் கண்­ட­றிய கட்­டாயம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். சட்­டத்­திட்­டங்­களைப் பின்­பற்­றியே யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம். ஆனால் சட்­டங்­களை மீறி­ய­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும். போர்க்­குற்ற விசா­ர­ணையில் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் மற்றும் ஆலோ­ச­கர்கள் ஈடு­பட வேண்­டி­யது அவ­சியம் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்­சேகா குறிப்­பிட்டார்.

விசா­ர­ணை­களில் சர்­வ­தே­சத்தின் பங்­கு­பற்­றல்கள் தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. வெ ளிநாட்­ட­வர்கள் விசா­ர­ணை­களில் பங்­கேற்­ப­தா­னது விசா­ர­ணையின் நம்­பிக்­கையை அதி­க­ரிக்கச் செய்யும் எனவும் சரத்­பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற உற்­பத்தி (விசேட ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் கீழ் கட்­ட­ளைகள் அங்­கீ­க­ரித்­துக்­கொள்­வ­தற்­கான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் பீல்ட் மார்ஷல் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

சரத் பொன்­சேகா தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

இந்த நாட்டு மக்கள் கடந்த காலத்தில் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்­தார்கள். பார­தூ­ர­மான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. பல இடர்­பா­டு­க­ளுக்குள் பய­ணிக்க வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது. நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலால் வரி­யினால் நாட்­டிற்கு வரு­மானம் கிடைப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

கலால் வரி­யினால் வரு­மானம் கிடைப்­பதை நாம் பெரு­மை­யாகக் கொள்ள முடி­யாது. அதனால் மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாது. காரணம் எமது நாட்டில் மது­பான பாவ­னை­யா­ளர்கள் காணப்­ப­டு­கின்­றனர். மது­பா­னங்கள் ஊடா­கவே அதி­க­ள­வான கலால் வரி வரு­மானம் கிடைக்­கின்­றது ஆகவே அதனைக் கருத்­திற்­கொள்ள வேண்டும்.
மேற்­கு­லக நாடு­களை முன்­னு­தா­ர­ண­மாகக் காட்­டு­வ­தற்கு அதி­ருப்­தி­களைத் தெரி­விக்கும் உறுப்­பி­னர்கள் ஒன்றைப் புரிந்து கொள்­ள­வேண்டும். அந்த நாடு­களில் எவரும் குடித்­து­விட்டு வீதி­களில் விழுந்து கிடப்­பது கிடை­யாது. அங்கு சட்டம், ஒழுங்கு காணப்­ப­டு­கின்­றது.

அதனை முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்ள வேண்டும். கடந்­த­கா­லங்­களில் எதனோல் கொள்­கலன் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்டு வரப்­பட்­டமை கண்­ட­றி­யப்­பட்­டன. இதன் ஊடாக சட்­ட­வி­ரோ­த­மான மது உற்­பத்தி நட­வ­டிக்­கைகள் மேற்கொள்­ளப்­ப­டு­வ­தையே இலக்­காகக் கொண்­டி­ருந்­தார்கள். ஆகவே சட்ட விரோத மது­பான உற்­பத்தி ஒழிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை இத்­த­ரு­ணத்தில் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

முறை­யற்ற வகையில் பதவி வகிக்­க­வில்லை

எனது பெற்­றோர்கள் ஆசி­ரி­யர்கள். நான் இரா­ணு­வத்தில் இணைந்து கொண்டேன். அதில் பெரும் பத­வி­களை வகிக்க வேண்­டு­மென நான் இலக்­கு­களை கொண்­டி­ருக்­க­வில்லை. எனது பணி­களை சரி­யான முறை­யாக முன்­னெ­டுக்க வேண்டுமென்பதையே இலக்­காக கொண்­டி­ருந்தேன்.

அதற்­க­மைய இரா­ணு­வத்­தி­னரின் நற்­பெ­யரை பாது­காத்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டி­ருந்தேன். அவ்­வா­றான நிலையில் அமெ­ரிக்கா போன்ற நாடு­களில் சுக­போக வாழ்க்­கையை வாழ்ந்­த­வர்கள் யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் இரா­ணு­வத்தை முறை­யாக நடத்­த­வில்­லை­யென என்­மீது குற்றம் சாட்­டு­கின்­றார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்புச் செய­லாளர் ஆகியோர் நான் நேர்­மை­யாக முறை­யாக பதவி நிய­ம­னத்தைப் பெற்­றி­ருக்­க­வில்­லை­யெனக் கூறி­யுள்­ளார்கள்.

எனது ஓய்வு வய­தெல்­லையை அடைந்­த­போது உரிய வர்த்­த­மானி அறி­வித்தலை வெளி­யிட்டு என்னை இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக நிய­மித்­த­தோடு ஓய்வு பெறும் வய­தெல்­லையும் 60 வரு­டங்­க­ளாக மாற்­றப்­பட்­டது. இதுதான் உண்மை நிலை­யாகும். ஆனால் ராஜ­ப­க்ஷக்­களின் அவ­தூறு பிர­சா­ரத்தின் கார­ண­மாக மக்கள் திசை திருப்­பப்­பட்­டார்கள்.

நாட்டுத் தலை­வர்கள் கடந்த காலத்தில் எமது ஜாத­கத்தை இர­க­சி­ய­மா­கப்­பெற்று ஜோதி­டர்­க­ளிடம் காணப்­பிப்­பார்கள். எமது எதிர்­காலம் எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதை அறிந்து கொள்­வார்கள்.

அதனை வைத்துக் கொண்டே தமது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வார்கள். என்னைப் பொறுத்­த­வ­ரையில் வெளி­நா­டு­களின் தூது­வ­ராக, பாது­காப்பு செய­லா­ள­ராக பத­வி­வ­கிக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

இரா­ணு­வத்தின் உயர்­ப­த­வியைக் கூட எண்­ணி­யி­ருக்­க­வில்லை. எனது கட­மையை செவ்­வனே செய்தேன். தாயைப்போல் தாய்­நாட்­டையும் நேசித்தேன். காலம் நிறை­வ­டைந்­த­வுடன் ஓய்­வு­பெற்றுக் கொள்­வதே நோக்­க­மா­கவும் இருந்­தது. ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்­களை கடந்த ஆட்­சி­யா­ளர்கள் வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

நெருக்­க­டி­யான நிலை

யுத்தம் உக்­கி­ர­ம­டைந்­த­போது இரா­ணு­வத்­த­ள­பா­டங்கள் சீனா­வி­லி­ருந்து கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன. அதற்­கான நிதி வழங்­கப்­ப­டு­வ­தாகக் கூறி கடன் அடிப்­ப­டை­யி­லேயே அவை­பெ­றப்­பட்­டன. எனினும் பல­மோ­ச­டிகள் யுத்­தத்தைக் காரணம் காட்டி இடம்­பெற்­றுள்­ளன. யுத்­தத்­திற்­காக 82 பில்­லியன் ரூபாவே செல­வி­டப்­பட்­டுள்­ளது.

130 மில்லி மீற்றர் ரவை­களை வாங்­கு­வ­தற்கு 850 டொலர் செலுத்­தப்­பட்­டது. ஆனால் அதில் 400 டொலர் மோசடி இடம் பெற்­றுள்­ளது. நாற்­பது ரவை­களைக் கொண்ட பல்­குழல் பீரங்கி இல்­லாத நிலையில் யுத்­தத்தை ஆரம்­பித்தோம். 2008 ஆம் ஆண்டு ஒரே­யொரு பல்­குழல் பீரங்­கி­யுடன் யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம். பாகிஸ்தான் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யுடன் நானே பேச்­சுக்­களை நடத்தி பல்­குழல் பீரங்­கி­களை 60 பில்­லி­யன்­களைச் செலுத்தி பெற்­றுக்­கொண்டு யுத்­தத்தை முன்னெடுத்திருந்தோம்.

இவ்­வாறு பல நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரும் சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­து­வரும் யுத்­தத்தை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். ஆனால் அந்த யுத்­தத்தை காரணம் காட்டி மோச­டி­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

தேர்தல் மோசடி

2005, 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களில் மோச­டிகள் இடம் பெற்­றுள்­ளன. குறிப்­பாக 2005 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு நிதி வழங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தோற்­க­டிப்­ப­தற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்­பட்­டி­ருந்தார்.

பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­பதை நிறுத்­து­வ­தற்கு 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு வழங்­கி­ய­தாகக் கூறினார். குறித்த நிதி­யா­னது விடு­த­லைப்­பு­லி­களின் கடற்­ப­டைக்கு கப்­பல்­களை மலே­சி­யா­வி­லி­ருந்து கொள்­வ­னவு செய்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

இதன் போது மலை­ய­கத்தைச் சேர்ந்த அர­சியல் தலைவர் ஒருவர் எம்­முடன் இருந்தார். அவரைப் பார்த்து உங்­க­ளு­டைய மக்­க­ளையும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்க வேண்­டா­மென பிர­பா­கரன் கோரி­யுள்­ள­தாக பஷில் ராஜபக் ஷ கூறினார். இவ்­வாறு 2005 ஆம் ஆண்டு புலி­க­ளுக்கு நிதி வழங்­கியே தேர்­தலில் வெற்றி பெற்­றனர்.

அதே­போன்று 2010 ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மாத்­தளை, கம்­பளை, கண்டி உட்­பட பல தேர்தல் வாக்­கெண்னும் நிலை­யங்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. வாக்­கெண்ணும் சீட்­டுகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

அப்­போ­தைய தேர்­தல்கள் ஆணை­யாளர் இது தொடர்­பாக உண்­மையைக் கூற முடி­யாது அச்­சத்­துடன் தற்­போது வரையில் உள்ளார். 2005, 2010 தேர்­தலில் மோச­டி­களை செய்தே வெற்­றி­பெற்­றார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் அவ்­வா­றான மோச­டி­களை மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்­தார்கள். சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் பிர­சன்னம் மக்­களின் வெறுப்பால் அதனை மேற்­கொள்ள முடி­யாது போனது.
மைத்­தி­ரிக்கும் திட்டம்

இந்த தேர்­தலில் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன தோல்­வி­ய­டைந்­தி­ருந்தால் அவரை பழி­தீர்க்கும் வகையில் சிறையில் அடைக்கும் திட்­டங்­க­ளையும் வகுத்­தி­ருந்­தார்கள். ஆனால் மக்கள் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. 65 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கி ராஜபக் ஷவின் குடும்ப ஆட்­சியை அகற்­றி­னார்கள்.

சர்­வ­தி­கா­ரத்­திற்கு முற்­றுப்­புள்­ளியை வைத்­தார்கள். மாத்­த­றையின் மந்­தி­ர­வா­தியை வைத்து ஏதே செய்­வ­தற்கும் முனைந்­தி­ருந்­தார்கள். அண்­மைக்­கா­ல­மாக எனது தொண்டை சரி­யில்லை. மந்­தி­ர­வா­தியின் செயற்­பா­டுகள் கார­ணமோ எனத் தெரி­யாது.

முறை­யற்ற குற்­றச்­சாட்­டு­களும் பழி­வாங்கும் தீர்ப்­பு­களும்

இவ்­வா­றிக்­கையில் 2010 ஆம் ஆண்டு தேர்தல் நிறை­வ­டைந்­ததும் என்னைக் கைது செய்­தார்கள். இரா­ணுவ நீதி­மன்­றத்தை அமைத்­தார்கள். இரா­ணுவ நீதி­மன்றம் அமைக்­கப்­படும் போது என்னை விடவும் உயர்ந்த பத­வி­களைக் கொண்ட அதி­கா­ரி­களே நிய­மிக்­கப்­பட வேண்டும். மாறாக எனது பத­வி­நி­லை­யிலும் குறைந்த அதி­கா­ரி­களே விசா­ர­ணை­யா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டார்கள்.

என்­மீது கேள்­விப்­பத்­திர முறை­கேடு தொடர்­பா­கவே வழக்கு தாக்கல் செய்­தார்கள். எனது மரு­மகன் மீது குற்றம் சாட்­டி­னார்கள். இரா­ணுவச் சட்­டத்தின் பிரிவு 35 இன் பிர­காரம் என்­மீது குற்றம் காணப்­பட்டால் என்னை பதவி நிலை நீக்க முடியும். ஆனால் எனது பதவி நிலை­களை பறித்­தார்கள். தனுக தில­க­ரட்­ணவின் மீது முறை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து பிடி­யாணை பிறப்­பித்­தார்கள்.

அது­மட்­டு­மன்றி எனக்கு எதிர்த்­த­ரப்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மாமனார் என்ற வகையில் அவரின் செயற்­பா­டுகள் அனைத்­தையும் அறிந்­தி­ருக்க வேண்­டு­மென வாதிட்­டதை ஏற்று தீர்ப்­ப­ளித்­தார்கள். அச்­சட்­டத்­த­ர­ணியும் உயர்­நீ­தி­மன்ற சட்­டத்­த­ர­ணி­யாக பத­வி­யு­யர்வு பெற்றார். இவ்­வா­றுதான் நீதித்­து­றையை அவர்கள் கையாண்­டார்கள். இதற்­காக வெட்­கப்­பட வேண்டும்.

அர­சியல் பழி­வாங்கல்

அண்­மையில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட பஷில் ராஜபக் ஷ சரத்­பொன்­சேகா மட்­டுமே அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு உள்­ளா­ன­தாக ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்றார்.

நான் மட்­டு­மல்ல இரா­ணு­வத்தில் அர்ப்­ப­ணிப்பு மிக்க சேவையை வழங்­கிய 35 சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை வீட்­டுக்கு வலிந்து அனுப்­பி­னார்கள். தலா பத்து ஜென­ரல்­களும் பிரி­கே­டி­யர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அவர்­களில் இருவர் தொழில்­வாய்ப்­புக்­காக பல­தர இடங்­க­ளுக்கு சென்­றார்கள். தற்­போது மார­டைப்பால் உயி­ரி­ழந்­து­விட்­டனர். இவ்­வாறு திட்­ட­மிட்ட பழி­வாங்­கல்கள் தொடர்ந்­தி­ருந்­தன.

கௌர­வத்தை பெற முழு­மை­யான முயற்சி

யுத்த வெற்­றியை முழு­மை­யாகத் தாமே பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்­தார்கள். இரு வரு­டங்­களும் ஒன்­பது மாதங்­க­ளு­மாக நான் தலை­மை­யேற்று வழி­ந­டத்­திய யுத்­தத்தை இறுதி மாதத்தில் என்னை மீள அழைத்­தார்கள்.

24 மணி நேரமும் நான் பணி­யாற்­று­வதால் சிர­மங்­களை எதிர்­கொள்­வ­தாக கூறிய கோத்­த­பாய ராஜபக் ஷ வன்­னியில் கட­மை­யாற்­றிய இரண்டாம் நிலை அதி­கா­ரி­யிடம் பொறுப்­பாக ஒப்­ப­டைத்­தி­ருந்தார்.

அதற்கு அடுத்த வாரத்தில் யுத்த தள­பா­டங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சீனா­வுக்கு நான் சென்­றி­ருந்தேன். விடு­த­லைப்­பு­லிகள் கட­லுக்கும் களப்­புக்கும் இடையில் சிக்க வைக்­கப்­பட்­டி­ருந்த அத்­த­ரு­ணத்தில் மேஜர் பிரி­கே­டியர் யுத்­தத்தை வழி நடத்த வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. சாதா­ரண சார்­ஜ­னிடம் ஒரு­வ­ரா­லேயே யுத்­தத்தை முன்­னெ­டுத்­தி­ருக்க முடியும்.

மே 18 ஆம் திகதி வெளி­நா­டொன்­றி­லி­ருந்து வருகை தந்து மண்ணை மஹிந்த ராஜபக் ஷ முத்­த­மிட்­ட­போது பிர­பா­கரன் இறந்­தி­ருக்­க­வில்லை. யுத்தம் நிறை­வ­டைந்த திகதி கூட ராஜபக் ஷவி­ன­ருக்கு தெரி­யாது. இரண்டு வரு­டங்கள் ஒன்­பது மாதங்­க­ளாக சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­வாக முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட்டு யுத்­தத்தை இறுதி தரு­ணத்தில் சிக்­க­லுக்குள் உள்­ளாகும் நிலைமை ஏற்­ப­டுத்­தி­விட்­டார்கள்.

மோச­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு யுத்தக் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக விமர்­ச­னங்கள் எழு­வ­தற்­கான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டார்கள். இதனால் தான் வெள்ளைக் கொடி சர்ச்­சையும் எழுந்­துள்­ளது. இறுதி யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் என்ன நடந்­தது என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும். வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் நடந்­த­தென்­பது மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பக்­கச்­சார்­பற்ற நியா­ய­மான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் விசா­ர­ணையை முன்­னெ­டுத்து இரா­ணு­வத்தின் மீது படிந்­துள்ள கறை போக்­கப்­பட வேண்டும். இவ்­வி­ட­யத்­தி­லி­ருந்து விலகிச் செல்ல முடி­யாது.

குற்­றச்­சாட்­டுகள் எழு­வ­தற்கு காரணம்

1991 ஆம் ஆண்டு ரஞ்சன் விஜே­வர்­த­னவின் கால்­களில் விழுந்து உயிர்த் தஞ்சம் கோரி அமெ­ரிக்­கா­வுக்கு கோத்­த­பாய சென்­றி­ருந்தார். அங்கு சென்று கராஜில் தான் பணி­பு­ரிந்தார். இரும்பு ஓட்­டு­ன­ராக செயற்­பட்டார். அவ்­வாறு இருந்த சமை­யத்தில் அவ­ரு­டைய துவிச்­சக்­கர வண்­டியை ஏணி­யுடன் கட்டி வைத்­தி­ருந்­த­போது இரண்­டையும் திருடிச் சென்­றதால் கஷ்­டங்­க­ளுக்கு முகங் கொடுத்­தாக கூறி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு தப்பிச் சென்­ற­வர்கள் இரண்­டறை இலட்சம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கட்­ட­ளை­களை வழங்க முடி­யுமா? தொழில்­வான்மை இல்­லாத இவர்கள் எவ்­வாறு இரா­ணு­வத்­தி­னரை வழி நடத்த முடியும். 35 வரு­டங்­க­ளாக இரா­ணு­வத்தில் சேவையாற்­றியே கட்­டளை இடும் தகு­தியை நான் பெற்­றி­ருந்தேன்.
இவ்­வா­றான நிலையில் இருந்­த­வரே யுத்த வெற்­றியை தன­தாக்க வேண்டும் என கங்­கணம் கட்டி செயற்­பட்டார். கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிறந்த சத்­திர சிகிச்சை நிபுணர் இருக்­கின்றார். அவரின் சத்­திர சிகிச்­சைகள் வெற்­றி­ய­ளிக்கும் பட்சத்தில் சுகா­தார அமைச்­சரை பாராட்ட முடி­யாது.

அர்­ஜுன ரண­துங்க உலக கிண்­ணத்தை வெற்றி கொண்டு வந்­த­போது ஜனா­தி­ப­தியை கௌர­விக்க முடி­யாது. அண்­மையில் இலங்கை அணி தோற்­ற­போது தயா­சி­றியை குற்­றஞ்­சாட்ட முடி­யாது. களத்தில் இருந்து பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்குக் கௌரவம் வழங்­கப்­பட வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக சர்­வா­தி­கா­ரத்­துடன் தாம் கௌர­வத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக இருந்­தார்கள். அதனைப் பயன்­ப­டுத்தி இந்த நாட்டின் மன்னர் ஆட்­சியை நிலை நிறுத்தி குடும்­பா­திக்­கத்தை வலுப்­ப­டுத்த முனைந்தார்கள்.

ஆனால் அனைத்­துமே தலை­கீ­ழாக மாறி­யுள்­ளன. ஆட்­சியில் பலமும் அதி­கா­ரமும் தொடர்ந்து இருக்­கு­மென கரு­தி­னார்கள். இன்­பமும் துன்­பமும் வண்­டியின் சக்­க­ரங்கள் என்­பதை மறந்­து­விட்­டார்கள். மக்கள் பீதி­யுடன் வாழ முடி­யாது என்­பதை உணர்ந்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். தற்­போது அர­சியல் அநா­தை­க­ளாகி விட்­டனர்.

கொள்ளை

எமது நாட்டின் பொரு­ளா­தாரம் இன்று பாரிய நெருக்­க­டியில் உள்­ளது. இதற்கு கடந்த ஆட்­சி­யா­ளர்­களே கார­ண­மாக உள்­ளார்கள். சீனா­வி­ட­மி­ருந்து எமது பொரு­ளா­தா­ரத்தை முன்­னெ­டுப்­ப­தாக கூறி­ய­போதும் அதனை சூறை­யாடி உள்­ளனர்.

ஒரு டொலர கள­வா­டி­யி­ருந்­தாலும் வயிற்றை வெட்டிக் கொள்­வ­தாக மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். ஒரு டொலர் அல்ல 90 மில்­லியன் ரூபாவை கள­வா­டி­யுள்­ளார்கள்.

ரடா நிறு­வ­னத்தின் ஊடாக எமில்­காந்­த­னுக்கு வழங்­கி­யுள்­ளார்கள். அதற்­கான சாட்­சி­களை அவர் விரைவில் முன்­வைப்பார் . பீகொக் மாளி­கையை வேறொ­ரு­வரின் பெயரில் பதிவு செய்­துள்­ளார்கள்.

சுனாமி நிதியில் மோச­டி­களை மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்­டி­ருந்தார். அவரை விடு­த­லை­ய­ளித்­தது உத­விக்­கென எனது தேர்தல் மேடையில் சரத் என் சில்வா பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இவற்றை விட விகா­ரை­களின் கப்பம் பெற்­றுள்­ளார்கள். பல பில்­லி­யன்­களை வங்­கி­களில் வைப்­பி­லிட்­டுள்­ளார்கள். சில் ஆடை­களை 50 ரூபா­விற்கு இறக்­கு­மதி செய்து 250 ரூபா­வாக விலை பதித்­துள்­ளார்கள்.

இவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்கொண்­ட­வர்கள் வயிற்றை அல்­லது கழுத்தை அறுத்­துக்­கொள்ள வேண்டும். ஆனால் அவை நிரூ­பிக்­கப்­பட்டு தண்­டனை வழங்­கு­வ­தற்கு காத்­தி­ருப்­பது அவ­சியம்.இவற்றை விட 137 கிலோ கிராம் தங்கம் இறுதி யுத்­தத்தில் பெறப்­பட்­ட­தாக கூறப்­பட்ட பதி­வுகள் உள்­ளன.

அது தவ­றா­னது. இறுதி யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் 220 கிலோ கிராம் தங்­கத்தை நான் அனுப்­பி­யி­ருந்தேன். அதன்­போது உரி­மை­யா­ளர்­களின் பெயரும் காணப்­பட்­டது. இரு வாரங்­களின் பின்னர் நான் அந்த களத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருந்த நிலையில் 400 முதல் 500 வரை­யி­லான கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டிருந்தது.

கோரிக்கை

தேசத்தை அழிக்க முனைந்தவர்கள் இன்று ஆட்சியதிகாரமற்று நெருக்கடிகளுடன் இருக்கின்றார்கள். தம்மை பழிவாங்குவதாக கூறுகின்றார்கள். அன்று நான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டேன். எனது மனைவி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனது பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மருமகன் 5 வருடங்கள் மறைந்து வாழ்ந்தார். இவை பழிவாங்கல்கள். தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைதுகள் இடம்பெறுகின்றபோது பிள்ளைகளைத் தண்டிக்காதீர்கள் தன்னை கைது செய்யுங்கள் என கண்ணீர் வடிக்கின்றனர்.

சாட்சியளிப்பதற்கு நீதிபதிகளின் வாயில்கள் ஊடாக வருகை தந்தவர்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் தனித்து நின்று வழக்குகளுக்காக காத்திருக்கின்றார்கள். யாரும் பழிவாங்கப்பட வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. உண்மைகள் கண்டறியப்பட்ட வேண்டும்.

லசந்த, தாஜுதீன், ரவிராஜ், எக்னெலிகொட ஆகியவர்களின் மரணங்கள் காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகங்களும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின்றன. அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாது எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டிருக்கமாட்டாது.

இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு நபருடனேயே தொடர்புபட்டுள்ளது. குழுவொன்றே மேற்கொண்டுள்ளது. லசந்தவின் விடயத்தில் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது தவறானது. புனையப்பட்டது. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வே்ணடும்.

தற்போது மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்துக் கொண்டு கோத்தபய ராஜபக் ஷவின் தலைமையில் அரசியல் கட்சியை ஏற்படுத்தி ஆட்சியை அமைக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

ஆனால் அது இயலாத காரியம். இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு முயலாதீர்கள். நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்றார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல