பேஸ்புக்கில் ஒருவரின் தகவல் பதிவைப் படித்தவுடன், அது தனக்குப் பிடித்திருக்கிறது (Like) என்று கருத்து தெரிவிக்கலாம். மிகவும் பிடித்திருந்தால், அதே பதிவைத் தன் பக்கத்தில் பதிந்து வெளியிடலாம். அங்கே, முதலில் எழுதியவரின் பெயர் இடப்பட்டு, “அவரின் பதிவு இங்கே பகிர்ந்து தரப்படுகிறது” என்று காட்டப்படும். சென்ற வாரம், பேஸ்புக் இந்த Like கருத்தினைத் தெரிவிப்பதில், மேலும் சில வசதிகளையும், உணர்வினைக் காட்டும் ஐகான்களையும் தந்துள்ளது.
பலர், தங்கள் நண்பர்கள் மரணம், பேரிழப்பு குறித்து எழுதும்போதும் அவற்றை Like எனக் குறிப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். தான் படித்திருப்பதனை, எழுதிப் பதிந்த தன் நண்பருக்குக் காட்டும் வேறு வழி இல்லாமையால், Like எனப் பலரும் கிளிக் செய்திடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.
இது பலருக்கு எரிச்சலையும் மன வருத்தத்தினையும் தருவதாக இருந்தது. மரணச் செய்தியைப் போய் ஒருவர் தனக்குப் பிடித்திருப்பதாக, தன் நோக்கினைப் பதிந்துள்ளாரே என்று அங்கலாய்த்துக் கொள்வது மட்டுமின்றி, அதனையும் அதே பதிவில் தெரிவித்து வந்தனர்.
இந்த குழப்பத்தினைப் போக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனம்
Like, Love, Haha, Wow, Sad, Angry
என்ற வரிசையில், ஆறு ஐகான்களைக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் வருத்தம் மற்றும் கோபத்தினை இறுதியாக உள்ள ஐகான்களில் கிளிக் செய்வதன் மூலம் காட்டமுடிகிறது. ஏற்கனவே உள்ள Like இடத்தில், நம் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்தால், இந்த ஆறு ஐகான்களும் காட்டப்படுகின்றன. பின்னர், இதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக