வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நெய் மீன் வறுவல் - சிக்கன் கடாய் - சிக்கன் வடை - கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

 நெய் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2ஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50கிராம்
எலுமிச்சை சாறு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

1.மீனை நன்றாக சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

2பேனில் தேவைக்கு எண்ணெய் ஊற்றி மீனை பொறிக்கவும்..

3.இருபுறமும் திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும்.

4.பிறகு அதே எண்ணெயில் பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை பொறித்து எடுக்கவும்.

5.இதனை பொறித்த மீன் துண்டுகள் மீது தூவி சூடாக பரிமாறவும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சிக்கன் கடாய்

தேவையான பொருள்கள்

சிக்கன் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 7
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 10 பல்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
வெங்காயம் – 2
சாம்பார் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

செய்முறை-1

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவை இரண்டையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

செய்முறை-2

பின்பு தக்காளியையும் போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி போட்டு கிளற வேண்டும். அதன் பிறகு சிக்கனையும் சேர்த்து சுருள வேக விட வேண்டும். சிக்கன் வெந்ததும் சாம்பார் மிளகாய்த்தூள், வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும். சிக்கன் கடாய் ரெடி!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சிக்கன் வடை

சிக்கன் – கால் கிலோ
முட்டை – ஒன்று
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 6
இஞ்சி – சிறியதுண்டு
சிறிய வெங்காயம் – 10 பல்
தேங்காய் துருவல் – 1 1/2 கப்
மஞ்ச்ள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
கறி மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி

எப்படி செய்வது?

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியதாக நறுக்கவும்.

இஞ்சி, சிறிய வெங்காயம் ,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன், நறுக்கின வெங்காயம் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றவும்.

அதனுடன் நறுக்கின கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள தேங்காய்ப்பூவையும் சேர்க்கவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக மாவை எடுத்து, வடைகளாக தட்டிப் போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும்.

தாச்சியின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு 4 அல்லது 5 வடைகள் தட்டிப் போடவும்.

சுமார் 3 நிமிடங்கள் கழித்து வடைகள் வெந்ததும் எடுத்து விடவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து இதனைச் செய்யவும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

2.பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

3.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

4.பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும். பின் அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

5.அடுத்து அதில் குக்கரில் உள்ள வேக வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் தனியாக பிரியும் போது அதனை இறக்கி பரிமாறினால், கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ரெடி!!!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல