ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா? எனக் கேட்டுள்ளார். இவருக்கான பதிலை அனைவரும் படிக்கும் வகையில் டிப்ஸாக இங்கு தருகிறேன்.
இவர் விரும்பும் அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள Find and Replace டூல் மிக உதவியாக இருக்கும். கீழே தந்துள்ளபடி செயல்பட வேண்டும்.
1. முதலில் Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace பாக்ஸில், Replace டேப் அழுத்தப்பட்டு திறக்கப்படும் வகையில் காட்டப்படும்.
2. தொடர்ந்து More பட்டன் இருந்தால், அதனை அழுத்தவும்.
3. இப்போது, கர்சர், Find What என்ற காலியான பெட்டியில், துடித்துக் கொண்டிருக்கும்.
4. தொடர்ந்து No Formatting என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் அதில் Highlight என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இப்போது "Highlight" என்ற சொல், Find What என்ற பெட்டியில் காட்டப்படும்.
7. தொடர்ந்து Replace With என்ற பாக்ஸில் கிளிக் செய்திடவும். அந்த பெட்டி காலியாக இருப்பதனை உறுதி செய்திடவும்.
8. அடுத்து Format கிளிக் செய்து, Highlight என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது "Highlight" என்ற சொல், Replace With பாக்ஸில் கீழாக இருக்கும்.
9. Format பட்டன் கிளிக் செய்து, Highlight என்பதை இரண்டாவதாகத் தேர்ந்தெடுக்கவும். இப்போது "Highlight" என்ற சொல் "Not Highlight" என மாறியிருக்கும்.
10. மீண்டும் Format பட்டன் அழுத்தி, தொடர்ந்து Font என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
11. வேர்ட் Replace Font டயலாக் பாக்ஸில், Font என்பதைக் காட்டும்.
12. இந்த டயலாக் பாக்ஸில், கண்ட்ரோல் கீகளை அழுத்தி, எழுத்தின் அளவை நிர்ணயிக்கவும். அதே போல அடிக்கோடிட 'Underline' என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
13. ஓகே கிளிக் செய்து Replace Font டயலாக் பாக்ஸை மூடவும்.
14. அடுத்து Replace All என்பதில் கிளிக் செய்திடவும்.
மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகளில், உங்கள் வேர்ட் தொகுப்பினைப் பொறுத்து, சில மாறுதலான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம்.
சொற்களுக்கிடையே அடிக்கோடு: வேர்ட் தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களில் அடிக்கோடு இடுகையில், சொற்களுக்கு இடையேயும் கோடி அமைந்துவிடும். சிலர், சொற்களுக்கு இடையேயான இடைவெளிகளில் இல்லாமல், சொற்களுக்கு இடையே மட்டும் கோடினை அமைக்க விரும்புவார்கள். இதற்கான வழி என்ன தெரியுமா? அடிக்கோடு இட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் Ctrl + Shift + W என்ற கீகளை அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக