வானத்தில் பறந்துப் பறந்து ஓய்ந்துப்போன விமானங்களை மெக்சிகோ நாட்டில் துவம்சம் செய்யும் ராட்சத கிரஷர் தொடர்பான வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்த்து, ரசித்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சில ஆண்டுகள்வரை சாலையில் ஓடி பழையனவாகிவிட்ட விலையுயர்ந்த கார்களை நசுக்கி, மறுசுழற்சி முறையில் மீண்டும் உலோகமாக மாற்றுவதற்கு சில தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
ஆனால், வானத்தில் ஒய்யாரமாக பறந்து ஓய்வுபெறும் விமானங்கள் என்னவாகின்றன? என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த வயோதிக விமானங்கள் மெக்சிகோ நாட்டில் உள்ள ராஸ்வெல்ஸ் நகரில் ஒரு ‘மெட்டல் கிரஷ்ஷர்’ என்னும் அரக்கனின் வாயில் சிக்கி சமாதியாகும் காட்சிகள் வீடியோ வடிவில் காணக் கிடைக்கிறது.
ஹைட்ராலிக் முறையில் இயங்கும் தனது ராட்சத வாயால் மிக பிரமாண்டமாக தோன்றும் விமானங்களையும் சில நொடிகளில் இந்த அரக்கன் கடித்துக்குதறி, தவிடுப்பொடியாக்கி விடுகிறான். விமானத்தின் கழிப்பறைகளை தீப்பெட்டியைப்போல் தூக்கியெறிந்து இந்த ராட்சத கிரஷ்ஷர் செய்யும் அட்டூழியம் சிரிக்கவும், சிலிர்க்கவும் வைக்கிறது.
குறிப்பாக, உலகப்புகழ் பெற்ற ‘ராக்’ இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி ஒருகாலத்தில் பயன்படுத்திய சிகப்புநிற ‘747-ஜெட்’ விமானமும் இந்த அரக்கனின் வாயில் இருந்து தப்பவில்லையாம். சுமார் 20 லட்சம் பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ள அந்த ‘பிதாமகன்’ வீடியோவைக் காண..,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக