செவ்வாய், 17 மே, 2016

ஆண்ட்ராய்ட் போன் அழைப்புக்கான உங்களின் ரிங் டோன்

உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போனில், அழைப்பு வருகையில் ஒலித்திட பல வகை இசைக் கோப்புகள் தரப்பட்டிருக்கும். இவற்றை 'ரிங் டோன்' என அழைக்கிறோம். இவை பெரும்பாலும், மென்மையான ஓசையாக இருக்கும். மணி ஒலித்தல், காற்று வீசுதல், நீரோடை ஓடுதல் போன்றவற்றின் ஒலியாக இருக்கும். சிலர், நண்பர்களிடமிருந்து வித்தியாசமான உரையாடல், பாட்டு, ஓசை போன்றவற்றைத் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ரிங் டோனாக அமைத்திருப்பார்கள். சிலர் திரைப்பட பாடல் வரிகளை அமைத்திருப்பார்கள். இவற்றைக் கேட்கும் போது, நமக்குப் பிடித்த பாடல் வரிகளை நாம் அமைத்து ரிங் டோனாகப் பயன்படுத்த முடியுமா? என்ற எண்ணம் தோன்றும். நிச்சயமாக அமைத்து செட் அப் செய்து இயக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.


நீங்கள் விரும்பும் பாடலிலிருந்து, மிகவும் ரசிக்கும் வரிகளை எப்படி அமைப்பது? அதற்கான எளிய வழியினைப் பார்க்கலாம். இதற்கென இணையத்தில் MP3 Cut என்று ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி: http://mp3cut.net. இசை வரிகளை வெட்டித் தர இணையத்தில் கிடைக்கும் ஓர் இலவச டூல் கொண்ட தளம் இது. உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து பாடலை இந்த தளத்திற்கு அனுப்பி, நீங்கள் விரும்பும் வரிகளை வெட்டி தனி கோப்பாகப் பெறலாம். உங்கள் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ஒன் ட்ரைவ், ட்ராப் பாக்ஸ் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றுடனும் இது இணைந்து செயலாற்றும், பன்முகத் திறன் கொண்ட செயலி இது.

இந்த தளத்தில் நுழைந்தவுடன்,

அதில் காட்டப்படும் “Open File” இணைப்பில் கிளிக் செய்திடவும்.

பின்னர், நீங்கள் எந்த பாடலிலிருந்து வரிகளை வெட்டி ரிங் டோனாகப் பயன்படுத்த எண்ணுகிறீர்களோ, அந்த பாடலின் எம்பி3 வகை கோப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

அதனை அப்லோட் செய்திடவும். அழகான அனிமேஷன் காட்சி காட்டப்பட்டு அந்தப் பாடல் கோப்பு தளத்திற்கு அனுப்பப்படும்.

அடுத்து, முதலில் உள்ள ஆடியோ ஒலிப்பதற்கான பட்டனை அழுத்தி பாடலை இயக்கவும்.

பாடல் ஒலிக்கத் தொடங்கும்.

அதன் நீண்ட கட்டத்தில், இரு முனைகளிலும் இரு ஸ்லைடர் மார்க்கர் இருப்பதைக் காணலாம்.

இடது புறம் உள்ளதை, நீங்கள் விரும்பும் வரியின் தொடக்கத்தில் வைக்கவும்.

பாடல் ஒலிக்கத் தொடங்கிய பின்னர், இடது புறம் உள்ளதை, நீங்கள் எந்த வரி வரை வேண்டுமோ அங்கு அமைக்கவும்.

இந்த பாடல் ரிங் டோன், தொடக்கத்தில் குறைந்த ஒலியில் தொடங்கி, பின் செல்லச் செல்ல ஒலி அதிகமாக அமைக்கப்பட வேண்டும் என விரும்பினால், இதில் இரு முனைகளிலும் உள்ள Fade in / Fade out ஸ்விட்ச்களை இயக்கிப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு குறியிட்ட பின்னர், Cut என்ற பொத்தானை அழுத்தினால், அடுத்த திரையில், Download என்ற பட்டன் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால், எந்த போல்டரில் அதனைத் தரவிறக்கம் செய்திட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இந்த கோப்பிற்கு நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெயரைக் கொடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்தால், வெட்டப்பட்ட பிரியமான வரிகள் கோப்பாக கிடைக்கும்.

மாறா நிலையில், இது எம்பி3 வடிவில் அமைக்கப்பட்ட கோப்பாக இருக்கும்.

ஐபோனில் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்றால், iphone ringtone என்பதை முதலில் தேர்வு செய்து, வெட்டி அனுப்ப வேண்டும்.

இவை தவிர, AMR, WAV மற்றும் AAC ஆகிய பார்மட்களிலும் பைல்களைப் பெறலாம்.

ஆண்ட்ராய்ட் போன்களில், எம்பி 3 பார்மட் தான் சிறப்பாக இயக்கப்படும் என்பதை இங்கு நினைவில் கொள்க.

இதனை எப்படி, ஆண்ட்ராய்ட் போனில் செட் செய்யலாம் என்று பார்க்கும் முன், பாடல் வரிகளை வெட்ட உதவும் இன்னொரு பிரபலமான செயலியை இயக்குவது குறித்து பார்க்கலாம்.

இந்த செயலியைப் பெரும்பாலானவர்கள், பயன்படுத்தாவிட்டாலும், அறிந்திருப்பார்கள். இதன் பெயர் Audacity. இது திறவூற்று வகைச் செயலி (Open Source) என்பதால், இலவசமாக, இணையத்திலிருந்து இறக்கி, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன் LAME என்கோடர் என்பதையும் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

இதனை http://lame.buanzo.org/#lamewindl என்ற தளத்திலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்து கொள்க.

எந்த பாடலிலிருந்து வரிகளை வெட்ட வேண்டுமோ, அந்த பாடல் கோப்பினைத் தயார் நிலையில் வைத்துக் கொள்க.

அடுத்து 'அடாசிட்டி' செயலியை இயக்குக.

அடுத்து, File >Open என்று சென்று, குறிப்பிட்ட பாடல் கோப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இதனைத் திறந்தவுடன், 'அடாசிட்டி', அந்த இசைக் கோப்பினை ஸ்கேன் செய்து, அதன் எடிட்டரில் திறக்கும்.

எந்த இடத்தில் நீங்கள் விரும்பும் வரிகள் உள்ளன என்று உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால், பாடல் முழுவதையும் இயக்கி கேட்கவும்.

கீழாக “Audio Position” என ஒன்று காட்டப்படும்.

இதன் மூலம், பாட்டில் எந்த இடத்தை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இதன் மூலம், நீங்கள் எங்கு தொடங்க வேண்டுமோ, அதனை உணர்ந்து செயல்பட முடியும்.

இது சற்று சிரமமாக இருப்பின், டூல் பாரில் உள்ள “Zoom In” என்ற டூலைப் பயன்படுத்தலாம்.

மிகச் சரியான இடத்தில் உங்கள் ரிங் டோன் தொடக்கத்தினைக் குறிக்க இது மிகவும் உதவும்.

பொதுவாக, ஒரு ரிங் டோன் 30 நொடிகள் இயங்கினால் சிறப்பாக இருக்கும். அல்லது அதைக் காட்டிலும் குறைவாக இருக்கலாம். குறைவான அளவில் இருந்தால், அது தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஒலிக்கும்.

நீங்கள் விரும்பும் வரிகளின் தொடக்கத்தினையும் முடிவினையும் குறித்துக் கொண்டால், பின்னர், மீண்டும் அந்தப் பகுதியை மட்டும் கேட்கவும். உங்கள் வரிகள் தேர்வு முடிந்த பின்னர், அதனைத் தனி கோப்பாக மாற்ற வேண்டும்.

File தேர்ந்தெடுத்து, பின் “Export Selection” பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

இனி, இந்த ரிங் டோன் கோப்பிற்குத் தனியாக ஒரு பெயர் கொடுக்கவும்.

பைல் பார்மட்டாக “MP3” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், “Save” என்பதில் கிளிக் செய்தால், ரிங் டோன் தனிக் கோப்பாக, நீங்கள் தேர்ந்தெடுத்த போல்டரில் சேவ் ஆகும்.

முடிந்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். ''அடாசிட்டி” செயலியை இனி மூடிவிடலாம்.

உங்களில் பலர் மனதில் இந்த கேள்வி ஓடலாம். ஏன், இதனை மொபைல் போனிலேயே தயாரிக்கும் வகையில் செயலிகள் இல்லையா? என எதிர்பார்க்கலாம். கிடைக்கின்றன. இதற்கென செயலிகள் உள்ளன. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பெறலாம்.

கிடைப்பவற்றில், எனக்குப் பிடித்தது https://play.google.com/store/apps/ details?id=com.herman.ringtone  என்ற முகவரியில் உள்ள Ringtone Maker என்னும் செயலி ஆகும்.

இதனை இயக்கினால், அது உங்கள் போனில் உள்ள எம்பி3 பாடல்களைத் தானாக உணர்ந்து இயக்கும். இதனை நீங்கள் வரிகளை வெட்டப் பயன்படுத்துவதாக இருந்தால், Edit என்பதில் தட்டி வரிகளை வெட்டலாம். இதில் அடாசிட்டி செயலியில் செயல்பட்டது போல, செயல்பாட்டினை மேற்கொண்டு, நமக்குத் தேவையான வரிகளைக் குறித்து, ரிங் டோன் கோப்பினைத் தயார் செய்திடலாம். இந்த செயலி, ஆண்ட்ராய்ட் போனில், இந்த ரிங் டோன் கோப்புகள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு பதிந்து வைத்திடும்.

Settings > Sounds என்ற போல்டரில் இவை இடம் பெறும்.

போனில் எங்கு இந்த பைல்களைத் தேக்கி வைப்பது? ரிங் டோன் எம்பி3 கோப்புகளைத் தயார் செய்த பின்னர், போனில் இவற்றை எங்கு தேக்கி வைத்துப் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

நீங்கள் ரிங் டோன் மேக்கர் செயலியைப் பயன்படுத்தி இருந்தால், அது தானாகவே சரியான இடத்தில், ரிங் டோன் கோப்புகளைத் தேக்கி வைக்கும். மேலே கூறப்பட்ட செயலிகள் இரண்டில் தயார் செய்தவற்றை எங்கே, எப்படி அமைப்பது? ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ரிங் டோன் எம்பி3 கோப்பினை, போன் முழுவதும் ஸ்கேன் செய்து கண்டறியாது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே தேடும்.

எனவே, நம் போனில், சரியான போல்டரில் இவற்றை வைத்திட வேண்டும். இந்த மாற்றத்தினை மேற்கொள்ள ஒன்றிரண்டு வழிகள் உள்ளன. கம்ப்யூட்டரிலிருந்து யு.எஸ்.பி.க்கு மாற்றுங்கள். அல்லது, கூகுள் ட்ரைவ் அல்லது ட்ராப் பாக்ஸில் சேவ் செய்திடலாம்.

யு.எஸ்.பி. யில் தேக்கி வைப்பது எளிது.

உங்கள் போனை கம்ப்யூட்டரில் இணைத்தால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், போனுடைய ஸ்டோரேஜ் பிரிவு மாறா நிலையில் திறக்கப்படும். இதில் “Ringtones,” என்ற போல்டர் இருக்கும். அல்லது /media/audio/ringtones/ என்று சென்று பார்க்கலாம். இதில் ரிங் டோன் கோப்பினை காப்பி செய்து, இங்கு பேஸ்ட் செய்திடவும். இந்த பெயரில் போல்டர் இல்லை என்றால், போனின் மூல டைரக்டரியில்

"Create new" → "Folder". என்று சென்று ரிங் டோன் போல்டர் ஒன்றைப் புதியதாய் உருவாக்கவும்.

பொதுவாக, போனில் உள்ள ஆண்ட்ராய்ட் சிஸ்டம் புதிய ரிங் டோன் கோப்புகளை   Settings > Sounds >Phone ringtone என்று சென்று தேடும். சில வேளைகளில், போனை மீண்டும் ஒருமுறை ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். இவ்வாறு ரிங் டோன் கோப்புகள் பலவற்றைத் தயார் செய்து நம் போனில் பதித்த பின்னர், ஒருவரிடமிருந்து அழைப்பு வருகையில், குறிப்பிட்ட கோப்பினை இயக்கும் வகையில் அமைக்கலாம்.

டிஜிட்டல் சாதனங்களில் இது போல நமக்குத் தேவையானவற்றை அமைத்துப் பெறுகையில் நமக்கு ஒரு நல்ல மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சரியான, முழுமையான ஒரு கோப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம், நம் மனதில் போராட்ட உணர்வை வளர்த்து, அது நிறைவேறுகையில் அளவில்லா ஆனந்தத்தினைத் தரும். இதற்காகவாவது நாம் இது போல ரிங் டோன் கோப்புகளை உருவாக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல