சனி, 21 மே, 2016

இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி கொள்ளையடித்த தேனுஜா கைது

யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி இலட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம்பெண் தற்போது சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு இலட்சத்திற்கு அதிகமான பணம் நகைகளை கொள்ளையிட்டு அண்மையில் தலைமறைவானார்.

இதனால் குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த இரு வருடங்களாக யாழில் கொள்ளையில் ஈடுபட்டு அப்பெண் பொலிஸாரிடம் சிக்காது மறைந்து வாழ்வதாக பொலிஸார் கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் போது இப்பெண் தொடர்பாக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

கடந்த இரண்டு வருடங்களிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேக நபரான தேனுகா ரவீந்திரன்(வயது22) என்பவர் யாழ்ப்பாணத்தில் நேற்று முந்தினம் நகரப் பகுதியில் உள்ள மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி திருமணம் வரையில் சென்றுள்ளார்.

இதன் போது சந்தேக மடைந்த குறித்த பெண்ணை காதலித்த நபர் அப்பெண்ணிடம் ஊடகங்களில் உங்கள் படம் அண்மையில் வந்ததாக குறிப்பிட்டார்.அவ்வேளை அப்பெண் ஊடகங்கள் தவறாக தனதுபுகைப்படங்களை பிரசுரித்ததாக தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அந்நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அப்பெண்ணை பலவந்தமாக அழைத்துச்சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பெண் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் கொள்ளையடித்த நகை தொடர்பான சகல விடயங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் இன்று மாலை யாழ் நகரப் பகுதியில் உள்ள கடைகளிற்கு குறித்த பெண்ணை பொலிஸார் அழைத்து செல்லவுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்ட குறித்த இளம்பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியிருந்ததுடன் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல