அநேகமாக, நாம் அனைவருமே வேர்ட் செயலியைப் பயன்படுத்துபவராக இருப்போம். இருப்பினும் அந்த செயலியின் செயல்பாட்டினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்போம். அல்லது அவற்றைப் பயன்படுத்துபவராக இருக்க மாட்டோம். இங்கு, ஒரு விநோதமான செயல்பாடு குறித்துக் காணலாம்.
கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. வேர்ட் செயலியைப் புதியதாக இயக்கவும்.
2. குறைந்தது ஐந்து பக்கங்களாவது உள்ள டாகுமெண்ட் ஒன்றை இதில் திறக்கவும்.
3. உடன் Ctrl+PgDn அழுத்தவும். வேர்ட் அந்த டாகுமெண்ட்டின் உள்ள பக்கங்களின் முதல் வரிக்குச் செல்லும்.
4. அடுத்து Ctrl+Home அழுத்தி, டாகுமெண்ட்டின் தொடக்கத்திற்குச் செல்லும்.
5. தொடர்ந்து Ctrl+F அழுத்தி, Find and Replace என்னும் டயலாக் பாக்ஸை, Find டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காணலாம்.
6. இதில் Find What பாக்ஸில், அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஒன்றைத் தரவும். எடுத்துக் காட்டாக, 'the' எனத் தரவும்.
7. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட், அடுத்து 'the' என்னும் சொல் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அந்த இடத்தைக் காட்டும்.
8. இனி, Esc கீ அழுத்தி, Find and Replace பாக்ஸின் செயல்பாட்டினை முடிவிற்குக் கொண்டு வரவும்.
9. மீண்டும் Ctrl+Home அழுத்தி, டாகுமெண்ட்டின் தொடக்க வரிக்குச் செல்லவும்.
10. இந்த நிலையில் Ctrl+PgDn அழுத்தினால், வேர்ட், நீங்கள் அமைத்த சொல் 'the' எங்குள்ளதோ அங்கு சென்று நிற்கும்.
இப்போது, Ctrl+PgDn கீ இணைப்பானது, மேலே 3ல் சொல்லப்பட்ட இடத்தில் ஒரு வகையாகவும், நிலை 10ல் ஒரு வகையாகவும் செயல்பட்டிருப்பதனைக் காணலாம். இது சரியல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், வேர்ட் மிகச் சரியாகச் செயல்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள விளக்கத்தில் காணலாம்.
வேர்ட் செயலியில், Object Browser என்று ஒரு செயல்பாடு உண்டு. வேர்டில் செயல்பாடு ஒன்றினை நீங்கள் மேற்கொள்ளத் தொடங்குகையில், மாறா நிலையில் அதில் உள்ள பிரவுசிங் நிலை, பக்கம் பக்கமாக பிரவுசிங் செய்வதுதான். ஆனால், வேர்டில் உள்ள Object Browser பிரவுஸ் செய்வதில், பல்வேறு ஆப்ஜெக்ட்கள் உண்டு. இவை எவை என, Object Browser டூலில், நெட்டு வாக்காகத் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பாரில், கீழாக உள்ள சிறிய புள்ளியில் கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது Ctrl+Alt+Home அழுத்திக் காணலாம்.
இங்கு 12 விதமான ஆப்ஜெக்ட் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். இதில் எந்த ஆப்ஜெக்ட் வகையினைக் கொண்டு பிரவுஸ் செய்திட திட்டமிடுகிறோமோ, அதனை இங்கு தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்தவுடன், Ctrl+PgUp மற்றும் Ctrl+PgDn சுருக்க வழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்ட் வகைப்படி பிரவுஸ் செய்யப்படும்.
எடுத்துக் காட்டாக, இந்த 12 ஆப்ஜெக்ட்களில் ஒன்று “Find” இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், வேர்ட் உடனே Find and Replace டயலாக் பாக்ஸில், “Fins” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்தபடி தயாராக இருக்கும். அதாவது, நாம் Ctrl+F அழுத்தினால், என்ன பாக்ஸ் கிடைக்குமோ, அது கிடைக்கும். எனவே, Ctrl+PgUp மற்றும் Ctrl+PgDn கீ அழுத்தம் கொடுத்தால் அதற்கேற்றபடி, வேர்ட் செயலி, அச்சொல்லின் முதல் மற்றும் அடுத்து இடம் பெற்ற இடங்களில் சென்று நிற்கிறது.
இன்னொன்றையும் நீங்கள் இங்கு காணலாம். ஆப்ஜெக்ட் பிரவுசர் டூலைச் சுற்றி உள்ள Previous மற்றும் Next பட்டன்களைக் காணவும். இந்த பட்டன்கள் கருப்பாக இருந்தால், ஆப்ஜெக்ட் பிரவுசர் Page என்பதற்கு செட் செய்யப்பட்டுள்ளன என்று பொருள். அதாவது, வேர்ட் செயலி, பக்கங்களின் அடிப்படையில் பிரவுஸ் செய்திடும். இவை நீல வண்ணத்தில் இருந்தால், வேறு ஒரு ஆப்ஜெக்ட்டிற்கு பிரவுசர் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.
-----------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக