சனி, 4 ஜூன், 2016

தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 2

(பகுதி – 2)

கேணல் தமிழினி மார்ச் 2009ல், வன்னி கிழக்கு போர்முனையில் ஈடுபட்டிருந்த எல்லா அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களும் சமூகமளித்திருந்த கடைசிக் கூட்டத்தை கையாண்டிருந்தார். அது ஒருகாலத்தில் வடக்கில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் நடைபெற்றது, இந்தக் கூட்டம் இயக்கத்தின் மரபுவழி போராடும் திறன் உடனடி வீழ்ச்சி அடைந்திருப்பதை நன்கு வெளிப்படுத்தியது. தனது மூத்த சகாக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பனுப்பிய ஒரு இறுதி மாநாட்டில், பொட்டு அம்மான் ஒரு அதிசயத்தின் ஊடாகவே யுத்தகளத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றியை அடைய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்.


கேணல் தமிழினி பொட்டு அம்மான் சொன்னதாக மேற்கோள் காட்டி சொல்லியிருப்பது வெற்றி என்பது இனிமேலும் யதார்த்தமான ஒன்றல்ல என்று. பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடையும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள், தாங்கள் இயக்கத்தின் தொண்டர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் அந்தக்கணமே பாதுகாப்பு படைகளால் சுடப்படக்கூடும்; என்று எச்சரிக்கப் பட்டார்கள். ஒரு அதிசயம்தான் தங்களைக் காப்பாற்றும் என்று பொட்டு அம்மான் திரும்பவும் வலியுறுத்தினார். எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு பிரிவு தலைவர் அவர்களின் கைகளிலுள்ள ஆவணங்கள் அனைத்தையும் அழித்து விடும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார். கேணல் தமிழினி, மூத்த தளபதிகள் வெறுத்தபடி ஒருவருக்கொருவர் தங்களிடையே பேசிக்கொண்ட அவர்களின் ஆழமான மன அதிர்வுகளை சுருக்கமாக விளக்கியுள்ளார். உயர்மட்ட குழுவினர் பெரிய குழுவாக உள்ள காயமடைந்த எல்.ரீ.ரீ.ஈ நபர்களிடையே இந்தப் பிரச்சினைபற்றி வசதியாக கலந்துரையாடத் தவறிவிட்டார்கள்.

துருப்புகள் கிளிநொச்சியை கைப்பற்றியதின் பின்னர், வன்னி கிழக்கு முன்னரங்கில் என்ன நடந்தது என்பது பற்றிய விரிவான விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 2009 ஏப்ரல் முதல் வாரத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி எதிர்தாக்குதல் பற்றி தமிழினி விளக்குகையில் அநேக மூத்த அங்கத்தவர்கள் உட்பட 600க்கும் மேலான அங்கத்தவர்களின் இழப்புக்கு அது வழி வகுத்ததாகத் தெரிவித்துள்ளார். கேணல் தமிழினியின் கூற்றுப்படி, மூத்த தளபதி பானு, புதுக்குடியிருப்பு நடவடிக்கைக்கு கிழக்காக அனுராதபுரம் பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார், துருப்புகள் நிலமையை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்வரை அந்த தாக்குதல்கள் மூன்று நாட்கள் நீடித்தன. அதில் உயிர் தப்பியவாகள் இறந்தவர்களையும் மற்றும் காயமடைந்தவர்களையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள், எற்பாடு செய்யப்பட்ட அனைத்து எதிர்ப்புகளும் தோல்வியடைந்தன.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு கிளிநொச்சியை இழந்ததினை தொடர்ந்து, தனது செயற்பாடுகள் அனைத்தையும் குடிமக்கள் சமூகத்தினிடையே இருந்துதான் மேற்கொண்டது என்கிற விக்கிலீக்சின் அறிக்கையை கேணல் தமிழினி உறுதி செய்துள்ளார். அமெரிக்க தூதரகங்களில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அனுப்பப்பட்ட ராஜதந்திர தந்திகள் அனைத்தும் எல்.ரீ.ரீ.ஈ தன்னை பொதுமக்கள் இடையே நிலைநிறுத்தியுள்ளது என்பதை உறுதி செய்தன. எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாது என்பதை பிரபாகரனும் மற்றும் பொட்டு அம்மானும் உணாந்துகொண்டாலும் கூட, இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அவநம்பிக்கையான பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினை விட்டு வெளியேறிவர்களை கொல்லவும் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொள்ளவும் இயக்கம் கட்டளையிட்டது. புதுமாத்தளன் மற்றும் புல்மோட்டைக்கு இடையில் ஐசிஆர்சி யினால் நடத்தப்படும் கப்பல் சேவையில் செல்வதற்காக மக்கள் அனுமதிகேட்டுப் போராடியபோது பொதுமக்களைச் சாந்தப்படுத்துவதற்காக வெளிநாட்டு உதவி வந்துகொண்டிருக்கிறது என்று எல்.ரீ.ரீ.ஈயினரின் புலிகளின் குரல் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக இவர் சொல்கிறார்.

அரசாங்கம் வன்னி கிழக்கு போர்முனையில் இருந்து காயம் பட்டவர்களை திருகோணமலை வடக்கில் உள்ள புல்மோட்டையில் நிலைகொண்டிருந்த ஒரு இந்திய மருத்துவக் குழுவினரிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு அனுமதித்தது என்பதை இங்கு வலியுறுத்திக் கூறுவது பொருத்தமாக இருக்கும். ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தனது மார்ச் 31, 2011 திகதிய அறிக்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்க செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குழு, காயமடைந்த அங்கத்தவர்களை ஐசிஆர்சி யினால் நடத்தப்படும் கப்பல்களினால் அந்தப் பகுதியை விட்டுச் செல்வதை எல்.ரீ.ரீ.ஈ தடுத்ததாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் இறுதிக்கட்ட ஏதிர்ப்பின்போது ஈடுபடுத்தப் பட்டதை தொடர்ந்து கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமையிலான கடற்படை பங்காற்றிய முக்கியமான பாத்திரம் குறிப்பிடத்தக்கது என்று கேணல் தமிழினியின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. கடற்புலிகளின் பெண்கள் பிரிவு தலைவி பூர்ணி (ரி.யு.எல்.எப் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் நெருங்கிய உறவினர்) பெருமளவில் கடற்படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதால் பிரபாகரனையும் மற்றும் அவரது மூத்த தளபதிகளையும் கடல் வழியாக தப்பவைக்க தன்னால் முடியாமல் போனதாக பூர்ணி இரகசியமாக அறிவித்துள்ளார். கேணல் தமிழினிக்கு பூர்ணியிடமிருந்து இந்தச் செய்தி மே 15, 2009 மாலையில் முள்ளிவாய்க்காலில் வைத்து கிடைத்துள்ளது. இதற்காக வைஸ் அட்மிரல் கரன்னகொடவிற்கு நன்றி சொல்லவேண்டும். இந்த கட்டுரை எழுத்தாளருக்கு ஏப்ரல் 2009 இறுதி வாரத்தில் முல்லைத்தீவு – சாலை பகுதியில் அமைந்துள்ள கடற்படை சுற்றிவளைப்பை பார்வையிடும் ஒரு வாய்ப்பும் கிட்டியிருந்தது. வன்னி கிழக்கு போர்முனையில் எல்.ரீ.ரீ.ஈ கைப்பற்றியிருந்த பகுதிகளை இராணுவம் கைப்பற்றும் வரை கடற்படையினர் இந்த நடவடிக்கையை நீட்டித்தனர். வைஸ் அட்மிரல் கரன்னகொட இந்த கடல் சுற்றிவளைப்பை மேற்கொண்டது, அப்போதைய இராணுவ தலைவர் லெப்.ஜெனரல் சரத் பொன்செகா பிரபாகரன் கடல்வழியாக தப்பிக்க முடியும் என்று அறிவித்ததை தொடர்ந்தே.

கேணல் தமிழினியின் உணர்வுகள் தெளிவாகப் பிரதிபலிப்பது, ஒருகாலத்தில் சக்திவாய்ந்த எல்.ரீ.ரீ.ஈ படை அமைப்புகள் பரிதாபகரமான நிலையை அனுபவித்ததையே. இராணுவ வரிகளை உடைப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் எல்.ரீ.ரீ.ஈ யிடம் குறைவாயிருந்தன, மற்றும் போரில் காயமடைந்தவர்களை கவனிப்பதற்கான ஒரு திட்டம் கூட அதனிடம் இல்லாமலிருந்தது. கேணல் தமிழினி வலியுறுத்துவது உயர்மட்ட தலைமை இராணுவத்தை எதிர்கொள்ள தங்களை விடுவதற்கு தீர்மானித்த அதேவேளை தெரிவு செய்யப்பட்ட சிலர் தப்பியோடினார்கள். குறிப்பாக பிரபலமான சோதியா படைப்பிரிவு இந்த நெருக்கடிக்கு உள்ளானது. மே 2009ன் மூன்றாம் வாரத்தில் சோதியா படையணியில் ஒரு சிலரே எஞ்சியிருந்தார்கள், பின்னர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கடற்புலி தளபதி சிறிராம் மற்றும் கேணல் தமிழினி ஆகியொரிடையே இடம்பெற்ற ஒரு உரையாடல்கூட அவர்களது போராடும் திறன் சரிவடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் இராணுவத்திடம் சரணடைவதை நிறுத்துவதற்கு வன்முறையை கையிலெடுத்திருந்தாலும், அந்த நேரத்தில் உயர்மட்ட தலைமை பொதுமக்களை கைவிட்டு விட்டது.

எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்து 18 வருடங்களான போதிலும், தமிழினி மே 16, 2009ல், பிரபாகரன் தப்பிப்பதற்கு ஒரு குறைப்பிரசவ முயற்சியை மேற்கொள்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு இராணுவத்திடம் சரணடைந்தார்.

விக்கிலிக்ஸ், ஸ்டொக்கோமைத் தளமாக கொண்ட எழுத்தாளர் மார்க் ஸலேட்டர் ( ஒரு உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது: ஸ்ரீலங்காவில் நோர்வேயின் சமாதான ஈடுபாடு), ராஜதந்திரியாக சேவையாற்றிய கலாநிதி சானக்க தல்ப்பஹேவா (ஸ்ரீலங்கா சமாதான நடவடிக்கையில் நோர்வேயின் தலையீடு), நோர்வே அறிக்கை ( சமாதானத்துக்கான அடமானங்கள்: ஸ்ரீலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய ஒரு மீளாய்வு) மற்றும் பரணகம ஆணைக்குழுவின் (கடத்தப் பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவாகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் இரண்டாவது ஆணை பற்றிய அறிக்கை) என்பன இறுதிக்கட்ட போரின் முன்னணி கள நடவடிக்கையின் நிலமையை கையாண்டுள்ளன.

துரதிருஸ்ட வசமாக போரை வெற்றிகொண்ட ராஜபக்ஸ அரசாங்கம், ஈழப்போர் 4 ன் கவனத்தில் (ஆகஸ்ட் 2006 – மே 2009) மோதலுக்கு வழியேற்படுத்திய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவையை அலட்சியம் செய்தது. அந்த நிருவாகம் அப்படியான விசாரணையை மேற்கொண்டிருந்தால், எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்கள், தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் மேற்கத்தைய சக்திகள் என்பன ஸ்ரீலங்கா அரசாங்கம் முறைப்படியான குற்றங்களில் ஈடுபட்டது என்று பிரச்சாரம் மேற்கொள்ள வசதியில்லாமல் போயிருக்கும். முந்தைய அரசாங்கம் விக்கிலிக்ஸ் பற்றிக்கூட பரணகம ஆணைக்குழுவில் சட்ட ஆலோசனைக் குழு மற்றும் ஏனைய வெளிநாட்டு நிபுணர்கள் இணையும் வரை பரிசோதிக்காமல் முட்டாள்தனமாக இருந்துள்ளது. நோர்வேயின் மீளாய்வு கூட விக்கிலிக்ஸ் பற்றி அக்கறை எடுத்துள்ளது. பொதுமக்களின் காரணியில் அக்கறை எடுத்துக்கொள்வதால் வன்னி கிழக்கு போர்முனையில் இராணுவம் பெரிய விலையை கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளது என்று ஐசிஆர்சி ஒப்புக் கொண்டிருப்பதை விக்கிலிக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

போரினால் சோர்வடைந்த மக்களுடன் சேர்ந்து எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் இராணுவத்திடம் சரணடைவதை பற்றி கேணல் தமிழினியின் பழைய நினைவுகள் மீட்டப்படுகின்றன. அவர்கள் முள்ளிவாய்க்கால் வீதி வழியாக நடந்து வட்டுவாகல் பாலத்தை கடந்து கேணல் தமிழினி குறிப்பிடும் முல்லைத்தீவு மத்திய பகுதியை அடைந்தார்கள். மக்கள் முல்லைத்தீவு மத்திய பகுதியை அடைவதற்கு வழிவிட்டு இராணுவம் வீதியின் இரு பக்கமாகவும் முள்ளிவாய்க்காலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருபவர்களை ஏற்றுக் கொள்வதற்கு இராணுவம் விசேட ஒழுங்குகளைச் செய்திருந்தது. எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் உட்பட பெருங் குழுக்களான மக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவத்தின் தயார் நிலை மிகவும் பிரதானப்படுத்தப் பட்டிருந்தது. போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது சரணடைபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம் ஒழுங்கு செய்திருந்த முன்னேற்பாடுகளை தமிழினி பாராட்டியுள்ளார்.

மக்களையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களையும் முல்லைத்தீவிலீருந்து ஓமந்தைக்கு இராணுவ காவலுடன் பேருந்துகளில் ஏற்றி அனுப்பியதாக இவர் விளக்கியுள்ளார். தியுனு அஸ்பித்தக்க செவன யட்ட மற்றும் ஒரு கூர்வாளின் நிழலில் என்பன இப்போதுவரை தமிழ் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டுவரும் ஒரு நிலமை பற்றி விவாதிக்கிறது. அரசாங்கத்தின் பக்கமுள்ள பொறுப்புக்கூறலை கோருபவர்கள், வன்னி கிழக்கு போர்முனையில் இருந்து வந்த தமிழ்மக்களை பாதுகாப்பாக ஏற்றுக்கொள்வதற்கு இராணுவம் மேற்கொண்ட முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் அதிர்ஷ்டவசமாக தனது தாய் மற்றும் சகோதரி துணையுடன் ஓமந்தைக்கு வந்துள்ளார்.

வினோதமான முறையில் முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான கூட்டு எதிர்க்கட்சியினர் கேணல் தமிழினியின் வெளிப்பாடுகள் பற்றி இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை. வெளிப்படையாக இந்தக் குழுவினருக்கு இராணுவத்தை பாதுகாப்பதற்கு பயன்படக்கூடிய தகவல்களை சேகரிக்கும் மூலோபாயங்கள் குறைவாக உள்ளது.

மிகவும் முக்கியமாக எல்.ரீ.ரீ.ஈயின் உயர் தளபதியாகவும் மற்றும் அதன் கட்டுப்படுத்தும் கட்டமைப்பாக இருந்துள்ள போதிலும், கேணல் தமிழினி இராணுவத்திடம் சரணடைய திட்டமிட்ட குழுவினரைப் பற்றிய எந்த குறிப்பையும் வெளியிடவில்லை. நிகழ்வுகளைப் பற்றிய அவரது கண்ணோட்டம், குழுவின் அழிவுக்கு காரணமான நிகழ்வுகள் பற்றியதாகவும், ஜனவரி 2009ன் முதல்வாரத்தில் கிளிநொச்சியில் ஏற்பட்ட பலவீனமான பின்னடைவை தொடர்ந்து பிரபாகரன் மற்றும் அவரது பக்கத்துணையான பொட்டு அம்மான் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் முட்டாள்தனமாக நடந்து கொண்டதையும் பற்pயுமே வெளிப்படுத்துகிறார். கிளிநொச்சி தோல்வியை தொடர்ந்து, எல்.ரீ.ரீ.ஈக்கு திரும்ப எழுவதற்கான ஒரு வாய்ப்பே இருக்கவில்லை என தமிழினி வலியுறுத்துகிறார். கேணல் தமிழினி கூறுவதன்படி, அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வை அடைவதற்கான ஒரு தீவிர முயற்சி ஒருபோதும் மேற்கொள்ளப் படவில்லை மற்றும் வெளிப்படையாக பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய சகாக்கள் காயம் பட்டவர்களைக் கூட விட்டுவிட்டு தப்பியோட முடியும் என நம்பினார்கள். யத்த சமயத்தில் கொழும்பிலிருந்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் லோரன்ஸ் ஸ்மித், ஜூன் 2011 ன் ஆரம்பத்தில் கொழும்பில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ சரணடைவதற்கான எந்த ஒரு ஒப்பந்தமும் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப் படவில்லை என அறிவித்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு மூத்த தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இது தொடர்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு புரிந்துணர்வுக்கு வந்தது தொடர்பான அறிக்கைகளை அதிகாரிகள் நிராகரித்தார்கள். அமெரிக்க அதிகாரிகளின் வாக்குமூலம் தொடாபாக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை, அமெரிக்க ராஜாங்க திணைக்கள துணைப் பேச்சாளரான மார்க் சி ரோனரால் நிராகரிக்கப்பட்டது.

ரோனர் அறிவித்தது: நல்லது சாதாரணமாக தெளிபடுத்துவதற்காக தெரிவிப்பதானால், அந்த மாநாட்டில் ஒரு மாநாட்டு பேச்சாளராகவோ அல்லது ஒரு குழவினராகவோ கலந்து கொள்வதற்கான அழைப்பை அமெரிக்கா நிராகரித்துவிட்டது. எனக்கு புரிந்த வகையில் அங்கிருக்கும் பாதுகாப்பு தரப்பினர் வெறும் பார்வையாளர்களே தவிர பங்களிப்பாளர் அல்ல. அவரது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் கொள்கையில் எதுவித மாற்றமும் இல்லை, மற்றும் அவரது கருத்து எங்கள் கொள்கையில் எதுவித மாற்றத்தையும் பிரதிபலிக்காது.

அமெரிக்கா சங்கடத்துக்குள்ளானது. முந்தைய அரசாங்கம் எதுவுமே நடக்காதது போல நடித்தது. அது தனது தோற்றத்தை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக விலையுயர்ந்த அமெரிக்க பொதுசன தொடர்பு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியது.

சாமிந்திரா பேர்டினான்டோ

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல