நீங்கள் வழக்கமாக 'பேஸ்புக்' அக்கவுண்ட் பயன்படுத்துபவரா? ஒரு நாள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், எதனையோ பறிகொடுத்தது போல் உள்ளதா? அப்படியானால், அதனைச் சரியாகப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு நல்லது? அதற்கான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமல்லவா?
ஆனால், பேஸ்புக், நீங்கள் உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள உதவிடுகிறது. அதற்கு, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் முகவரியும், மொபைல் தொலைபேசியும் தேவை. இந்த இரண்டும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இயக்க நிலையில் இருந்தால் மட்டுமே, பாஸ்வேர்டினைத் திரும்பப் பெற முடியும். இதற்கான வழிகளைப் பார்ப்போம்.
முதலில் உங்கள் பேஸ்புக் ஹோம் பேஜ் செல்லவும்.
பின்னர், மேலாக, வலதுபுறம் காட்டப்படும் சிறிய அம்புக்குறியில் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் கீழ் விரி பட்டியலில் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி கிடைக்கும் பக்கத்தில், மேலாக உள்ள General என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், General Account Settings என்ற பிரிவில், e-mail என்பதில் கிளிக் செய்து, அதில், தற்போது தாங்கள் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரி இருக்கட்டும்.
இதனை மாற்ற வேண்டும் என எண்ணினால், Edit என்பதில் கிளிக் செய்திடவும்.
இதன் மூலம் பழைய மின் அஞ்சல் முகவரியை மாற்றலாம்.
அல்லது, புதியதாக ஒரு மின் அஞ்சல் முகவரியை இணைக்கலாம்.
இன்னொரு மின் அஞ்சல் முகவரி இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் பேஸ்புக் முகவரியை ஒருவர் திருடி பயன்படுத்தினால், இரண்டாவது அஞ்சல் முகவரி உதவிக்கு வரும்.
உங்கள் தற்போதைய மின் அஞ்சல் முகவரி காட்டப்படும்.
தொடர்ந்து “Add another email or mobile number” என்பதில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து, புதிய மின் அஞ்சல் முகவரியை அதில் உள்ளீடு செய்திடலாம்.
இதே போல, முதன்மை மின் அஞ்சல் முகவரி எது என்பதை அமைக்கலாம். இதில் ஏதேனும் ஒன்றை நீக்க வேண்டும் என எண்ணினால், அதனைத் தேர்ந்தெடுத்து, Remove என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.
அடுத்து உங்கள் போன் எண்ணையும் மாற்றலாம்; அல்லது புதுப்பிக்கலாம்.
இதற்கு Add another email or mobile number என்பதில் கிளிக் செய்திடவும்.
பின்னர், Add your phone number? என்பதில் கிளிக் செய்து, புதிய எண்ணைத் தரவும்.
உங்களுடைய பாஸ்வேர்ட், மின் அஞ்சல் முகவரியையும், போன் எண்ணையும் இணைத்து, ஒன்றைச் சார்ந்து ஒன்றாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக