கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’
மாயத்தோற்றங்களை ஏற்படுத்தும் சில புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வருவதுண்டு. தற்போது ஒரு இளம் ஜோடி பரஸ்பரம் அரவணைத்துக்கொண்ட நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படமொன்று இவ்வாறு பரவியுள்ளது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது சாதாரண ஒரு படம். இப்படத்தில், கடற்கரையொன்றில் கெமராவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு இருக்கும் ஓர் இளைஞரை யுவதி ஒருவர் இடுப்புடன் சேர்த்து அரவணைத்தவாறு காணப்படுகிறார்.
ஆனால், இப்படத்தின் கீழ்ப்பகுதியை நன்கு அவதானித்தால் நாம் காண்பது என்ன என்பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்படும்.
இந்த இளைஞன், யுவதி ஆகிய இருவரின் கால்கள், பாதங்கள் காணப்படும் நிலையே இந்த குழப்பத்துக்கு காரணம்.
புரியாத புதிராகக் கருதப்பட்ட இப்படம் “பிளட் ரீப்பர்” என்பவரால் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பல மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
இப்படி படம்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் இது கிறபிக்ஸ் வேலையாக இருக்கலாம் எனவும் சிலர் கருதலாம். இது கிறபிக்ஸ் அல்ல. உண்மையான புகைப்படமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர், யுவதி இருவரின் கால்கள் எங்கே உள்ளன என உங்களால் கண்டறிய முடிகிறதா?
இந்த புதிரான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோரை தலைமயிரைப் பிய்த்துக்கொள்ள வைக்காத குறையாக யோசிக்க வைத்து விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் அப்புதிருக்கு விடையளிக்கும் விதமாக சமூகவலைத்தளவாசி ஒருவர் கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார்.
ரெடிட் சமூக வலைத்தளத்தில் Musicmonk84…. என்பவர் வெளியிட்ட இக்கருத்தின்படி, மேற்படி இளைஞன் அணிந்திருக்கும் காற்சட்டை இரு நிறங்களைக் கொண்டது.
அது வெள்ளை மற்றும் கறுப்பு அல்லது பச்சை நிறமானது. இக்காற்சட்டையின் வெள்ளை நிறப்பகுதியானது யுவதியின் கால்களுடன் கச்சிதமாகப் பொருந்துவதால், அது யுவதியின் ஆடை என எண்ண வைக்கிறது இதுவே குழப்பத்துக்குக் காரணம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை இங்குள்ள புகைப்படத்தில் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக