வியாழன், 21 ஜூலை, 2016

150 இலட்சம் சுவிஸ் பிறாங் பண வசூல்!!: விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக எனச்சொல்லி தமிழர்களிடமிருந்து அதிநவீன முறையில் வங்கிகளிலிருந்து “150 இலட்சம் சுவிஸ் பிறாங்”களை கடனாக (15 மில்லியன்) திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.



சுவிஸ், ஜேர்மனி, மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நுண்கடன் திட்டங்களின் கீழ் சூரிச்சில் உள்ள வங்கியில் இருந்து நிதி திரட்டப்படடுள்ளதாகவும், உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் இந்த நிதி திரட்டல் இடம்பெற்றுள்ளதாகவும் சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் காவல்துறையின் உதவியுடன் நடத்திய விசாரணைகளில், கணிசமான நிதி புலம் பெயர்ந்தோரிடம் இருந்து திரட்டப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் 2009ஆம் ஆண்டு சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததுடன் இந்த நிதி திரட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பெலின்சோனாவில் உள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரம் தொடர்பான விசாரணைகள் எப்போது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

அதேவேளை, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு: கடைசிக்கட்ட போர் நடந்து கொண்ருந்த போது.. (போர் முடிவடைவதற்கு 3 மாதகால அளவில்) 150 இலட்சம் (15 மில்லியன்) சுவிஸ் பிறாங்குகளை வங்கி மூலம் தமிழர்களிடமிருந்து திரட்டியுள்ளார்கள். (இந்த பணத்தில் ஒரு பைசாகூட வன்னிக்கு செல்லவில்லை என்பதுதான் உண்மை.)

• வங்கி மூலம் பெற்ற 150 இலட்சம் சுவிஸ் பிறாங் தொகையைவிட பல்வேறு வழிகளில் (அவசரகால நிதி, நீர்மூழ்கி கப்பல் வாங்கப்போறோம்., மக்களுக்கு மருந்து வாங்கப்போகின்றோம், வணங்கா மண் கப்பலுக்கு பொருடகள் வாங்கப்போகின்றோம்……) புலிமுகவர்கள் பெற்ற பணம் இதைவிட பன்மடங்கு.

• சுவிஸில் வங்கி மூலம் சேர்ந்த பணம் மட்டும் 150 இலட்சம் சுவிஸ் பிறாங்குகள். அதைவிட கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி… என 56 நாடுகளில் புலிகள் சேர்த்த பணத்தின் தொகை எவ்வளவு என்பதை நீங்களே யோசத்துப்பாருங்கள்!!

• உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து புலிகளை ஏன் அழித்தார்கள் என்பது இப்பொழுது புரிகிறதா?? காரணம் இதுதான் உலகநாடுகள் முழுவதும் புலிகள் தங்கள் “மபியா” விளையாட்டை காட்டியுள்ளார்கள் என்பதுதான் அர்த்தம்.

• 10,000 பிறாங் கடன் எடுத்து தாருங்கள் எனச்சொல்லி சனங்களிடம் “வங்கி படிவத்தில்” (Credit Bank Form ) கையெழுத்து வாங்கிகொண்டு 10,000க்கு பக்கத்தில் ஒரு சைபரை “0” கூடபோட்டு 1,000, 00 (ஒரு இலட்சம்) பணம் கடன் எடுத்துக்கொண்டு கைநீட்டியுள்ளார்கள் புலிமுகவர்கள்.

(வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களில் 95 வீதமான தமிழர்களுக்கு வங்கி படிவத்தை நிரப்புவதற்கான அறிவுகிடையாது என்பது இஙகு குறிப்பிடதக்கது. )

இது தொடர்பாக சுவிஸ் பத்திரிகையில் வந்த செய்தி கீழே..

Ils ont récolté 15 millions pour les Tigres tamouls

இலக்கியா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல