அதன் அா்த்தம் என்னவென்று புரிகிறதா??? அதாவது.., தொடர்ந்தும் சீமான் மட்டுமே ஈழத்தமிழர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணங்களை வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனபதுதான் உள்ளார்ந்த அர்த்தமாகும்.
தாங்களும் (வைகோ, திருமாவளவன், நெடுமாறன்….) ஈழத் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க சீமான் வழிவிட வேண்டும் என்பதைதான் மறைமுகமாக சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்.
அதுசரி, ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருப்பதை “நாங்கள்” அனுமதிக்க மாட்டோம் என்றால்? ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதற்கு இவர்களிடமா அனுமதி பெறவேண்டும்??
ஈழத்தமிழர்களை யாரும் ஏமாற்றிப் பிழைப்பதற்கு உரிமை உண்டுதானே?
இல்லை, இல்லை.. மன்னிக்கவும். பிரபாகரனின் படத்தையும், புலிக்கொடியையும் வைத்துக்கொண்டு வாய்ச் சொல்லில் வீரம் பேசுபவர்கள் மட்டுமே ஈழத்தமிழர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கலாம். மற்றவர்கள் பணத்தை கொடுக்கலாமே தவிர வசூலிக்க முடியாது.
வீடியோவில் பேசும் வைகோ…”சீமானுக்கு பிரபாகரனுடன் நின்று படமெடுக்க அனுமதிக்கவில்லையாம் என்கிறார் ?? என்னடா புதுக்கதையாக இருக்கிறது??
அப்படியானால் சீமானும், பிரபாகரன் ஒன்றாக நிற்பதுபோன்ற படம் எப்படி வந்தது?? “photoshop” மூலம் எதாவது விளையாட்டு காடடியிருப்பாங்களோ??
(நான் பிரபாகரனுடன் நின்று படமெடுக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த இரகசியத்தை தயவுசெய்து வெளியில் சொல்லிப்போடாதீங்கோ அண்ணா.)
தொடர்புடைய செய்தி…
சீமான் பேசும் இந்த காணொளியை புலிகளின் தலைவர் “வே. பிரபாகரன்” பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்??
புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் வந்து, அவர்கள் வசிக்கும் நாடுகளில் அகதி அந்தஸ்தை பெறுவதற்காக ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லியிருப்பார்கள்.
ஆனால்… பாருங்கோ! சீமான் பேசுகின்ற பொய் பேச்சோடு ஒப்பிட்டுப்பார்த்தால், நாங்கள் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களும் சொன்ன பொய்கள் யாவும் ஒன்றுமே இல்லாதது.
ஒருவேளை.. “இந்த காணொளியை புலிகளின் தலைவா் பிரபாகரன் பார்த்திருந்தால், கட்டாயம் சீமானை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் சாகடித்திருப்பார் என்பது உறுதி.
நீங்களே இந்த காணொளியை பாருங்கள்… “சீமான் சிரிக்கிற சிரிப்பை பார்த்தாலே “பச்சைப் பொய்யை” சொல்லுகிறான் என்பது புரியும். அதைவிட ஏளனசிரிப்பு சிரிக்கிறான்.
2008 ஆம் ஆண்டு சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப்பயிற்சியளித்தவராம்? என்னமா கதைவிடுகிறான்.
சீமான் போன்ற “பொய்யன்கள்” சொல்லுகிற பொய்களை அப்படியே ஜீரணித்துக் கொள்ளுகின்ற கூட்டங்கள் வெளிநாடுகளிலும், தமிழகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடைசிக்கட்டப் போர் நடந்தபோது, இந்த தமிழகத்து போலி சினிமாக்காரர்களும், போலி அரசியல் வாதிகளும் தங்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பிரபாகரன் மக்களையும் கூட்டிக்கொண்டு நந்திக்கடல் வரை நகர்ந்தாரோ?
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பிரபல ஈழ வியாபாரி என்கிற செபஸ்டின் சீமான் சந்தித்தது எப்படி?
விடுதலைப் புலிகள் இயக்கம் பல குழுக்களை உள்ளடக்கியது. அதில் ஒரு குழு ‘கலை பண்பாட்டுக்குழு’ என்பதாகும்.
புலிகள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரங்களை, பாடல், இசை மற்றும் கலைநிகழ்ச்சி மூலம் உலகிற்க்கு காணொளி காட்சியாக எடுத்துச்சொல்ல இக்குழு இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் நடிகர் ராஜ்கிரண் மற்றும் சிலர் அடங்கிய குழுவை ஈழத்திற்க்கு அழைத்தது.
அப்படி புறப்பட்டு சென்ற குழுவினரின் கைகால்களில் விழுந்து ஈழத்திற்க்கு சென்றவர் இந்த ‘ஈழ வியாபாரி’ சீமான்.
அண்ணன் பொட்டு அம்மனே விரும்பினாலும், தேசிய தலைவர் பிரபாகரனை பலகட்ட சோதனைக்கு பின்னரே சந்திக்க இயலும்.
அப்படி பலகட்ட சோதனைகளை தாண்டி இக்குழுவினரோடு ஒட்டிக்கொண்டு உள்ளே சென்ற ‘ஈழ வியாபாரி’ சீமான், ‘நான் ஒரு தமிழ் இயக்குநர்’ என தலைவரிடம் அறிமுகம் செய்துகொண்டு, கெஞ்சி கூத்தாடி எடுத்த புகைப்படம்தான் இது.
தமிழகத்தில் இருந்து எவர் ஈழத்திற்க்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் புலிகள் அமைப்பினர். அப்படி நடந்த ஒரு நிகழ்வே இது.
வானவில், பட்டாசு என இந்த ‘ஈழ வியாபாரி’ உளரியதெல்லாம் சுத்த வடிகட்டின பொய். தேசியத்தலைவரிடம் ஒட்டுமொத்த குழுவும் செலவிட்ட நேரம் மொத்தமே ஒரு நிமிடம்.
மேலும் புலிகள் அமைப்பின் சீறுடையை அணிந்த வெளியாட்களில் ஒரேஒரு நபர் வைகோ மட்டுமே.
நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, காசி ஆனந்தன் இவர்கள் ஈழத்தைப் பற்றி பேசுவார்கள் அவ்வளவே. ஆனால் அதை வெளியில் சொல்லி ஓட்டுப் பொருக்குவது இல்லை.
இந்த ‘ஈழ வியாபாரி’ சீமான் அரசியல் லாபத்திற்க்கு ஈழத்தையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்.
அரசியல் காழ்புணர்ச்சியால் தலைவர் கலைஞரை விமர்சித்துவந்த ஈனப்பிறவி சீமான், தற்போது தேசியத்தலைவர் பிரபாகரனையும் ஏளனப்பொருளாக்கியது வருந்தத்தக்க செயல்.
இனிமேலாவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சீமானுக்கு கோடிகோடியாக கொடுப்பதை நிறுத்தவேண்டும்.
ஒரு நாளும் தமிழக அரசியல் ஈழம் பெற்று தராது என்பதை உணர வேண்டியது அங்கும் இங்கும் உள்ள தமிழர்கள் தாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக