செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது.
எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலையை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.
ஹெடர் - புட்டர் எழுத்துக்கள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது.
முதலில் டெக்ஸ்ட் என்டர் செய்திடவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸில் உள்ள A என்னும் டூலில் கிளிக் செய்திடவும். உடன் கிடைக்கும் விண்டோவில் தேவையான எழுத்துவகையில் டெக்ஸ்ட்டை மாற்றலாம். குறுக்குக் கோடிடலாம், சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்கலாம். உங்களுடைய எக்ஸெல் எம்.எஸ். ஆபீஸ் 2007 வகையைச் சேர்ந்தது என்றால், வண்ணத்தையும் மாற்றலாம். எக்ஸெல் 97க்கு முன்பு வந்த தொகுதிகளில் இந்த கலர் மாற்றும் வசதி இருந்தது. பின் எக்ஸெல் 2007ல் தான் இது மீண்டும் தரப்பட்டது. மற்ற தொகுப்பில் உள்ள ஹெடர்களில் வண்ண எழுத்துக்கள் வேண்டுமாயின், வண்ணத்தில் எழுத்துக்கள் உள்ள கிராபிக்ஸ் அமைத்து அப்படியே பேஸ்ட் செய்திட வேண்டியதுதான். இந்த வழியை நிறுவனங்களின் இலச்சினைகள், மற்ற கிராபிக் ஆப்ஜெக்ட்களை அமைப்பவர்கள் மேற்கொள்கிறார்கள்.
டேட்டாவிற்கேற்ற பார்மட்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.
ஆனால், பலர், இதனால் நேரம் அதிகமாகிறது என்று எண்ணுகின்றனர். நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே, எக்ஸெல் சில ஷார்ட் கட் கீகளைத் தருகிறது. அவற்றை கீழே காணலாம்.
Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+#தேதி அமைப்ப தற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக