ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

ஆண்களை அதிகம் பாதிக்கின்ற வாய்ப் புற்றுநோய்

அதிகம் மரணங்களை ஏற்படுத்து கின்ற தொற்றா நோயான வாய்ப்புற்­றுநோய் எமது நாட்டில் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றது.ஆண்­களைப் பொறுத்­த­வ­ரையில் வாய்ப்­புற்­று­நோயும் பெண்­களை பொறுத்­த­வ­ரையில் மார்­பக புற்­று­நோயும் முன்­னிலை வகிக்­கின்­றன.


கட்­டுப்­பா­டற்ற முறையில் பெருகி விரி­வ­டைந்து வளரும் கலங்­களே புற்­றுநோய்க் கட்­டி­க­ளா­கின்­றன. வழக்­க­மாக ஒரு­ சீ­ரான முறையில் விரி­வ­டைந்து வளரும் கலங்கள் கட்­டுப்­பாட்டை இழக்­கும்­போது அவை சாதா­ர­ண­மற்ற இரத்த கலங்­க­ளையும் உள்­ள­டக்கி கட்­டி­க­ளாக வளர்­கின்­றன.

இவ்­வா­றான கட்­டி­களை Tumour என்று அழைப்பர். இவ்­வா­றான கட்­டிகள் உடலில் பல்­வேறு உறுப்­பு­க­ளிலும் ஏற்­ப­டலாம்.இவ்­வாறு வளரும் புற்­றுநோய்க் கட்­டிகள் நோய்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­துடன் மர­ணத்­திற்கும் இட்டுச் செல்­லக்­கூ­டி­யவை.

ஒரு உறுப்பில் தோன்றும் கட்­டி­யா­னது வளர்ந்து அரு­கி­லி­ருக்கும் உறுப்­பு­க­ளுக்கும் பர­வக்­கூ­டி­யவை.

மேலும் இவ்­வா­றான கட்­டி­க­ளி­லுள்ள புற்­றுக்­க­லங்கள் இரத்­தச்­சுற்­று­டனோ நிணநீர்ச் சுற்­று­டனோ பய­ணித்து வேறு உறுப்­பு­க­ளிலும் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தலாம்.இவ்­வாறு தூர உறுப்­பொன்றில் ஏற்­ப­டு­கின்ற இரண்­டாம்­நிலை புற்­றுநோய்க்­கட்­டி­களை Metastasis என்று அழைப்பர்.

வாயில் ஏற்­ப­டு­கின்ற புற்­றுநோய் வராமல் தடுக்­கக்­கூ­டிய ஒன்­றாகும். இப்­புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்கு மனி­தரின் தவ­றான பழக்க வழக்­கங்­களே முக்­கிய கார­ண­ங்க­ளாக அமை­கின்­றன.

இன்­றைய உலகில் கணி­ச­மானோர் வாயில் வெற்­றிலை, பாக்கு, புகை­யிலை, பான்­பராக், நவீன துரித உண­வுகள் என உட­லுக்கு கெடுதி விளை­விக்கும் பொருட்­களைப் பாவிக்­கின்­றனர். கார­மான சுண்­ணாம்பு கடு­மை­யான உறைப்­புகள் கூட வாயுள் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யன.

மேற்­கு­றிப்­பிட்ட பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யாகி தொடர்ந்து இவற்றை மெல்­லும் போது வாய்ச் சுகா­தாரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.பற்­களை சரி­யாக பரா­ம­ரிக்­கா­மை­யினால் அவை உடைந்து கூர்­மை­ய­டை­வ­த­னாலும் அவை நாக்கு மற்றும் வாயின் உட்­ப­கு­தி­களை தொடர்ந்து பாதிக்­கின்­றன. இவை­யாவும் நாள­டைவில் வாய்ப்­புற்­று­நோயை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

மலை­ய­கத்தில் ஆண்கள் மாத்­தி­ர­மின்றி கணி­ச­மான பெண்­களும் வாய்ப்­புற்­றுக்கு ஆளா­வ­தற்கு அவர்­க­ளது வெற்­றிலை, பாக்கு, புகை­யிலை, சுண்­ணாம்பு பாவ­னையே கார­ண­மா­கின்­றன.

வாய்ச்­சு­கா­தா­ர­மின்­மையும் ஆரோக்­கி­ய­மற்ற சம­போ­ஷாக்­கற்ற உண­வுகள் கூட புற்­றுநோய் ஏற்­ப­டு­கின்ற சாத்­தி­யத்தை அதி­க­ரிக்­கின்­றன.
வாய்ப்­புற்று நோய் ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு உண்­பது சிர­ம­மா­கின்­றது. பேச்சு, குரல் என்­ப­னவும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. வாய்ப்­புற்று நோய் குறிப்­பிட்ட ஓரி­டத்தில் ஆரம்­பித்­தாலும் சொக்கு, நாக்கு, முரசு, தாடை, தொண்டை என அரு­கி­லி­ருக்கும் உறுப்­பு­க­ளுக்கும் பர­வக்­கூ­டி­யது.

அண்­மைய கணக்­கெ­டுப்­பின்­படி வாய்ப்­புற்று நோயால் பீடிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்­குநாள் உயர்ந்து வரு­கி­றது.
புற்­று­நோய்க்­கான சிகிச்சை முறைகள் இருந்தும் பல நோயா­ளர்கள் நோய் முற்­றிய நிலையில் தாம­த­மாக சிகிச்­சைக்கு வரு­கின்­றனர்.

இதனால் சிகிச்சை மூலம் குணப்­ப­டுத்­து­வது கடி­ன­மா­வ­துடன் மர­ணங்­களும் ஏற்­ப­டு­கின்­றன. இதனைத் தடுக்க வேண்­டிய கட்­டாய நிலையில் சுகா­தா­ரத்­து­றை­யினர் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

நாம் கடைப்­பி­டிக்கும் சில எளிய வழி­முறைகள் மூலம் நோயை ஆரம்ப நிலையில் இனம்­கண்டு, பூர­ண­மாகக் குண­ம­டைய முடியும்.
வாயில் ஏற்­படும் புண்கள், அழற்­சிகள், கொப்­ப­ளங்கள், வெண்­ப­டி­வுகள், தடிப்­புகள் என்­பன சாதா­ரண சிகிச்­சையில் ஆறாமல் இருந்தால் மேற்­கொண்டு வைத்­திய ஆலோ­சனை பெற்று பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள முடியும்.

வாயி­லி­ருந்து இரத்­தக்­க­சிவு ஏற்­பட்­டாலோ வெள்ளை அல்­லது சிவப்பு நிறத்தில் சிறு­புள்­ளிகள் காணப்­பட்­டாலோ, சொக்கின் உட்­புறம் தடிப்­பாக இருந்­தாலோ, நாக்கின் அடிப்­பு­றத்தில் சிறு­கட்­டி­களோ நாக்கின் மேற்­பு­றத்தில் சிறு புண்­களோ இருப்பின் உட­ன­டி­யாக வைத்­திய ஆலோ­ச­னையைப் பெற வேண்டும்.

சிலரில் ஈறுகள் பல­வீ­ன­மா­கவும் கன்­னங்கள் வீங்­கியும் காணப்­படும். புற்­றுக்­கட்­டிகள் பலவும் ஆரம்­பத்தில் வலி வேத­னையை ஏற்­ப­டுத்­து­வ­தில்லை. வாயுள் ஏற்­படும் அழற்­சிகள் உங்கள் குடும்ப வைத்­தியர் வழங்கும் தொற்­றுக்­க­ளுக்கு எதி­ரான சிகிச்­சைக்கு குண­மா­கா­விட்டால் அவர் உங்­களை பல் வைத்­தி­ய­ரி­டமோ தொண்டை காது, மூக்கு, வைத்­திய நிபு­ண­ரி­டமோ (ENT Surgeon) காண்­பித்து அதை (Blopsy) செய்து உறு­திப்­ப­டுத்­துவார்.

புற்­று­நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அறுவைச் சிகிச்சை, மருத்துவச் சிகிச்சை என்பன உண்டு. தேவையைப் பொறுத்து இவற்றில் ஒன்றையோ அல்லது கூட்டு சிகிச்சையாகவோ புற்றுநோய் வைத்திய நிபுணர் மேற்கொள்வார்.
ஆரம்பநிலையில் சிகிச்சை பெற வருபவர்களை குணமாக்க முடியும்.நோய் முற்றிய நிலையில் சிகிச்சை கடினமாகின்றது.

மருத்துவ சிகிச்சையின் போது பக்கவிளைவுகள் அதிகம் தாங்குவதும் கடினம். எனினும் சிகிச்சை முடிந்ததும் பக்கவிளைவுகள் இல்லாது போய்விடும்.நோயாளி பழைய நிலைக்கு திரும்புவார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல