ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

தடுப்புமுகாமில் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா???

தடுப்பு முகாமில் இருந்­த­போது தமக்கு விஷ ஊசிகள் ஏற்­றப்­பட்­ட­தா­கவும் குறித்த காலத்­துக்குள் மரணம் சம்­ப­விக்­கக்­கூ­டிய மருந்­துகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் இர­சா­யனக் கலப்­புக்­கொண்ட உணவு வகை­களை தமக்குத் தந்­த­தா­கவும் தடுப்பு முகா­மி­லி­ருந்து புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர்.


அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான செய­ல­ணியின் மக்கள் கருத்­த­றியும் அமர்வு நடை­பெற்றபோதே முன்னாள் போரா­ளி­யொ­ருவர் மேற்­கண்­ட­வாறு அதிர்ச்சி தரும் தக­வலைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

100 கிலோ எடை­யுள்ள பொரு­ளைக்­கூட லாவ­க­மாக தூக்கிச் செல்லும் பல­முள்­ள­வ­னாக நான் முன்பு இருந்தேன். புனர்­வாழ்வு பெற்­றபின் என்னால் இயங்கக் கூட முடி­ய­வில்­லை­யென அப்­போ­ராளி முறை­யிட்­டமை சக­லரின் கவ­னத்தை ஈர்த்­தது மாத்­தி­ர­மல்ல. சகல தரப்­பி­ன­ருக்கும் அதிர்ச்­சி­யையும் தந்­தி­ருக்­கி­றது. இலங்கை அர­சாங்­கத்­துக்கு மீண்­டு­மொரு பேரி­டி­யையும் தந்­தி­ருக்­கி­றது.

முள்­ளி­வாய்க்கால் யுத்த முடிவின் பின் சர­ண­டைந்த முன்னாள் போரா­ளிகள் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஆகி­யோரைக் கொண்டு சென்று இலங்கை இரா­ணுவம் அவர்­க­ளுக்கு தடுப்பு முகாம்­களில் வைத்து புனர்­வாழ்வு அளிப்­ப­தாகக் கூறி நீண்­ட­காலம் அவர்­களை முகாம்­களில் தடுத்து வைத்­து­விட்டு குறிப்­பிட்ட காலத்­துக்குப் பின் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­ட­வர்கள் என்ற பெய­ருடன் விடு­தலை செய்­தி­ருந்­ தனர்.

புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு இணைந்து நடாத்­திய இந்த புனர்­வாழ்வுத் திட்­டத்தின் கீழ் போரா­ளி­களின் விருப்­பத்தின் பிர­காரம் 11022, முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு 10940, பேர் சமூ­கத்­து டன் இணைக்­கப்­பட்­டார்கள் என அரச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. சுமார் மூன்று வரு­டங்­க­ளுக்கு மேற்­ப­டாத வண்ணம் புனர்­வாழ்வு முறைகள் நெறிப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் பல்­வேறு பயிற்­சி­களும் அளிக்­கப்­பட்­டுள்­ளன எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட வேளை­களில் தான் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு இர­சா­யன உணவு, மற்றும் ஊசிகள் ஏற்­றப்­பட்­டுள்­ளன. இவர்கள் புனர்­வாழ்வு முகா­மி­லி­ருந்து வெளியே வந்த பின்பே முகாமில் என்ன நடை­பெற்­றுள்­ளது என்­பது பற்­றிய உண்­மைகள் வெளி­வ­ரு­கின்­றன. இவை பற்­றிய முறை­யான மருத்­துவப் பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட வேண்­டு­மென்று பல அர­சியல் பிர­மு­கர்­களும் சமூக அமைப்­புக்­களும் குரல் கொடுத்து வரு­கின்­றார்கள்.

இவ்­வி­வ­கா­ர­மா­னது தற்­பொ­ழுது அனல் கக்கும் பிரச்­சி­னை­யாக மாறி­வ­ரு­வ­துடன் இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு சங்­க­டத்தை உண்டு பண்ணும் தக­வ­லா­கவும் மாறி­யி­ருக்­கி­றது. போராளி ஒரு­வரால் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும். இக்­குற்­றச்­சாட்­டுக்­களை அர­சாங்கம் வன்­மை­யாக மறுப்­ப­துடன் இரா­ணுவ ஊடகப் பேச்­சா­ள­ரான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜெய­வீர இதற்கு மறுப்புத் தெரி­விக்கும் வகையில் அறிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்­டுள்ளார். நாங்கள் பௌத்த தர்­மத்தை பின்­பற்­று­ப­வர்கள் மிரு­கங்­க­ளுக்கு கூட நஞ்சை ஊட்ட மாட்டோம் என காருண்ய வாதம் பேசி­யுள்ளார்.

புனர்­வாழ்வு முகா­மி­லி­ருந்து விடு­தலை பெற்று வந்த முன்னாள் போரா­ளி­களில் சிலர் திடீர் திடீர் என மர்­ம­ம­ய­மான நோய்­க­ளுக்கு ஆளாகி மரணம் அடைந்து வரு­கின்­றார்கள். இது­வரை நூற்­றுக்கு மேற்­பட்­ட­வர்கள் ஒரே வகை­யான நோய்க்கு ஆளாகி மரணம் அடைந்­துள்­ளனர் என்ற தக­வலும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த தக­வ­லுக்கு ஆரம்ப புள்­ளி­யிட்ட மர­ண­மாக விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் மாதர் அணித்­த­லை­வி­யாக இருந்த தமி­ழி­னியின் மரணம் காணப்­ப­டு­கி­றது. தமி­ழினி விடு­த­லை­யாகி சிறிது காலத்தில் இறந்து விட்டார் என்­பது ஊர் அறிந்த விட­ய­மாகும். இவரின் மரணம் பற்­றிய சந்­தே­கப்­பா­டுகள் கூர் நிலை பெற்ற போதும் அது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட முடி­யாத செய்­தி­யாக, வதந்­தி­யாக பர­வி­வந்­தி­ருக்­கி­றது.

இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய இன்­னு­மொரு விட­யத்தை அவ­தா­னிப்­பா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள். அது யாதெனில் இறந்த போரா­ளிகள் அனை­வரும் புற்­றுநோய் எனும் ஒரே வகை நோய்க்கு ஆளா­கியே மர­ணித்­துள்­ளார்கள் என்­பது அது­பற்­றிய இன்­னு­மொரு தக­வ­லாகும்.

முள்­ளி­வாய்க்கால் யுத்த மௌனிப்­புக்­குப்பின் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளிகள் இரா­ணு­வத்­திடம் சரண் அடைந்­துள்­ளனர். உற­வி­னர்களிடம் கைய­ளித்­துள்­ளனர். வணக்­கத்­துக்­கு­ரிய குரு­மா­ரு­டனும் சமூக நல­வா­ளர்­க­ளுடன் சேர்ந்து சென்று இரா­ணு­வத்­திடம் அடைக்­கலம் கோரியோர் உள்­ளனர். அது­வு­மின்றி வெள்ளைக் கொடி சகிதம் சரண் அடை­யுங்கள் என மறை­க­ரங்கள் கூறி­ய­தற்கு அமைய சரண் அடைந்­த­வர்கள் என ஏரா­ள­மா­ன­வர்கள் அது­வு­மன்றி மனை­வி­ய­ரு­டனும் தாய் தந்­தை­ய­ருடன் சென்று அடைக்­கலம் கோரி­ய­வர்­களும் இருந்­துள்­ளனர். இதற்குப் புறம்­பாக இரா­ணு­வத்­தி­னரால் இறுதி யுத்­தத்தின் போது கைது செய்­யப்­பட்­ட­வர்கள் என்ற இன்­னு­மொரு தரப்­பி­னரும் இந்தக் குழாத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­க­ளுக்கு வவு­னியா, மட்­டக்­க­ளப்பு கொழும்பு, அநு­ரா­த­புரம் என்ற பல்­வேறு இடங்­களில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புனர்­வாழ்வு முகாம்­களில் வைத்து மறு­வாழ்வு அளிக்­கப்­பட்­டது. சுமார் 30 வகை­யான பயிற்­சிகள் பல்­வேறு படி­நி­லை­களில் தங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­ட­தாக சில போரா­ளிகள் தெரி­வித்­தார்கள்.
பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­ட­வர்கள் பெற்றுக் கொண்­ட­வர்கள் சமூ­க­ம­ய­மாக்கல் என்ற கோதாவில் விடு­விக்­கப்­பட்­டார்­களே தவிர அவர்­க­ளுக்கு அவர்கள் சென்ற சமூகம் எப்­படி வர­வேற்­றது அவர்­க­ளு­டைய வாழ்­வியல் நிலைகள் எவ்­வாறு இருந்­தன என்­ப­தெல்லாம் விமர்­ச­னத்­துக்­கு­ரிய விட­ய­மா­கவே இருந்­துள்­ளது.

விடு­த­லை­யான போரா­ளிகள் சமூக ஆய்வு நிறு­வ­னங்­களால் பின்­வரும் வகையில் தரம் காணப்­பட்­டார்கள்.
1. பெண் போரா­ளிகள்
2. ஆண் போரா­ளிகள்
3. அங்­க­வீனம் அடைந்த போரா­ளிகள்
4. மன­நிலை பாதிக்­கப்­பட்ட போரா­ளிகள்

இவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் முன்னாள் போரா­ளி­க­ளாக இருந்து சமூ­க­ம­ய­மாக்கும் நோக்­குடன் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­ட­வர்கள். இவர்­களில் பெண் போரா­ளி­களின் அவ­லங்­களும் துய­ரங்­களும் எழுத்தில் வடிக்­க­மு­டி­யாத துய­ரங்­க­ளா­கவே இருக்­கின்­றன.

பொது­வாக போரா­ளி­களை மேற்­கூ­றப்­பட்ட வகைப்­ப­டுத்­த­லுக்குள் உள்­ளாக்கிக் கொண்­டாலும் அவர்கள் பல நிலைப்­பி­ரிவு கொண்­ட­வர்­க­ளாக போருக்குள் இணைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மாண­வர்கள், இளைஞர், யுவ­திகள், புத்­தி­ஜீ­விகள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், முதி­ய­தன்மை கொண்டோர்.

அனைத்துப் பிரி­வு­க­ளிலும் பெண்கள் உள்­ள­டங்கிக் காணப்­ப­டு­கி­றார்கள். பெண் போரா­ளிகள் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்ட போதும் அவர்கள் தாம் வாழும் சமூ­கத்­துக்குள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களும் உள­வியல் பாதிப்­புக்­களும் பல­வாகக் காணப்­ப­டு­கி­ன்றன. எனக்கு திரு­மணம் பேசப்­பட்­டி­ருந்­தது இந்தப் பிள்ளை எப்­ப­டி­யென்று அயல்­வீட்­டா­ரிடம் மாப்­பிள்ளை வீட்டார் விசா­ரித்­தி­ருக்­கி­றார்கள். இந்தப் பிள்ளை இயக்­கத்­தி­லி­ருந்­தது, உங்­க­ளுக்கு சரிப்­பட்­டு­வ­ராது என்று அயல் வீட்டார் கூறி­யதால் எனது கலி­யாணம் இடையில் நின்று விட்­டது. இன்­று­வரை இந்த நிலை­மையே தொட­ரு­கி­றது, இவ்­வாறு கூறினார் ஒரு பெண் போராளி.

முன்­பள்ளி ஆசி­ரி­ய­ராக கிரா­மத்தில் சேவை செய்து கொண்­டி­ருந்த நான் இயக்­கத்தில் இணைந்தேன். வன்னி இறுதிப் போர்­கா­லத்தில் சர­ண­டைய மக்­க­ளோடு மக்­க­ளாக செல்ல முற்­பட்­ட­போது தலை­முடி வெட்­டப்­பட்ட கார­ணத்­தினால் மக்கள் என்னை தங்­க­ளோடு சேர்த்துக் கொள்­ள­வில்லை. சரண் அடைந்­தபின் பம்மை மடு புனர்­வாழ்வு முகாமில் வைத்து சுமார் 1 ½ வரு­டங்கள் பயிற்சி அளிக்­கப்­பட்டோம். கம்­யூட்டர் பயிற்­சியை பெற்­றி­ருக்­கிறேன். போகு­மி­ட­மெல்லாம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்தேன். இவ்­வாறு தொல்லை தரு­வ­தனால் எமது திரு­மண வாழ்வு தடைப்­பட்டுப் போகி­றது. எமது சமூக வாழ்வு கேள்­விக்­கு­றி­யா­கி­றது. திரும்ப திரும்ப விசா­ர­ணை­யென்ற பெயரில் புல­னாய்­வா­ளர்கள் வரு­வ­தனால் நாங்கள் எமது பழைய வாழ்வை மறக்க முடி­யாமல் போகி­றது. தற்­பொ­ழுது ஓர­ளவு அமை­தி­கொண்­டி­ருக்­கிறோம் எனத் தெரி­வித்தார்.

மூதூர் முன்னம் போடி­வெட்டை முன் னாள் பெண் போராளி ஒருவர் இன்­னு­மொ­ரு­புறம் ஆண் போரா­ளிகள் என்ற வகையில் பெருந்­தொ­கை­யா­ன­வர்கள் வட­கி­ழக்கில் உள்ள எட்டு மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்­களின் வாழ்­வியல் போராட்­டங்­களும் சமூ­கத்­துக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய ஏனைய பிரச்­சி­னை­களும் அனர்த்­தங்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றது.

புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு முன்னாள் போரா­ளிகள் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டு­விட்­டார்கள். சமூய மய­மாகல் என்­பது எளி­தா­கி­விட்­டது என்று அர­சாங்­கமும் சமூக நல­வா­தி­களும் அர­சியல் தலை­வர்­களும் கூறி­வ­ரு­கின்ற போதும் அவர்கள் சமூ­கத்­துக்குள் இருந்து கொண்டு அனு­ப­விக்கும் துய­ரங்­களும் போராட்­டங்­களும் எவ்­வ­ளவு கொடு­மை­யா­னது என்­பதை இந்தப் போரா­ளி­களின் வாக்கு மூலங்கள் எங்­க­ளுக்கு இத­யத்தை உருக்­கி­விடும் வார்த்­தை­க­ளாகக் காணப்­ப­டு­கி­ன்றன.

எனக்கு இப்­போது 33 வயது நான் விடு­த­லை­யா­கி­வந்து ஆறு வரு­டங்களாகி­ன்றன. எனக்கு 50 வய­தா­னாலும் விசா­ரணை முடி­யாது போலி­ருக்­கி­றது. மாவி­லாறு யுத் தம் நடந்த போது இயக்­கத்தில் சேர்ந்தேன். இறுதி யுத்தம் நடை­பெற்ற போது திரு­கோ­ண­மலைக் கடற்­ப­ரப்பில் கடற்­ப­டையால் கைது­செய்­யப்­பட்டு பூஸா முகா­முக்குக் கொண்டு செல்­லப்­பட்டேன். வெலிக்­கந் தை புனர்­வாழ்வு முகாமில் வைத்து புனர்­வாழ்­வுக்கு ஆளாக்­கப்­பட்டேன். இன்று உடல் நல­மற்று பல­வீ­னப்­பட்டு வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றேன் என மூதூரை சேர்ந்த முன்னாள் போரா­ளி­யொ­ருவர் தெரி­வித்தார்.
1995 மண்டை தீவு தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வன்யான். 1996 இல் மட்­டக்­க­ளப்பைச்

சேர்ந்த முன்னாள் பெண் போரா­ளி­யொ­ரு­வரை திரு­மணம் செய்து கொண்டேன். 2009 இறுதி யுத்­தத்தின் போது சரண் அடைந்தேன். நானும் எனது மனை­வியும் புல்­மூட்­டையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சம­ண­கம முகாமில் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு எனது சொந்த ஊரான பள்ளிக் குடி­யி­ருப்­புக்கு வந்து சேர்ந்தோம். புல­னாய்வு பிரி­வினர் ஆயு­தங்­களை எடுத்துத் தரும்­படி வன்­னிக்கு கூட்டிச் சென்­றார்கள். கண்­டி­யி­லி­ருந்த 4 மாடிக்கும் கொண்டு செல்­லப்­பட்டோம். பல்­வேறு சித்தி­ர­வ­தை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்டோம். உடல் நிலை இய­லாத நிலையில் இன்னும் போராடிக் கொண்­டி­ருக்­கின்றேன். இது பள்­ளிக்­கு­டி­யி­ருப்பைச் சேர்ந்த போராளிக் குடும்­ப­மான கணவன் மனை­வியின் வாக்­கு­மூலம்.

இவ்­வாறு பொரு­ளா­தார ரீதி­யா­கவும் வாழ்­வியல் ரீதி­யா­கவும் சமூ­க­ரீ­தி­யா­கவும் பல்­வேறு இன்­னல்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் முன்னாள் போரா­ளிகள். இவர்­களில் ஊன­முற்ற உடல் உபா­தைக்கு உட்­பட்டு வாழும் ஆயி­ரக்­ க­ணக்­கான போரா­ளிகள் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் வாழ்ந்து கொண்­டி­ருப்­பது இன்­னொரு வகை துயர் ஓடிய சம்­ப­வங்­க­ளாகும்.
பூந­கரில் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் முன்னாள் போரா­ளியின் துயர் கூடிய வாழ்க்கை எம் நெஞ்சைப் பிழி­வது போலி­ருக்­கி­றது. கழுத்­துக்கு கீழே உணர்­வுகள் இழந்து எந்­த­வு­றுப்பும் பூர­ண­மாக இயங்­காத நிலையில் வாழ்வை மீட்கப் போராடும் யூட் ஜெயசீலன் படுக்­கையில் இருந்து கொண்டு உயிர் வாழ போராடும் போராட்­ட­மா­னது மிகக் கொடி­யது. பாட­சாலை செல்லும் மாண­வர்கள் தய­வால்தான் தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றேன் என அவர் தனது கதையைச் சொல்லி அழுது கொண்­டி­ருக்­கிறார். மூதூரில் உள்ள போராளி ஒரு­வ­ருக்கு இடுப்­புக்கு கீழ் இயங்க முடி­யாத நிலை. அவர் தனது சிறுநீர் கழிப்­பைக்­கூட இடுப்பில் தக­ர­டப்பா ஒன்றை கட்­டியே கழித்து வரு­கிறார்.

இவ்­விதம் முன்னாள் போரா­ளி­களின் வாழ்­வியல் போர்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் புனர்­வாழ்வு பெற்ற காலப்­ப­கு­தியில் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு ஊசி போடப்­பட்­டது. இர­சா­யன உணவு வழங்­கப்­பட்­டது என்ற விவ­காரம் தற்­போது சூடு பிடிக்கத் தொடங்­கி­யி­ருப்­ப­துடன் ஆயி­ரக்­க­ணக்­கான முன்னாள் போரா­ளி­க­ளுக்கு அச்ச உணர்­வையும் ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.
தங்­க­ளுக்கும் அவ்­வாறு விஷ ஊசி போடப்­பட்­டி­ருக்­குமா? இர­சா­யன உணவை உட்­கொண்­டி­ருப்­போமா? என்ற பய உணர்­வோடு அவர்கள் போராடும் மன­நிலை ஏற்­பட்­டுள்­ளது. புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளி­களின் அச்­சத்தைப் போக்கி நம்­பிக்­கை­யுடன் அவர்கள் வாழ்­வி­யலில் ஈடு­பட அனை­வ­ருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்­துவப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென தற்­போது பல அமைப்­புக்­களும் அர­சியல் தலை­வர்­களும் அர­சாங்­கத்தைக் கோரிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதிலும் இன்­னு­மொரு சங்­கடம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச தரம் வாய்ந்த மருத்­துவப் பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டு­மென்று கோரிக்கை விடப்­பட்­டி­ருக்­கிற நிலையில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ண சர்­வ­தேச தரம் வாய்ந்த மருத்­து­வர்கள் எமது நாட்­டி­லுள்­ளனர். அவர்­களைக் கொண்டு மேற்­படி நபர்­க­ளுக்கு மருந்­துவப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள அரசு தயா­ராக இருக்­கி­றது என கூறி­யி­ருக்­கிறார். இதற்­கி­டையில் ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தரும் முன்னாள் போரா­ளி­யு­மான கணே­ச­லிங்கம் சந்­த­ர­லிங்கம் (துளசி) பகி­ரங்­க­மான கோரிக்­கை­யொன்றை த.தே. கூ. அமைப்­பி­ன­ருக்கு விடுத்­துள்ளார். அது யாதெனில் இந்த விவ­கா­ரத்தில் த.தே.கூ. அமைப்பானது தலையிட்டு சர்வதேச மருத்துவர்களே முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ஆவன செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்.

விவகாரங்கள் இவ்வாறு முறுக்கு நிலை பெற்றுக் கொண்டு போகின்ற நிலை யில் கடந்த புதன்கிழமை (3.8.2016) திரு கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இவ்வாறு சமூகமயப்படுத்தப்பட்டவர் களில் 107 போராளிகள் இதுவரை மர்ம மான முறையில் மரணித்துள்ளனர் என உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங் கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அரசாங்கத்தின் சவாலை ஏற்றுக் கொண்டு முன்னாள் போராளிகள் 800 பேர் அரசாங்கத்தின் மருத்துவப் பரிசோத னைக்கு தயாராகி வருவதாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

இவ்வாறான நெருக்கடி நிலையில் வைத்திய பரிசோதனைக்கு ஆட்படுத்தப் படும் போராளிகளுக்கு உண்மையில் ஊசி போடப்பட்டுள்ளதா? இரசாயன உணவு வழங்கப்பட்டதா? என்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமாயின் அவ்விடையானது அரசுக்கு பாதகமாக இருக்குமாயின் இவ் விவகாரமும் இன்னுமொரு மனித உரிமை போருக்கு ஆயுதமாக்கப்படலாம். முன்னாள் போராளிகள் விவகாரம் இவ்வாறு உக்கி ரம் பெற்று சென்று கொண்டிருக்கின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் போரில் உற வினர்கள் முன்நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் ஆயிரக்கணக்கா னோர் எங்கே உள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்டதா? என்ற சந்தேகங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

- திரு­ம­லை ­நவம்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல