ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது.

என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தனது மகிழ்ச்சியை, துன்பத்தை, கொண்டாட்டங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளமுடியும்.

மேலும் லைக்ஸ், ஷேர், எண்ணிக்கை வரம்புமுறையற்ற வார்த்தைகள், கமெண்ட்ஸ் ஆகிய பயன்பாடுகள் தருவதாலையே ஃபேஸ்புக் அனைவருக்கும் பிடித்து போய் விட்டது. இதனால் நாம் ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்த எண்ணுகிறோம், அப்படி இருந்தும் சில சமயங்களில், ஃபேஸ்புக் விளம்பரங்கள், தேவையற்ற நேரத்தில் சாட் அழைப்புகள், போன்றவை நம்மை எரிச்சலின் உச்சத்திற்க்கே கொண்டுசெல்லும், அப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வேண்டியவர்கள் சாட் செய்தாலே கோபம் வரும், இது போன்ற ஃபேஸ்புக் இம்சைகளை சில டெக்னிக் முறைகளை வைத்து வெகு சுலபமாக கையாளலாம்.
1. உங்களை கடுப்பேற்றும் ஃபேஸ்புக் விளம்பரங்களை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ்-ல் சென்று இடதுபுற ஓரத்தில் உள்ள Ads- ஐ கிளிக் செய்து படம் 1-a வில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் எடிட் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
பின்பு படம் 1-b யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் Choose Settings - இல் off ஆப்ஷனை தேர்வு செய்து save செய்துவிட வேண்டும்.
2. சாட் செய்யும் போது 'seen' வார்த்தையை மறைப்பது எப்படி?
சிலரின் மெசேஜ்கள் நம்மை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும், எப்போது பாத்தாலும் மெசேஜ் செய்துகொண்டே இருப்பார்கள், நாம் பிஸி என்று சொன்னால் கூட விடமாட்டார்கள், ஆனால் அத்தகைய அனைவைரையுமே நண்பர்கள் பட்டியலை விட்டு நீக்கமுடியாது. அவர்கள் அனுப்பும் மெசேஜை பார்த்துவிட்டால், அவர்களுக்கு 'seen' காண்பித்துவிடும், நான் அனுப்புற மெசேஜை படிக்கிற ஆனா ரிப்ளே பண்ணமட்டேங்குற... அப்படின்னு சொல்லி நம்மை சாகடித்துவிடுவார்கள், அப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு எளிய வழி உள்ளது.
முதலில் உங்கள் கூகுள் குரோம் பிரவுசரில் ctrl+h கொடுத்து extension-ஐ படம் 2-b(a)மற்றும் 2-b(b) யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அதன்பின் வரும் extension search - இல் படம் 2-b(c)யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் facebook unseen என்று தேடினால், chrome unseen extension கிடைக்கும், இதனை படம் 2-b(d)மற்றும் 2-b(c)யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
தற்போது உங்கள் உலாவியின் வலதுபுற மேல் ஓரத்தில் சிறிய பாக்ஸ் ஒன்று படம் 2-d யில் காட்டியுள்ளது போல் இருக்கும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் யாரவது மெசேஜ் செய்தால், அந்த மெசேஜை படித்தால் அவர்களுக்கு தெரிந்துவிடும் என்ற கவலையே வேண்டாம், அவர்களுக்கு 'seen' காண்பிக்காது.
3. பெர்சனல் தகவல்களை மறைத்தே வைத்திருங்கள்:
உங்களுடைய பெர்சனல் தகவல்களை படம் 3-a வில் காட்டப்பட்டதுப்போல் எப்போதும் மறைத்தே வைத்திருங்கள் இது உங்கள் பாதுகாப்பிருக்கும், உங்களின் ஃபேஸ்புக் பாதுகாப்பிற்கும் மிக சிறந்தது.

4. குரூப் பிளாக் செய்துவிடுங்கள்
படம் 4-a வில் காட்டப்பட்டுள்ளதுப் போல் Advanced Chat Settings - இல் உங்களுக்கு மெசேஜ் செய்து தொல்லை கொடுக்கும் நபர்களை குரூப் பிளாக் செய்துவிடுங்கள்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ஃபேஸ்புக் இம்சைகளிடமிருந்து விடுபடுங்கள்.

Vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல