சனி, 5 நவம்பர், 2016

ரஜினி, ஷாருக் காட்டிலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டிய 10 இந்தியர்கள்!

நம்மளை பொறுத்தவரை நல்லதாகவே இருந்தாலும், உலகில் சாதித்தாலும், அது சினிமா பிரபலங்களாக இருந்தால் அதிகம் பேசுவோம், நாளிதழ்களிலும் அது பெரிய செய்தியாக வெளிவரும். இது அப்போதும் மாற்றப்படவில்லை, இப்போதைக்கும் மாற்ற முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.


இந்தியாவை உலக மேடைகளில் பலர் பெருமளவில் சிறப்பித்துள்ளனர். ஆனால், நமக்கு ஒருசில விளையாட்டில் ஜொலிக்கும் வீரர்கள், திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் சாதனைகள் மட்டும் தான் கண்முன்னே காட்டப்படுகின்றன.

அந்த வகையில், சினிமா பிரபலங்களை காட்டிலும், நாம் ஆஹா, ஓஹோ என கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய 10 இந்தியவர்கள்...

 ஜெகதீஷ் காந்தி

 ஜெகதீஷ் காந்தி! உலகின் பெரிய பள்ளியை துவக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS) என்ற பள்ளியை ஆரம்பித்தவர். கின்னஸ் புத்தகத்தில் ஒரு நடப்பாண்டில், ஒரு நகரில் ஒரே பள்ளியில் அதிக மாணவர் பதிவான பள்ளி என்ற சாதனை செய்தவர். 2010 - 2011-ல் 39,437 மாணவர்கள் ரெஜிஸ்டர் ஆகியுள்ளனர்.

 
பிரகாஷ் ஆம்தே 

பிரகாஷ் ஆம்தே சிங்கங்களுடன் பேசக்கூடிய நபர் என்ற பெயர் பெற்றவர் பிரகாஷ் ஆம்தே. தன் அன்பாலும், அக்கறையாலும், அச்சமூட்டும் விலங்குகளையும் அடக்குபவர். பழங்குடி முன்னேற்றத்திற்காக தன் மொத்த வாழ்வையும் அர்பணித்தவர். பழங்குடி மக்கள் நம்ம ஆரோக்கியம், கல்வி பெற வேண்டும் என உழைப்பவர்.

சார்ல்ஸ் கோரியா

சார்ல்ஸ் கோரியா! நல்ல செல்வாக்கும், சக்திய வாய்ந்த கட்டிட கலைஞர்களில் ஒருவர் சார்ல்ஸ் கோரியா.மும்பை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தனது திறமையை நிரூபித்தவர் சார்ல்ஸ் கோரியா.

முத்து

முத்து! தமிழ் இலக்கியங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய பெரிதும் உதவியவர் முத்து ஐயா. இதற்காக ஜப்பான் அரசு முத்து ஐயா படம் பதித்த தபால்தலையை கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்டது.

அஜித் டோவல்

அஜித் டோவல்! அஜித் டோவல் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரியும் ஆவார்.பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் இவர் தான் ஞாபகத்திற்கு வருவார்.

மிகவும் ஆக்ரோஷமான திட்டமிட்ட பேச்சை வெளிப்படுத்துவதில் வல்லவர். மீண்டும் ஒருமுறை மும்பையில் தாக்குதல் நடந்தால், நீங்கள் பலூசிஸ்தானை இழக்க நேரிடம் என எச்சரித்தவர்.

ரவீந்திர கவுசிக் 

ரவீந்திர கவுசிக் பாகிஸ்தானில் அண்டர்கவர் ஆபிசராக பணியாற்றியவர். இந்தியாவிற்கும், இந்தியா இராணுவத்திற்கும் பாராட்டும் வகையில் பணியாற்றிய இவர், இளம் வயதிலேயே இதய நோய் மற்றும் காசநோய் காரணத்தால் முல்தான் மத்திய சிறையில் இறந்தார்.

டெஸ்சி தாமஸ்

டெஸ்சி தாமஸ்! பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்சி தாமஸ். தொலைதூர அணு ஆயுத தயாரிப்பில் பெரும் பகுதி வகித்தவர் இவர். அக்னி V, அக்னி IV ஏவுகணை பிராஜெக்ட்களில் வேலை செய்தவர்.

சுபோத் குமார் சிங்

சுபோத் குமார் சிங்! வாரணாசியில் இருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் சுபோத் குமார் சிங்.இவர் 80% நோயாளிகள் / பயனாளிகளுக்கு இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இவர் மருத்துவம் செய்து வருகிறார்.

 நாகா நரேஷ்

நாகா நரேஷ்! நாகா நரேஷ் சிறு வயதிலேயே விபத்தில் கால்களை இழந்தவர். ஐ.ஐ.டி மெட்ராஸில் படிப்பை முடித்தவர். கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சுனிதா கிருஷ்ணன் 

சுனிதா கிருஷ்ணன் எட்டு நபர்களால் கூட்டு பலாத்கார சம்பவத்தில் கற்பழிக்கப்பட்ட பெண். இதனால் இவர் துவண்டுவிடவில்லை. இவர் ஒரு அமைப்பை ஆரம்பித்து பாலியல் தொழில் மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் சிக்கிய பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.பிரபல TED நிகழ்வில் இவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார்.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல