ஞாயிறு, 20 நவம்பர், 2016

வெறும் ரூ.20க்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் மரணம் - கலங்கிய மக்கள் கூட்டம்..!

உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சுகிறார்கள். காரணம் ஒரு சாதாரண காய்ச்சலாக இருந்தால் கூட அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வைத்து நம்ம பர்ஸை ஓட்டைப்போட்டுவிடுகிறார்கள்.


அத்தனை பரிசோதனைகளையும் செய்த பிறகு உங்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்கிறார்கள். காய்ச்சலுக்கே பர்ஸ் ஓட்டையாகிவிடும் நிலையில் ஏதாவது பெரிய பிரச்சனை என்றால் சொல்லவா வேண்டும்.

டாக்டருக்கு படிக்க பல லட்சம் ஏன் கோடிகள் கூட செலவிடப்படுகிறது, அதன் காரணமாக இன்றைய உலகில் மருத்துவம் பெரும் வணிகமாகவே நடந்து வருகிறது, இப்படிப்பட்ட நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் ஏழை மக்களுக்கு 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தவர் தான் டாக்டர். பால சுப்பிரமணியன், இதனாலேயே இவரது பெயரே “20 ரூபாய் டாக்டர்” என்ற பெயரே நிலைத்து விட்டது. இவரை மக்கள் டாக்டர் என்றும் அழைக்கின்றனர்.

ஆரம்பத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த இவர், விலைவாசி ஏற்றம் காரணமாக 20 ரூபாயையே கட்டணமாக வாங்கி வந்துள்ளார். இதிலும் 20 ரூபாய் கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இவர் இலவசமாகவே வைத்தியம் பார்த்தும் வந்துள்ளார், மருந்து மாத்திரைகளையும் இலவசமாகவே அளித்து உதவியுள்ளார். இதனால் இவரது நண்பர்கள் இவருக்கு உதவி புரிந்துள்ளனர்.

சாதாரணமாகவே மருத்துவர்களிடம் சென்றால் 100, 300 என கட்டணம் வாங்கப்படும் சூழ்நிலையில், டாக்டர். பாலசுப்பிரமணியன் மட்டும் மலிவு விலைக்கு மருத்துவம் பார்த்ததால் இதர மருத்துவர்களின், எதிர்ப்புக்கும் ஆளாகினார், தன்னை நம்பியிருக்கும் மக்களுக்காகவே இவர் விடுப்பு எடுக்காமல் தினமும் தனது மருத்துவமனைக்கு வந்துவிடுவார்.

இந்த நிலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, டாக்டர். பாலசுப்ரமணியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். டாக்டர் மரணம் அடைந்தது தெரியாமல், வழக்கம் போல் அவரை நம்பியிருந்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர். பிறகு விஷயத்தை கேள்விப்பட்டு பதறியடித்து அவரது வீட்டுக்கு சென்றனர், விஷயம் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கண்ணீருடன் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் பல பகுதிகளிலும், 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டாக்டர் பாலசுப்பிரமணியனின் மருத்துவமனை வாசலில் மெலுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஒரு சாதாரணமானவரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் தவித்தது, இவரின் மரணத்திற்காக மக்கள் கலங்கியதை பார்க்கையில், உண்மையில் இவரை மனிதரில் புனிதராக பார்க்கவே செய்கிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல