திங்கள், 14 நவம்பர், 2016

ஸ்ரீலங்காவில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) மறுசீரமைப்புச் செய்யப்படுகிறது:

தற்போதுள்ள சட்டம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இழிவு படுத்தப்படுவது பற்றிய அதிர்ச்சி தரும் புதிய அறிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஸ்ரீலங்கா சர்ச்சைக்குரிய 1951ம் ஆண்டின் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை (எம்.எம்.டி.ஏ) மறுசீரமைப்பு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது, 61 பக்கங்களைக் கொண்ட ஒரு மோசமான அறிக்கை இந்த முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) காரணமாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பல சம்பவங்களின் இழிவான பக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளது, அது முஸ்லிம் பெண்களை பாரபட்சப்படுத்தி அவர்களை நாட்டின் குடிமக்களிலும் சமத்துவம் குறைந்தவர்களாக மாற்றியுள்ளது. ஸ்ரீலங்காவுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகளை வழங்குவதற்குரிய ஒரு நிபந்தனையாக இந்த சட்டத்தை திருத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது என்று பரபரப்பாக பேசப்படுவதற்கு மத்தியில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது. அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் பெறுவதற்கு அத்தகைய நிபந்தனைகள் எதுவும் இணைக்கப்படவில்லை, சர்வதேச உடன்படிக்கைகளில் ஸ்ரீலங்கா சில முன்னேற்றங்களைக் காண்பிக்க வேண்டியுள்ளது, அவற்றில் சில குடும்பச் சட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவது மற்றும் முஸ்லிம்களின் விவாக வயதை உயர்த்துவது போன்றவை மறுசீரமைக்கப் படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.



சமத்துவமற்ற குடிமக்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்: ஸ்ரீலங்காவில் முஸ்லிம் பெண்கள் நீதிக்காகவும் மற்றும் சமத்துவத்துக்காகவும் போராடுவது பற்றி அந்த மனித உரிமைகள் பிரதேசத்தில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் பல சம்பவங்களை அம்பலப் படுத்தியுள்ளார்கள், அங்கு 14 வயது பிராயமுடைய பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு அவர்களின் கணவன்மார்களின் கைகளினால் பாலியல் மற்றும் உடல் சம்பந்தமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள், அதேவேளை அநேக சந்தர்ப்பங்களில் விவாகரத்து பெறுவது இந்தப் பெண்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.

பல சம்பவங்களை ஆய்வு செய்த இந்த விரிவான அறிக்கை வெளிப்படுத்துவது, எப்படி இந்த இளம் பெண்கள் ஒன்றில் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப் பட்டார்கள் அல்லது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை, திருமணத்துக்கு பின் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்கள் இரண்டும் சீதனப் பிரச்சினை உட்பட பல காரணங்களுக்காக நடத்தப்பட்டுள்ளன. ஒரு சம்பவத்தில் ஒரு 15 வயதுப் பெண்பிள்ளையை மசூதிக் குழுவினர் அவள் கெட்ட நடத்தை உள்ளவள் என்று காரணம் கூறி அவளை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளார்கள், அவள் குற்றம் எதுவும் செய்யாதவளாக இருந்தபோதும் அவளை தொந்தரவு செய்துவரும் ஒரு மனிதன் தன்னை திருமணம் செய்யும்படி அவளிடம் கேட்டு வந்துள்ளான், அவளுடைய வீட்டுக்குள் நுழைந்து அவள் உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை அவளைக் களங்கப்படுத்தவும் முயன்றுள்ளான்;.

இந்தச் சம்பவம் பற்றி அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது, “கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு 15 வயதுப் பெண், அவளுடைய கிராமத்தில் உள்ள ஒரு மனிதனால் தொடர்ந்து தொந்தரவுக்கு உள்ளாகிவந்தாள், அவன் தன்னை திருமணம் செய்யும்படி அவளிடம் கேட்டுள்ளான். அவள் இன்னும் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்ததால் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லாததால், அவள் தொடர்ந்து அதை மறுத்து வந்துள்ளாள். ஒருநாள் அவள் வீட்டில் தனியாக இருந்த சமயம் அந்த மனிதன் அவளது வீட்டுக்குள் நுழைந்து அவள் உடை மாற்றிக் கொண்டிருந்த சமயம் அவளை பலவந்தப்படுத்த முயற்சித்துள்ளான். அவள் கூக்குரலிட்டதை தொடர்ந்து அயலவர்கள் வெளியிலிருந்து அவளது உதவிக்கு வந்துள்ளார்கள், வந்தவர்கள் அவளது படுக்கை அறையில் அந்த மனிதன் இருப்பதைக் கண்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் அந்த மனிதனையும் அந்தப் பெண்ணையும் மசூதிக் குழுவிடம் அழைத்துச் சென்றுள்ளார்கள் மற்றும் மசூதிக் குழுவினர் இப்போது அந்தப் பெண்ணுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதென்றும் அதனால் வேறு யாரும் அவளைத் திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்கிற காரணத்தை அடிப்படையாககக் கொண்டு அந்த மனிதனையே திருமணம் செய்யும்படி அந்த பெண்ணை வற்புறுத்தினார்கள். அந்தப் பெண் அதற்கு மறுத்தபோதும் கட்டாயமாக திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள், ஏனென்றால் அது மசூதிக் குழுவின் உத்தரவு அவளது குடும்பத்தாரால் அதை எதிர்க்க முடியாது. திருமணத்துக்குப் பின்னர் அந்த மனிதன் அந்தப் பெண்ணுடன் ஒரு மாதம் மட்டுமே இருந்தான், அதன்பின் அவளை கைவிட்டு விட்டான். பாடசாலையை கைவிட்ட அந்தப் பெண் கடந்த இரண்டரை வருடங்களாக தனியே வாழ்ந்தபடி தனது குடும்பத்தின் சிறிய உதவியுடன் தன்னைக் காப்பாற்றி வருகிறாள்”.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கணவன் தனது 16 வயதான மனiவியை தலைக்கவசத்தால் தாக்கி தீவிர காயங்களை அவளுக்கு ஏற்படுத்தி உள்ளான், ஏனென்றால் அவள் தனது தாய் மற்றும் சகோதரனிடம் எஞ்சியுள்ள தங்கள் சொத்துக்களை விற்று அவனுக்கு பெருந்தொகையான சீதனத்தை வழங்கும்படி கேட்க அவள் மறுத்துவிட்டாள் என்பதற்காக.

அந்த அறிக்கையில் இந்த விடயம் சம்பந்தமாக விபரிக்கப் பட்டிருப்பது: கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு 16வயதுப் பெண் அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு மனிதன் அவளுடைய தாயார் மற்றும் சகோதரனிடம் ஒரு திருமணப் பேச்சு வார்த்தையை மேற்கொண்டதையடுத்து அந்த மனிதனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். அந்த மனிதன் ஒரு பெரிய கைக்கூலி(சீதனம்) கேட்டதையடுத்து அந்தக் குடும்பம் அவர்களது காணித்துண்டில் பாதியை விற்று அவனுக்கு ஒரு உந்துருளி வாங்கிக் கொடுத்ததுடன் மீதிப்பணத்தை அவன் கேட்ட கைக்கூலியாகவும் வழங்கியது. நிக்காஹின் பின் அவள் அவனுடன் வாழ்வதற்கு சென்றாள். திருமணத்தின் பின் மூன்றாம்நாள் அந்த மனிதன்; எஞ்சியுள்ள காணி மற்றும் சொத்துக்களை விற்று பணத்தை தன்னிடம் தரும்படி அவளது குடும்பத்திடம் கேட்டு வரும்படி அந்தப் பெண்ணுக்கு அழுத்தம் கொடுக்கலானான். இதற்கு அந்தப் பெண் அவர்கள் அதை விற்றால் அவர்கள் வாழ்வதற்கு வேறு இடம் எதுவும் இல்லை என தெரிவித்து அதை ஏற்க மறுத்துவிட்டாள். அப்போதுமுதல் அந்த மனிதன் உடல் ரீதியாக பலமான தாக்குதல்களை அவளுக்கு மேற்கொள்ள அரம்பித்தான், மற்றும் திருமணத்தின் பின் 10ம் நாள் அவளை ஒரு தலைக்கவசத்தால் தாக்கி தீவிரமான காயங்களை ஏற்படுத்தியதால் அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டியதாகிவிட்டது. குடும்ப வன்முறைகள் பற்றி அந்நியரிடம் தெரிவிப்பதற்கு அவமானமும் அச்சமும் உண்டானதால் வைத்தியசாலையில் தனக்கு ஏற்பட்ட காயங்கள் தான் கீழே விழுந்ததால் எற்பட்டது என அவள் தெரிவித்துவிட்டாள். அதன்பின் அவளது கணவன் அவளை அவள் தாய்வீட்டில் கொண்டு சென்று விட்டதுடன் அதன்பின் அவளைக் கைவிடவும் செய்தான். இப்போது அவளது 18ம் வயதில் அவள் ஒரு பாசா விவாகரத்தை கேட்டுப் பெற்றுள்ளாள், ஆனால் அந்த உந்துருளியை தவிர அவள் கொடுத்த கைக்கூலி எதையும் திரும்ப பெற இயலவில்லை”.

அந்த அறிக்கை பிரதானப்படுத்தியிருப்பது, சீதனம் இஸ்லாமிய நடைமுறைகளில் ஒன்றாக இல்லாதிருப்பது மாத்திரமல்ல, ஆனால் அது முஸ்லிம் பெண்களையும் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் கடுமையாக பாதிப்பதால் அது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று. எனினும் தற்போதுள்ள பின்னணியில் அந்த நடைமுறையை அகற்றும் வகையில் அனைத்து கைக்கூலி கொடுக்கல் வாங்கல்களும் (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வகை) கடுமையான மற்றும் கட்டாய பதிவு செய்வதை திருமணம் பதிவு செய்யும்போது உறுதிப்படுத்த வேண்டும். “வழங்கப்படும் கைக்கூலியை திருமணம், பிரிந்து வாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற எந்தக் காலகட்டத்திலும் திரும்ப பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் தெளிவான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தால் (எம்.எம்.டி.ஏ) நிர்வகிக்கப்படும் குவாஸி நீதிமன்ற அமைப்பினால் முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் பயங்கரங்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. மற்றொரு சம்பவத்தில், சிறுபான்மை ஷியா பிரிவில் உள்ள ஒரு பெண் அதே சமூகத்தில் உள்ள ஒரு மனிதனை திருமணம் செய்தாள், திருமணத்தின் பின்னான முதல் இரண்டு மாதங்களும் உணர்வுபூர்வமான துஷ்பிரயோகம் மற்றும் கட்டுப்படுத்தும் பழக்க வழக்கங்களை அவளது கணவரினால் அனுபவிக்க நேரிட்டது, அதேபோல உடல் துஷ்பிரயோகங்களும் உச்சக்கட்டத்தை அடைந்தது. அத்தகைய திருமணத்தினை அவளால் தொடர இயலாது போனதால் அவள் தனது கணவனைப் பிரியவேண்டி நேரிட்டது. சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் துஷ்பிரயோக அனுபவங்கள் காரணமாக திருமண வாழ்க்கைகக்கு மீண்டும் திரும்புவதில்லை என அவள் முடிவெடுத்தாள், ஆனால் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் (எம்.எம்.டி.ஏ) கீழ் அவளால் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசா விவாகரத்தை பெறமுடியவில்லை, அதன் சட்டப்பிரிவுகளின் கீழ் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் விவாகரத்துக்கு கணவனின் சம்மதமும் அவசியமாக உள்ளது. அவளுக்கு அவளது குடும்பம், சமூகம் மற்றும் மதத் தலைவர்களிடம் இது தொடர்பாக வலிமையான ஆதரவு கிடைத்தது, அவர்கள் அவளது கணவனிடம் விவாகரத்துக்கு அனுமதி வழங்கும்படி எண்ணற்ற அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள் எனினும் இதற்கு மாறாக கணவன் மூன்று வருடங்களாக சாதாரணமாக விவாகரத்தை வழங்கவில்லை, ஏனென்றால் சட்டத்தில் அந்தப்பிரிவு தொடர்பான (எழுதப்படாத)விதிகள் அதை நிறுத்தி வைப்பதற்கான உரிமையை அவனுக்கு வழங்கியுள்ளது.

இன்னொரு சம்பவத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 14ம் வயதில் பாடாலைக்கு செல்வதை நிறுத்தியவுடன் திருமணம் செய்து கொண்டாள். திருமணமாகி சில மாதங்களின் பின்னர் அவளது கணவனின் கடுமையான பாலியல் தொல்லைகள் காரணமாக அவள் ஒரு பாசா விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள். அந்த வழக்கை உணர்வுபூர்வமாகவும் மற்றும் பொருத்தமான வகையிலும் குவாஸி நீதிமன்றம் விசாரிப்பதற்குப் பதிலாக இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாலியல் வன்முறை தொடர்பான தனித்துவமான விவரங்களைப் பெறுவது தொடர்பான விசாரணையை தெரிவு செய்தது, அது அந்தப் பெண்ணை மேலும் கடுமையான உளவியல் தாக்கத்துக்கு உட்படுத்தியது அதன் காரணமாக அவள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டதுடன் கடுமையான மன உளைச்சலையும் எதிர்கொண்டாள்.

அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம், சமயம், இனம் என்பனவற்றை கருத்தில் கொள்ளாது, அனைத்து குடிமக்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உறுதிப்படுத்த வேண்டும் என்று. மேலும் இஸ்லாமிய நீதி பரிபாலனம் ஒரு குறிப்பிட்ட வயதை நிர்ணயிக்காததால் சில கல்விமான்கள் கூட எந்த ஒரு வயதையும் நிர்ணயிப்பதற்கு அனுமதியில்லை எனக் கருதுகிறார்கள், அதனால் அரசாங்கம் ஏனைய குடிமக்களுக்கு உள்ளதைப்போல முஸ்லிம்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொளவது கட்டாயமாகும்.

“தனிமையானதோ அல்லது அதிகமானதோ வழக்குகளின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் நோக்கினால் குறைந்த வயது திருமணம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) தரும் சட்ட மறைப்பை அகற்றி இதற்கு தீர்வு காணவேண்டியது அவசியம்” என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை மேலும் விமர்சிப்பது, “முஸ்லிம்களுக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயம் செய்வதற்கு சிலர் சாதகமாக இல்லாமலிருப்பதை, அவர்கள் அமெரிக்காவிலுள் சில மாநிலங்களை அடிக்கடி உதாரணம் காட்டுகிறார்கள், அங்கு திருமணத்திய்கான குறைந்தபட்ச வயது குறைவாக உள்ளது, சிறுவர் உரிமைகளைப் பொறுத்தவரை அது மேற்கின் போக்கிரித் தனத்திற்கான முயற்சி என அழைக்கப்பட வேண்டியது. எனினும் உண்மை என்னவென்றால் அல்ஜீரியா, ஜோர்தான், மொராக்கோ, துனிசியா, துருக்கி மற்றும் லெபனான் போன்ற பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு அமைவாக திருமணத்திற்கு குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயித்துள்ளதை அதே வகையில் ஒருபோதும் கருதக்கூடாது” என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கை மேலும் தெரிவிப்பது, முஸ்லிம் அரசியல்வாதிகள், மத தலைவர்கள், அதேபோன்ற சில தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டச் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக உள்ளது முஸ்லிம்களின் குறைந்தபட்ச திருமண வயது வரம்பை முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே முடிவுசெய்து மற்றும் அதை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்துக்கு ஆணையிடவேண்டும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனினும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது என்பது முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளேயே ஒரு போட்டியான தலைப்பு மற்றும் அது மிகவும் அகநிலைக் கண்ணோட்டம் மிக்கது, மற்றும் குறைந்தபட்ச வயதுவரம்பை நிறுவுவதை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் பல்வேறு கட்சியினரது இறையியல் கண்ணோட்டத்தில் அது தங்கியுள்ளது.

“ஆகவே தற்போதைய சூழலில் ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினது அனைத்து பங்காளர்களும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 என்று உயர்த்துவதை ஏற்றுக்கொண்டு ஒருமித்த ஒரு கருத்துக்கு வருவது சாத்தியமில்லை, எனவே அரசாங்கம்தான்; அனைத்து குடிமக்களினதும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லையை முடிவு செய்யவேண்டும். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியமான கடமை, அனைத்து குடிமக்களும் அவன் அல்லது அவளின் கலாச்சாரம்,பாரம்பரியம் மற்றும் மத சுதந்திரம் என்பனவற்றை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்து அங்கீகரிக்க வேண்டியது ஆகும். எனினும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது வரம்பை நிறுவுவது போன்ற விதிகள் சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்புக்கு உட்பட்டது, கலாச்சாரம் மதம் என்பனவற்றின் பெயரால் அது விட்டுக்கொடுக்கப்படக்கூடாது” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

ஸ்ரீலங்கா அனைத்து சர்வதேச மனித உரிமைகள் உபகரணங்களுக்கு இடையில், சிறுவர் உரிமைகள் உடன்படிக்கை (சி.ஆர்.சி) 24 மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாட்டையும் அகற்றும் உடன்படிக்கை(சி.ஈ.டி.ஏ.டபிள்யு) என்பனவற்றிற்கு ஆதரவான கட்சியாகும் மற்றும் அதன்படி சர்வதேச வரைமுறைகளுக்கு எற்ப சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. சிறுவர் உரிமைகள் உடன்படிக்கை, 18 வயதுக்கு குறைந்தவர்கள் யாவரும் குழந்தைகள் என அங்கீகரிக்கிறது மற்றும் விதி 2 வெளிப்படுத்துவது, மதம, இனம் மற்றும் பால் உட்பட எந்த அடிப்படையிலும் எந்த ஒரு குழந்தையும் அநீதியான முறையில் நடத்தப்படக்கூடாது என்று. அதன் 19ம் விதி வெளிப்படுத்துவது, உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ பாதிப்புக்கு உள்ளாவது, தவறாக நடத்தப்படுவது, உட்பட அனைத்து வடிவத்திலான வன்முறைகளிலும் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று. பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான பாகுபாட்டையும் அகற்றும் சட்டத்தின்படி குறைந்த வயது மற்றும் கட்டாய திருமணங்கள் ஒரு தீங்கான நடைமுறை அதை குறைக்க மற்றும் அகற்ற அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவாக முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) தொடர்பாக அதன் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த சட்டத்திலும் அதை நடைமுறைப் படுத்துவதிலும் தீவிரமான குறைபாடுகள் உள்ளன. சமூகத்தில் உள்ள பெண்கள் மற்றும் யுவதிகளின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்மாறான தாக்கத்தை கொண்டுள்ளது. அரசியலமைப்பு விதி 16(1) போன்றவை, சட்ட அம்சங்களின் கீழ் பாகுபாட்டுக்கு எதிராக சீர்படுத்தலை தேடுவதினால் பாதிப்படைந்தவர்களைப் பாதுகாப்பதுடன் மற்றும் முஸ்லிம் பெண்கள் குடிமக்களிலும் குறைவானவர்களாக மதிக்கப்படுவதையும் தடுக்கிறது. பாரிய முரண்பாடுகளுக்கு எதிராக சீர்தீருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் பெண்கள் நடத்தும் போராட்டம்,நீண்ட பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும் அர்பணிப்புள்ள சில ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தவும் வழிவகுத்திருக்கிறது, ஆனால் அது வரம்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கை கோடிட்டு காட்டியிருப்பது, ஸ்ரீலங்காவில் அரசாங்கத்தின் பிரதான கடமை, அரசாங்கத்தினால் நிறுவப்பட்டு, நிருவகிக்கப்பட்டு மற்றும் நிதியளிக்கப்பட்டு வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) மற்றும் குவாசி நீதிமன்ற அமைப்பு என்பனவற்றால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுதான் என்று.

“ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு அரசாங்கத்தின் சட்டங்கள் குடிமக்களின் உரிமையை பாதுகாப்பதுடன் மற்றும் அதற்குப் பதிலாக மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாரபட்சம் மற்றும் அநீதி என்பனவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறது என்பதை உறுதிப் படுத்துவதே. இது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் எந்த மத அல்லது இன குழுக்களுக்கு, குடிமக்களின் தனிமனித மற்றும் அடிப்படை உரிமைகள் அந்த குழுவினர் சார்ந்துள்ள கலாச்சாரம் மற்றும் மத உரிமைகள் என்பனவற்றின் பெயரால் இல்லாமல் செய்யும் முடிவை மேற்கொள்ளும் உரிமையை வழங்க கூடாது. விசேடமாக ஒரு ஜனநாயக நாட்டில் மதசார்பற்ற சட்டங்கள் இயல்பானவை, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயமாகப் பிரயோகிக்கப்பட வேண்டியவை. சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் அதாவது திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது போன்றவைகளில், ஸ்ரீலங்கா அரசாங்கம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்களை முன்னேற்றுதல் என்பனவற்றுக்கு அமைவாக எல்லா குடிமக்களுக்கும் பொருத்தமான ஒரு வயதை நிர்ணயம் செய்வதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும். சிறுவர் உரிமைகளுக்கு முன்பாக கலாச்சார மற்றும் மத உரிமைகளை முன்னிலைப் படுத்துவது மற்றும் வயதுக்கு வராத முஸ்லிம் சிறுவர்களை குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுக்க சட்டப்படி அனுமதிப்பது மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு சட்டப்படி விதிவிலக்கு வழங்குவது என்பன அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் தண்டனைக் கோவை என்பனவற்றின் கீழ் பாரிய மீறலாகும் இவை அனைத்தும் அரசாங்கத்தின் பொறுப்பின் கீழுள்ளவை” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் பிரதானப் படுத்தப்பட்டிருப்பது, ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் (எம்.எம்.டி.ஏ) கீழ் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் ஏனென்றால் அதற்கு அவர்கள் சார்ந்துள்ள மதம் காரணமாகிறது, ஆனால் அதன் விளைவாக பெண்களை சட்டத்தின் முன் சம பாதுகாப்புள்ளவர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்களாக்கி அவர்கள் கீழ்பட்டிருப்பதை வலுப்படுத்த ஆணாதிக்கம் மற்றும் அதிகாரம் என்பன மதம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில்; (எம்.எம்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் முஸ்லிம் அடையாளத்தை அழித்துவிடும் என்கிற வாதம் ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கருத்து என்பதுடன் அது முஸ்லிம் ஆண்களுக்கு பெண்களைவிட அதிக சலுகைகளை வழங்குகிறது மற்றும் அந்த வாதம் நடைமுறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

(இந்த அறிக்கை ஹயிசியாமா ஹமீன் மற்றும் ஹஸ்னா சேகு இசடீன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஹமீன் ஒரு பாலின ஆலோசகர் மற்றும் சுயாதீன ஆய்வாளராக உள்ள அதேவேளை இசடீன் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலராக உள்ளார்.)

முன்ஸா முஸ்தாக்


மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல