வெள்ளி, 18 நவம்பர், 2016

கைதான இளை­ஞர்கள் மீது புலி முத்­திரை குத்­து­வது நியா­யமா?

ஆவா குழு உறுப்­பி­னர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளோரில் 11 பேரை எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்­டி­கல உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­துடன் இரு­வரை பிணையில் விடு­வித்­தி­ருக்­கின்றார். கடந்த இரு வாரங்­க­ளாக யாழ்ப்­பா­ணத்தில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் இந்த 13 பேரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவர்­களின் விளக்கமறியல் காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.



கைது செய்­யப்­பட்ட 13 பேரும் நேற்று முன்­தினம் கொழும்பு நீதி­மன்ற நீதிவான் அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர் சிறப்பு விசா­ரணை அறிக்­கை­யொன்­றினை மன்றில் சமர்ப்­பித்­துள்­ளனர். ஆவா குழு­வி­னரின் நோக்கம் அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யத்­திற்கு உட்­ப­டுத்­து­வ­தே­யாகும் என்­பது சாட்­சி­யங்­களின் ஊடாக உறு­தி­யா­கி­யுள்­ளன. புலம்­பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் ஆலோ­சனை மற்றும் நிதிப்­பங்­க­ளிப்­புடன் இந்தக் குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக ஆவா எனும் பெயரில் ஆயு­தக்­குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது என்று அந்த அறிக்­கையில் பயங்­க­ர­வாதப் புல­னாய்வுப் பிரி­வினர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இந்த வழக்கு விசா­ர­ணையின் போது சந்­தே­க­ந­பர்­களின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­வதைப் போன்று புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட ஒரு­வரோ பலரோ இந்தக் குழு­வுடன் இணைந்து செயற்­பட்­டி­ருப்­பினும் கூட இந்த சந்­தேக நபர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை எப்­படி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்க முடியும் என்று கேள்வி எழுப்­பி­யுள்­ள­துடன் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட ஒருவர் தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழ் கூறப்­பட்­டுள்ள குற்­ற­மொன்­றினை புரிந்தால் அது தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழேயே விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். வாளால் வெட்டி காயப்­ப­டுத்­து­கின்­றமை மற்றும் அச்­சு­றுத்­து­கின்­றமை ஆகி­யன தண்­டனை சட்­டக்­கோவையின் கீழ் உள்ள குற்­றங்­க­ளாகும். அவை தொடர்பில் எப்­படி பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அமுல்­ப­டுத்த முடியும். இந்த அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அடிப்­படை அற்­ற­வ­கையில் இந்த இளை­ஞர்­களை கைது­செய்­துள்­ளனர் என்று வாதிட்­டுள்ளார்.

யாழ். குடா­நாடு உட்­பட வடக்கில் ஆவா குழுவின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­தி­ருந்­தன. இதனால் மக்கள் மத்­தியில் பெரும் அச்­ச­நிலை உரு­வா­கி­யி­ருந்­தது. கடந்த மாதம் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் பல்­கலைக்­க­ழக மாண­வர்கள் இருவர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து சுன்­னாகம் நகரில் வாள்­க­ளுடன் வந்த குழு­வொன்று கடை­யொன்றில் அட்­ட­காசம் செய்­த­துடன் அங்கு சிவில் உடையில் பணி­யி­லி­ருந்த பொலிஸார் இருவர் மீதும் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தது. இந்த சம்­ப­வத்தை அடுத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் உயி­ரி­ழப்­புக்கு பழி­வாங்கும் வகை­யி­லேயே பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தாக ஆவா குழு எனும் பெயரில் உரி­மையும் கோரப்­பட்­டி­ருந்­தது.

இந்தச் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் பல்­வேறு வாள்­வெட்டு சம்­ப­வங்­களும் குடா­நாட்டில் இடம்­பெற்­றன. இத­னை­ய­டுத்து அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சாளர் ரா­ஜித சேனா­ரட்ண முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­தலின் பேரி­லேயே இந்த ஆவா குழு உரு­வாக்­கப்­பட்­டது என்று தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து ஆவா குழு தொடர்­பான சர்ச்சை தென்­ப­கு­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது. அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்­னவின் கருத்­தினை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மறுத்­தி­ருந்தார்.

இந்த நிலை­யில்தான் ஆவா குழுவை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் பயங்­க­ர­வாதப் புல­னாய்வுப் பிரிவின் விசேட பிரி­வொன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டது. இந்தப் பிரி­வி­னரே விசா­ர­ணை­களை மேற்­கொண்டு இந்த 13 பேரையும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர். இவ்­வாறு கைது செய்­ய­ப்­பட்­ட­வர்கள் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தற்­போது சர்ச்சை எழுந்­துள்­ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரோ இந்தக் குழு­வினர் விடு­த­லைப்­பு­லி­களின் மீள் உரு­வாக்­கத்­திற்கு செயற்­பட்டு வரு­வ­தா­கவும், வெளி­நா­டு­களில் உள்ள முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் இவர்­க­ளுக்கு பணம் அனுப்பி வரு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருக்­கின்­றனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட 13 பேரில் இரா­ணு­வத்தில் இணைந்து பணி­யாற்­றிய தமிழ் இளைஞர் ஒரு­வரும் அடங்­கி­யுள்ளார்.

உண்­மை­யி­லேயே இந்தக் குழுவின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்தின் செயற்­பாடு உள்­ளதோ என்ற சந்­தேகம் பர­வ­லாக எழுந்­தி­ருந்த நிலை­யி­லேயே இரா­ணு­வத்தில் கட­மை­யாற்­றிய இந்த இளை­ஞனும் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் புலி­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டுத்தி இந்த இளை­ஞர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்ற போதிலும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­ணா­யக்க ஆகியோர் இந்­தக்­கு­ழு­வி­ன­ருக்கும் புலி­க­ளுக்­கு­மி­டையில் தொடர்பு இல்லை என்ற தோர­ணையில் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். ஆவா குழு என்று செயற்­படும் இக்­கு­ழு­வா­னது கப்பம் பெறும் குழு­வா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இதேபோல் ஆவா குழுவில் 62 பேர் இருப்­ப­தா­கவும், அதில் 38 பேர் கைது­செய்­யப்­பட்டு ஆறு­பே­ரிடம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும், ஏனைய 32 பேர் தொடர்பில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­ணா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த குழு­வினர் ஒப்­பந்த அடிப்­ப­டையில் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். எனினும் இவர்­க­ளிடம் சமூ­கத்தில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைக்­கான முஸ்­தீபு கிடை­யாது. அவர்­க­ளது கைவசம் பெரு­மளவு பணம் இருக்­கின்­றது. வெளி­நா­டு­களில் இருக்­கின்ற உற­வி­னர்கள் மூலமே இவர்­க­ளுக்கு பணம் வரு­கின்­றது என்றும் அமைச்சர் சாகல ரட்­ணா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இத­னை­விட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் உரை­யாற்­றும்­போது இன்று யாழ்ப்­பா­ணத்தில் ஒரு சிறு பிரச்­சினை ஏற்­பட்­டாலும் அங்கு புலிகள் உள்­ளனர் என்று குற்­றம்­சாட்­டு­கின்­றனர். இது தவ­றான கருத்­தாகும். தற்­போது புலிகள் என்று எவரும் இல்லை. நாம் தனிப்­பட்­ட­வர்­களின் இன­வாதக் கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குழப்­ப­ம­டை­யக்­கூ­டாது என்று தெரி­வித்­தி­ருந்தார்.

பிர­தமர் மற்றும் அமைச்­சர்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்து விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டுகள் நாட்டில் முற்­று­மு­ழு­தாக இல்லை என்­பது தெட்டத் தெளி­வா­கின்­றது. ஆவா குழு­வினர் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள இளை­ஞர்­களின் பின்­ன­ணியில் விடு­தலைப் புலிகள் இல்லை என்று சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி தற்போது எழுகின்றது. ஆவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் தாய்மார் மற்றும் உறவினர்கள் நேற்றுமுன்தினம் நீதிமன்றிற்கு முன்னால் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஆவா குழு எனும் பெயரில் எமது பிள்ளைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களது வாழ்வையே சீரழித்து விட்டதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, உரிய வகையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அப்பாவிகள் பாதிக்கப்படாதவகையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டி யது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.

epaper.virakesari

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல