மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பட்டுப்புடவையில் இருக்கும் அழகான பெண் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பல காலமாக தீயாக பரவி வருகிறது. அவர் ஜெயலலிதாவின் மகள் இல்லை என்று சிலர் கூறியும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந்நிலையில் தான் அந்த பெண் யார் என்ற உண்மையை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்த புகைப்படத்தில் இருக்கும் தம்பதி எனக்கு தெரிந்த பிரபலமான இசைக் கலைஞர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த வதந்தி பல காலமாக பரவி வருகிறது. இதனால் கூகுள் இமேஜில் தேடினால் கூட இந்த புகைப்படம் வருகிறது.
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகும் என்பார்களே.
இது போன்ற செய்திகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். அந்த பெண் பிரபல மிருதங்க வித்வான் வி. பாலாஜியின் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக