சவுதிஅரேபியாவில் தமிழக இளைஞர் ஒருவர், இவர்கள் என்னை கொன்று விடுவார்கள், விரைவில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது கூறும் வாட்ஸ் அப் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம் பாடி தாலுகா, மேல பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது தந்தையாரின் பெயர் காசிநாதன் என்றும் தாயார் பெயர் கல்யாணி எனவும் கூறப்படுகிறது.
கலைவாணனுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தின் வறுமை காரணமாக கலைவாணன் அவர் மைத்துனர் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு இவருக்கு கார் ஓட்டுவது தொடர்பான வேலை என்று அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கலைவாணன் சவுதி அரேபியாவில் ஓட்டுனர் வேலைக்காக அழைத்துச் செல்லப்படவில்லை, அங்கு ஆடு மேய்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவர் ஆடு மேய்ப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், இதனால் அவர் அடித்து, உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவர் இது குறித்து வாட்ஸ் அப்பில் கூறுகையில்,
கார் ஓட்டுனர் வேலைக்கு என்றுதான் சவுதிக்கு வந்தோம். விசாவிலும் அப்படித்தான் உள்ளது. ஆடு மேய்க்க முடியாது என கூறியதும், அதன் உரிமையாளர் அப்துல்லா என்னை அடித்து சங்கிலியில் கட்டி வைத்தார்.
3 நாட்களாக சோறு தண்ணீர் தரவில்லை. பசி தாங்க முடியாமல் கெஞ்சிய பிறகு, கூல்ட்ரிங்சும், பன்னும் கொடுத்தனர். அதன் பிறகு அப்துல்லா அவரது உறவினர் வீட்டுற்கு அனுப்பி வைத்தார்.
இது, குவைத் சாலையில் இருந்து சுமார் 25 வது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 3 மாதமாக அங்குதான் வேலை பார்க்கிறேன். சாப்பாடு சரியாக தருவதில்லை, உடலில் எந்த ஒரு சத்தும் இல்லை.
ஒரு ஆட்டுக்குட்டி செத்துப்போய்விட்டது என்பதற்காக இரும்பு கம்பியால் எனது கழுத்தை நெரித்து கொல்லப்பார்த்தனர். அந்த வடு கூட அப்படியே உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் என்னை கொன்றுவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.
எனக்கு எனது மனைவி, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது. தயவு செய்து தமிழர்கள் யாராவது இதை தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று என்னை காப்பாற்றுங்கள்கி என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக