செவ்வாய், 20 டிசம்பர், 2016

யப்பானில் ஆண் உறுப்புத் திருவிழா! பெண் உறுப்புத் திருவிழா!

யப்பானிய மக்கள் ஒவ்வோராண்டும் வசந்த காலத்தை காமத் திருவிழாக்கள் மூலமாக வரவேற்பார்கள். இந்தக் காமத் திருவிழாக்கள் வழமையாக மார்ச் மாத நடுப் பகுதியில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.



இந்தக் காமத் திருவிழாக்கள் இரு வகையானவை. ஒன்று ஆண் உறுப்புத் திருவிழா. மற்றையது பெண் உறுப்புத் திருவிழா. இந்த உறுப்புக்களுக்கு கோவில்கள் உண்டு.

திருவிழாக் காலங்களில் கடவுள்களுக்குரிய அந்தஸ்தும் , மரியாதையும், கௌரவமும் வழங்கப்பட்டு இந்த உறுப்புக்கள் வழிபடப்படும். இந்த உறுப்புக்களின் திருப்பவனியும் இடம்பெறும். பால், வயது, சமய வேறுபாடுகள் இன்றி யப்பானியர்கள் அனைவருமே இந்த விழாக்களில் தவறாது கலந்து கொள்வார்கள்.

திருவிழாக்கள் இடம்பெறும் இடங்களில் ஆண் உறுப்புக்கள், பெண் உறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவிலான ஏராளமான பொருட்களை அங்கு காண முடியும். இந்த உறுப்புக்களின் வடிவிலான பொருட்கள்,இனிப்புக்கள் போன்றன அமோகமாக விற்பனை ஆகும். இந்தத் திருவிழாக்கள் 1500 வருடங்கள் வரை பழைமையானவை.

யப்பான் முந்தைய நாட்களில் விவசாய நாடாக இருந்துள்ளது. எனவே செழிப்பான அறுவடையைக் கோரியும்,பிள்ளை வரம் கோரியும் இந்த உறுப்புக்களை அவர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விழாக்களாகவும் இவை உள்ளமை வெளிப்படை. அத்துடன் இந்த விழாக்கள் இடம்பெறும் நகரங்களுக்கு அமோக வருமானமும் கிடைக்கப் பெறுகின்றது.

யப்பானின் ஆண் உறுப்புத் திருவிழா Komaki City’s Tagata shrine ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ஆம் திகதி இவ்விழா இடம்பெறுகின்றது.அதேபோல இந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் ஆணுறுப்புத் திருவிழாவை அண்மித்த நாட்களில் பெண் உறுப்புத் திருவிழா இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள்.ஆரோக்கியமான குழந்தைகளை வேண்டி வழிபாடு இயற்றுவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். சிறுவர்கள் அதிகாலையில் பெண் உறுப்பின் வடிவத்திலான சொருபங்களை பெண் உறுப்பு ஆலயத்துக்கு கொண்டு செல்வார்கள்.

அதன் பின் சுமார் 40 பேர் கொண்ட வாலிபர் குழு ஒன்று பிரமாண்டமான பெண் உறுப்பு சொருபத்தை ரதம் அல்லது பல்லக்கு மாதிரியான ஒன்றில் வைத்து தூக்கிக் கொண்டு செல்வார்கள்.இவர்களுக்குப் பின்னால் பெண் உறுப்புக்களில் சிறிய சொருபங்கள் இரண்டு தனித் தனியாக சுமந்து வரப்படும்.







Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல