ஜெயலலிதா மறைவின் போது பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நடந்து கொண்டவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பவ்யம், அடக்கம் என அலப்பறையைக் கொடுத்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் அவர் மறைந்த உடனேயே அத்தனையையும் தூக்கி போட்டுவிட்ட அதிசயத்தை தமிழகம் பார்த்து இன்னும் வியந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவைப் பார்த்தாலே போதும்.. அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் விமானமும் ஹெலிகாப்டரும் வானத்தில் பறந்தாலே போதும்.. அதிமுகவினரின் அத்தனை நாடி நரம்புகளும் பவ்யம் பணிவுகளுக்கு ஷிப்ட் ஆகிவிடும்...
அதுவும் ஜெயலலிதாவுக்கு எதிரே நின்றால் போதும்... இடுப்பு எப்படித்தான் அவர்களுக்கு அப்படி வளையுமோ ..அடடே அந்த பவ்யமே இன்னும் சமூக வலைதளங்களில் நாறடிக்கப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டம்தான் ஜெயலலிதா சிறைக்குப் போன சமயத்தில் நடந்தது...
ஓவர் நடிப்பு
சொத்து குவித்த ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போகிறார்.. அது நீதிமன்ற நடவடிக்கை. இதற்காக அதிமுக அமைச்சர்கள் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சியை கண்டு தமிழகமே பரிதாபப்பட்டது... அதுவும் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் கண்ணீரும் கம்பலையுமாக பதவியேற்று 'ஓவர்' நடிப்பை உலகத்துக்கு காட்டிக் கொண்டிருந்தனர்..
அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் இது தொடர் கதையாக இருந்தது... நாள்தோறும் அப்பல்லோவுக்கு போவது.. கோயில் கோயிலாக ஏறி இறங்குவது.. மண் சோறு சாப்பிடுவது என ஏகத்துக்குமான அட்டகாசங்களை அரங்கேற்றங்கள்... இப்படியான அதிமுகவினர்தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியான போது வெளிப்படுத்திய விதமும் தற்போது நடந்து கொள்வதும் தமிழக மக்களுக்கு 'ஷா'க்காக இருக்கிறது...
பதவியேற்பு..
ஜெயலலிதா இறந்துவிட்டாரே என துக்கம் தாளாமல் தொண்டர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள்.. கதறினார்கள்.. கண்ணீரில் மூழ்கினார்கள். ஆனால் எந்த ஒரு சலனமுமே இல்லாமல் அட ஒப்புக்கு பொட்டு கண்ணீரும் விடாமல் பவ்யாமாக போய் அமைச்சர்களாக பதவியேற்றார்கள்... அப்படியே பந்தாவாக அப்பல்லோவுக்கும் வந்தார்கள்...
பிக்னிக் ஸ்பாட்டா?
ஒரு கண்ணீர்... விசும்பல்... கதறல்... எதுவுமே இல்லாமல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுபோனார்கள்... ஏதோ பிக்னிக் வந்தது போல ஆங்காங்கே அமைச்சர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்... ஜெயலலிதா சிறைக்குப் போனபோது கத்தி கூப்பாடு போட வளர்மதி கூலாக மலர் மாலைகளை எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருக்கிறார்.
இது நாகரிகம்...
அட ஜெயலலிதா உடலை நல்லடக்கம் எடுத்து சென்றபோது கூட ஒரு ஒப்பாரியும் கூப்பாடும் கூட கிஞ்சித்தும் கிடையாது... முன்பின் தெரியாதவர்களானாலும் மறைந்த ஒருவரை அடக்கம் செய்ய கொண்டுபோகும் போது வெளிப்படும் உணர்ச்சிகள் கண்ணீரை தாரை தாரையாக வரவழைக்கும்... இது தமிழர் நாகரிகம்...
ரிலாக்ஸா
ஆனால் எந்த ஒரு சலனமுமே இல்லாமல் ஜெயலலிதாவை ஏதோ போயஸ் தோட்டத்துக்கு அழைத்து செல்வது போல அமைதியாகவே அதிமுக அமைச்சர்கள் சென்றார்கள்.. சரி அடக்கம் செய்யும்போதாவது பவ்யத்தையும் பணிவையும் அஷ்ட கோணங்களில் காட்டிய அமைச்சர்கள் வீறிட்டு கதறுவார்களோ என எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்... எந்த சலனமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாகத்தான் அனைவரும் காணப்பட்டனர்.
ஏன் இவர்களுக்கு இப்போது வரவில்லை கண்ணீர்.. இதுதான் அப்பாவி அதிமுகவினர் மற்றும் மக்களின் ஆச்சரியமாக இருக்கிறது.
Thatstamil











































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக