கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் அதிருப்தியையடுத்து நடவடிக்கை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு காலிமுகத்திடலில் உல கின் உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் கர்தி னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அதிருப்தியை அடுத்து கைவிடப்பட்டன.
இந்நிலையில் இலங்கைக்கான புகழும் கின்னஸ் சாதனைக்கான கனவும் பலிக்காமல் போனமை வருத்தமளிப்பதாக நத்தார் மர ஏற்பாட்டுக்குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நத்தார் மர ஏற்பட்டுக்குழுவினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கருத்தது தெரிவித்த குழுவின் தலைவர் மங்கள குணசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு எமது முயற்சியில் உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் ஒன்றை உருவாக்க சகல நாவடிக்கைக்ளையும் முன்னெடுத்து வந்தோம். அரசாங்கம் மற்றும் சகல தரப்பினதும் ஆதரவில் இந்த முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம். குறிப்பாக நாம் பௌத்தர்கள் என்றாலும் மத நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த முயற்சிகளை முன்னெடுத்தோம். அதேபோல் இந்த மரம் உருவாக்கப்படுவதனால் இலங்கைக்கு மிகப்பெரிய புகழும் சாதனை வாய்ப்புகளும் கிடைக்கவிருந்தன. உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை உருவாக்குவதன் மூலம் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்கவும் அதன் மூலம் எமக்கு என்று ஒரு தனி அடையாளத்தை வைத்துக்கொள்ளவும் விரும்பினோம். மேலும் டிசம்பர் மாதம் இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகரிக்கும் மாதமாகும். அவ்வாறான நிலையில் எமது இந்த முயற்சி இன்னும் நாட்டின் சுற்றுலாத் துறையை அதிகரிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.
மேலும் காலி முகத்திடலை அண்மித்துள்ள சகல ஹோட்டல்களிலும் முன்பதிவுகள் செய்யபட்டுள்ளதுடன் மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது என தெரிய வருகின்றது. இதனால் நாட்டின் வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் இவ்வாறு வரும் வருமானத்தின் மூலம் சிறுநீரக நோயாளர்களுக்கு உதவும் எண்ணம் எமக்கு இருந்தது. அதற்கான ஆயத்தங்களை நாம் மேற்கொண்டு வந்தோம். அதேபோல் 120 இலட்சம் ரூபாய் செலவில் இந்த மரம் உருவாக்கப்படவிருந்தது. எனினும் இந்த மரத்தை உருவாக்கும் செலவில் அதிகமானவை நிவாரணமாக பெறப்பட்டுள்ளன. வர்ணப்பூச்சு மற்றும் இரும்பு ஆகியவை நிவாரணமாக கிடைத்துள்ளன. இவ்வாறான முயற்சிகளை நாம் எடுத்திருந்த போதிலும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தியை வெளியிட்டுள்ளமையை அடுத்து எமது இந்த முயற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்றில் இருந்து எமது இந்த வேலைகள அனைத்தும் நிறுத்தப்படும்.
ஆரம்பத்தில் அமைச்சர் மற்றும் சகல தரப்பினரின் ஆதரவும் எமக்கு கிடைத்தது. கர்தினால் மெல் கம் ரஞ்சித் ஆண்டகையை எம்மால் ஆரம்பத்தில் இருந்து சந்திக்க முடியாது போனபோதும் அவரது பிரதிநிதிகளை சந்தித்து அனுமதியை பெற்றோம். அதேபோல் உலக கின்னஸ் சபைக்கும் அறிவித்தோம். பாப்பரசருக்கும் கூட அறிவிப்பை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பை அடுத்து நாம் உடனடியாக எமது முயற்சிகளை கைவிடுகின்றோம். இதனால் நாம் எந்த முரண்பாடுகளையும் ஏற்படுத்த விரும்பவில்லை. அவரது வார்த்தைகளுக்கு பூரணமான மதிப்பை வழங்கி எமது இந்த முயற்சிகள் அனைத்தையும் கைவிடுகினோம் என்றார்.
Virakesari





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக