பிரிட்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகள் He (அவன்), She (அவள்) போன்ற பதங்களுக்குப் பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாலின மாற்றம் செய்தவர்களின் மனதைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாம். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட பிரசுரமொன்றில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளிலும் இப் பதம் பயன்படுத்தப்படும் என தான் நம்புவதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1096 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இரண்டாவது மிகப் பழைமையான பல்கலைக்கழகமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓரின சேர்க்கையாளர்கள், பாலின மாற்றம் செய்தவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் பீட்டர் டெட்செல் கருத்துத் தெரிவிக்கையில், பாலின பிரிவு கள் மற்றும் தடைகளை எல்லா வேளைகளிலும் வலியுறுத்தாமல் இருப்பது சாதகமான விடயம் எனக் கூறியுள்ளார்.
இத்தகைய பொதுப்பால் பதங்களை விரும்புவோருக்காக இத்தகைய பதங்களை பயன்படுத்துவது நல்லது. ஆனால், இது கட்டாயமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரிட்டனின் மற்றொரு, உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இது போன்ற அணுகுமுறையை பின்பற்று வதற்குத் தயாராகுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எப்படி உச்சரிப்பது?

பீட்டர் டெட்செல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக