சனி, 31 டிசம்பர், 2016

இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide

ங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு.



காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனிதர் என்றால், உங்கள் பெயரை கூகுளில் தேடிப்பாருங்கள். உங்கள் பெயரை தேடும்போது உங்களின் படங்கள், மற்ற சமூக வலைத்தள விவரங்கள் போன்றவை கிடைக்கலாம்.

எனவே நீங்கள் நிஜத்தில் வாழும் இந்த வாழ்க்கையை போலவே, இணையத்தில் வாழும் வாழ்க்கையை உங்களால் நிறுத்த முடியுமா? அதைத்தான் இணையத்தில் இருந்து மறைந்து போதல் அல்லது இன்டர்நெட் சூசைட் என்கின்றனர். அதெப்படி முடியும்? கொஞ்சம் கடினம்தான். ஆனால் முடியும். ஃபேஸ்புக் அக்கவுண்டை டி-ஆக்டிவேட் செய்வது போல, இது எளிதான விஷயமல்ல. ஆனால் சில விஷயங்கள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.

யாரெல்லாம் இதை செய்கின்றனர்?

1. இணையம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிற்கு மிகவும் அடிக்ட் ஆனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபட இதனை செய்கின்றனர்.

2. நிஜ வாழ்க்கையே அடிக்கடி போரடிக்கும்போது, இணையம் மட்டும் போரடிக்காதா என்ன? எனவே இதுவரை இணையத்தில் தேடிய, பார்த்த, அனுபவித்த விஷயங்கள் எல்லாமே, போரடித்துவிட்டது எனில், ஒரு கட்டத்தில் இணையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அழிப்பதற்காக இதை செய்கின்றனர்.

3. இவை எல்லாவற்றையும் விட இன்னொரு திரில்லும் இருக்கிறது. இணையத்தில் உங்களைப் பற்றிய டேட்டாக்கள் அனைத்தையுமே அழித்துவிட்டால், அங்கே நீங்கள் ஒரு புதிய நபர் அல்லவா? உங்களை யாராலும் கண்டுபிடிக்கவோ, தொடர்புகொள்ளவோ முடியாது அல்லவா? அந்த பிரைவசிக்காகவும் இதை செய்யலாம். பல பேருக்கு புத்தாண்டு சபதமாக கூட இது இருக்கும். ஆனால் இணையம் என்னும் ராட்சச சிலந்தி வலையில் இருந்து, நீங்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட முடியாது. இதனை எப்படி செய்யலாம்?

1. சோஷியல் மீடியாதான் முதல் இலக்கு:

நமது அதிகப்படியான நேரத்தையும், டேட்டாவையும் செலவு செய்வது சமூக வலைத்தளங்களில்தான். நம்முடைய தகவல்கள் அதிகம் இருப்பதும் அங்கேதான். எனவே நாம் முதலில் அங்கிருந்துதான் துவங்க வேண்டும். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் (இந்த ஜோடியை பிரிக்கவே முடியாது போல..) போன்ற தளங்களில் உங்கள் கணக்குகளை டெலிட் செய்துவிடுங்கள். டி-ஆக்டிவேட் செய்தால், உங்களுடைய கணக்குகள் முற்றிலுமாக அழியாது.



எனவே டெலிட் செய்தால் மட்டுமே, உங்கள் பதிவுகள் முற்றிலும் நீக்கப்படும். ஒருவேளை இவற்றில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு முக்கியம் என நினைத்தால், அவற்றை டவுன்லோடு செய்துவிட்டு டெலிட் செய்துவிடுங்கள். எல்லா சமூக வலைத்தளங்களையும் டெலிட் செய்ய முடியும். உதாரணமாக ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டெலிட் செய்ய லிங்க்: https://www.facebook.com/help/delete_account



2. சேவை இணையதளங்கள்:

சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து, நமது விவரங்கள் அதிகம் இருக்கும் தளங்கள் என்றால், ஷாப்பிங், கேமிங், செய்தி போன்ற சேவைகளை தரும் இணையதளங்கள்தான். நாம் இணையம் பயன்படுத்தத் துவங்கிய காலம் முதல், எத்தனையோ தேவைகளுக்காக, பல தளங்களில் கணக்குகளை துவக்கியிருப்போம். அதற்கு நமது இ-மெயில் விவரங்கள், போன் எண்கள் போன்றவற்றை கொடுத்திருப்போம். நியூஸ்லெட்டர் உள்ளிட்டவற்றை சப்ஸ்க்ரைப் செய்திருப்போம். அவற்றை முதலில் நீக்க வேண்டும்.

உங்களது மெயிலிலேயே இவற்றை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அன்சப்ஸ்கிரைப் செய்யவும், அக்கவுண்டை நீக்கவும் முடியும். ஆனால் அதிகப்படியான தளங்கள் நமக்கு தெரியாமலே நமது தகவல்களை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தளங்களை கண்டறிந்து நீக்க, deseat.me என்னும் தளம் நமக்கு உதவுகிறது. உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் மூலம், லாகின் செய்த தளங்களின் விவரங்களை இதன் மூலம் கண்டறிவதும், நீக்கவும் உதவுகிறது.

அதே சமயம் உங்கள் கூகுள் அக்கவுன்ட் விவரங்களை மட்டும் உடனே அழித்து விட வேண்டாம். ஏனெனில் அதை வைத்து நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம்.

3. நீங்களே தேடி டெலிட் செய்யுங்கள்!

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் சமூக வலைத்தளங்கள், பிளாக்குகள், இணையதளங்கள், Forums போன்றவற்றில் உங்களது படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகள் ஏதேனும் இருக்கிறதா என்பதனை சர்ச் இன்ஜின்கள் உதவியுடன் தேடி தெரிந்து கொள்ளலாம். உங்கள் பெயர், உங்களின் சோஷியல் மீடியா அக்கவுன்ட் பெயர் போன்றவற்றை எல்லாம், வெவ்வேறு சர்ச் இஞ்சின்களில் தேடுங்கள். உங்களுடைய டெலிட் கவல்கள் ஏதேனும் கிடைக்கலாம்.

அப்படி எதுவும் தென்பட்டால், அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவற்றை நீக்க முடியும். உங்கள் வீடியோ அல்லது ஒரு புகைப்படம் ஒரு வைரல் மெட்டீரியலாக இருந்து, அதிகம் பேர் அதனை பகிர்ந்துள்ளனர் என்றால், அதனை நீக்க அந்தந்த நிறுவனங்களின் உதவியை நாடுவதுதான் ஒரே வழி.



உங்கள் புகைப்படங்களை இணையத்தில் கண்டறிய ரிவர்ஸ் சர்ச் இன்ஜின்களை பயன்படுத்தலாம். உதாரணமாக உங்கள் புகைப்படங்கள் வேறு இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இருக்கிறதா என்பதனை அறிய, கூகுளின் Search by image ஆப்ஷனை பயன்படுத்தலாம். கூகுளின் சேவைகளில் இருந்து உங்கள் தகவல்களை அழிக்க, https://support.google.com/legal/troubleshooter/1114905?hl=en இந்த லிங்க்கை பயன்படுத்தலாம்.

4. கடைசி இலக்கு:

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையுமே முடித்துவிட்டால், நீங்கள் கடைசியாக செய்ய வேண்டியது உங்கள் இ-மெயிலை கைவிடுவது. ஜிமெயில் அக்கவுன்ட் என்றால், நீங்கள் உங்களின் கூகுள் அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வேண்டும். இதனை டெலிட் செய்துவிட்டால், கூகுளின் மற்ற சேவைகளான மேப்ஸ், யூ-டியூப், மெயில் உள்ளிட்ட எந்த சேவைகளையும் நீங்கள் பெற முடியாது. அதே சமயம், நீங்கள் உங்கள் அக்கவுன்ட்டை டெலிட் செய்த சில நாட்களுக்குள், அதனைத் திரும்ப பெற வேண்டுமானால், Recovery ஆப்ஷனும் இருக்கிறது. அக்கவுன்ட்டை டெலிட் செய்து விட்டால், உங்களின் கூகுள் தொடர்பான தகவல்கள் அனைத்தும், இணையத்தில் இருந்து நீங்கிவிடும். அவற்றை வேறு யாரும் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாது. அதே சமயம், உங்கள் தகவல்களை வேறு இணையதளங்கள் அல்லது நபர்கள் எடுத்து பயன்படுத்தியிருந்தால் ஏற்கனவே சொல்லியது போல, கூகுளிடம் முறையிட்டுதான் நீக்க முடியும்.



5. தனியார் சேவைகள்:

இப்படி நீங்கள் ஒவ்வொரு விஷயமாக செய்பவற்றை ஒட்டுமொத்தமாக செய்துதர, தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன. அவர்கள் உதவியுடனும், நீங்கள் இதனை செய்யலாம். ஆனால், அது செலவு பிடிக்கக் கூடிய விஷயம் என்பதால், அதனைத் தவிர்க்கலாம்.

நிச்சயமாக இவையனைத்தும் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலை அல்ல. உங்களது தகவல்களை பொறுத்து, சில நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக எல்லாமே பண்ணியாச்சு என்றால், தற்போது உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இருக்காது. ஃபேஸ்புக் ஐ.டி இருக்காது, மற்ற சமூக வலைத்தள அக்கவுன்ட் இருக்காது. இணையத்துடன் நீங்கள் கொண்டிருந்த பந்தம் முடிந்துவிட்டது எனலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்னும் மிச்சமிருக்கும். அது இதுவரை நீங்கள் இணையத்திற்கு கொட்டிக்கொடுத்த உங்கள் டேட்டா.

இணையத்தில் ஒரு சேவையை பயன்படுத்த துவங்கும்போதே, அந்த நிறுவனத்திற்கு உங்கள் தகவல்களை கையாளும் அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறீர்கள். எனவே நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் எல்லா விஷயங்களில் இருந்தும் உங்களை விடுவித்துக் கொண்டாலும், இதுவரை நீங்கள் இணையத்தில் பயன்படுத்திய தரவுகள் அந்தந்த இணையதளங்களின் சேமிப்பில், உலகின் ஏதேனும் சில சர்வர்களில், இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே இணையத்தில் உங்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதே தவிர, நீங்கள் இன்னும் முழுமையாக மறைந்துபோகவில்லை எனலாம். இங்குதான் இணையத்திற்கும், இன்டர்நெட் சூசைடிற்கும் இடையே முரண்பாடுகள் எழுகின்றன.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல