மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டு ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
சீனா, மனிதனை போன்ற தோற்றம் தொண்ட முதல் ரோபோவை கடந்த ஆண்டு உருவாக்க துவங்கியது. சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு உருவாக்கி உள்ள இந்த ரோபோவுக்கு 'ஜியா ஜியா' என, பெயரிடப்பட்டுள்ளது. பெண் வடிவிலான இந்த ரோபோவிற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சீன ரெஸ்டாரன்ட்கள், நர்சிங் ேஹாம், மருத்துவமனைகள், வீட்டு வேலைகள் உள்ளிட்ட சிறுசிறு பணிகள் வழங்கப்பட உள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சீனாவில் இந்த ரோபோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட கறுமையான கூந்தலுடன், சீன பாரம்பரிய உடையணிந்து காட்சி தரும் இந்த ரோபோவை உருவாக்க 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ரோபோ சாதாரண கேள்விகளுக்கும், எதிரில் இருப்பவரின் பாலினத்திற்கு ஏற்க கனிவுடன் பதிலளிக்கிறது. ஆண்களிடம்,‛ நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என கூறும் இந்த ரோபோவிடம், பாய் பிரண்டாக இருக்க விரும்புவதாக யாராவது கூறினால், ‛நான் தனியாக இருக்க வேண்டும்' என, பதிலளிக்கிறது.
மனித குரல் தகவல்களை பெற்றுக் கொண்டு, அதற்கு ஏற்க வேலைகளையும் செய்கிறது. தத்ரூபமான முகபானைகளுடன் பேசும் இந்த ரோபோவிற்கு கணிதம், அறிவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் இதனை வடிவமைத்தவர்கள். எதிர்காலத்தில் இந்த ரோபோக்களுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இதன் பணிகள் மற்றும் தேவைகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக