தலைகள் ஒட்டிப் பிறந்த இரண்டு சிறுமிகள் தம் வாழ்க்கையில் முதன்முறையாக வெளியுலகுக்கு வந்துள்ளனர்.
தெலங்கானாவில் பிறந்த இந்த இரட்டைச் சகோதரிகளை சுமையாக நினைத்த அவர்களது பெற்றோர், ஹைதராபாத்தின் நிலோஃபர் மருத்துவமனையில் அவர்களை விட்டுச் சென்றனர்.
குழந்தைகளைப் பொறுப்பெடுத்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்காக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தது.
போதிய பராமரிப்பு கிடைத்தபோதும் குழந்தைகள் இருவரும் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், வாணி, வீணா என்ற இந்த இரட்டைச் சிறுமிகளின் நிலையைக் கருத்திற்கொண்டு தெலங்கானா அரசு அவர்களை சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு மாற்றியிருக்கிறது.
அவர்களை வரவேற்கும் முகமாக குறித்த சிறுவர் பராமரிப்பு இல்ல நிர்வாகம், இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடியிருக்கிறது.
பிறந்தது முதல் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த இந்தச் சிறுமிகள், முதன்முறையாக வெளியுலகைக் கண்டு பிரமித்துப் போயினர்.
எனினும், பராமரிப்பு இல்லத்தின் சூழலைக் கண்டு ஆரம்பத்தில் பயந்துபோன சிறுமிகள் பெரிய அறை, வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மீன் தொட்டிகள், சூரிய வெளிச்சம் என, தாம் வாழ்க்கையில் கண்டிராத பலவும் அங்கே இருப்பதால் அங்கே தங்கச் சம்மதித்துள்ளனர்.
ஒட்டிப் பிறந்தபோதும் இருவரது தலைகளும் வெவ்வேறு கோணத்தில் இருப்பதால், தொலைக்காட்சிப் பெட்டியை இருவரும் கண்டுகளிக்க ஏதுவாக ஒரு கண்ணாடியும் வைக்கப்பட்டிருக்கிறது.
மீன் தொட்டிகளுக்கு அருகே நின்று ‘கெக் கெக் கெக்’ என்று வாய் கொள்ளாமல் சிரிக்கும் சிறுமிகள் இருவரும், சூரிய வெளிச்சத்தைக் கண்டு அதிசயப்பட்டதுடன் வெகு நேரம் அந்த இல்லத்தின் தோட்டத்தில் நின்று சூரியக் குளியல் போடுகிறார்கள்.
வீணா, வாணி எனும் இச்சகோதரிகள் 14 வயதானவர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவரின் தலைகளும் ஒன்றுட னொன்று ஒட்டியி ருந்தன.
கடந்த 11 வருடங்களாக இவர்கள் ஹைதராபாத் நகரிலுள்ள வைத்தியசாலை யொன்றிலேயே தங்கியிருந்தனர்.
சிறிய அறையொன்றில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால் சுகாதார பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொண்டனர்.
வீணாவும், வாணியும் தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் பொருத்தப்பட்டிருந்த வாயு சீராக்கி முறையாக இயங்கவில்லை எனவும், காற்றோட்ட வசதி இல்லாததால், இச் சிறுமிகள் தோல் நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தொண்டர் நிறுவனங்கள் தெரிவித் திருந்தன.
இந்நிலையில், இச் சகோதரிகள், அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிறுவர் விடுதி யொன்றுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டனர்.
இதன்மூலம் இச் சகோதரி கள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வ தற்கும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீண்ட காலமாக தாம் தங்கியிருந்த வைத்தியசாலை யிலிருந்து வெளியேறிச் செல்வது இச்சகோதரிகளுக்கும் வைத்திய சாலை ஊழியர் களுக்கும் மனோரீதியில் கடினமானதாகவே இருந்ததாம்.
‘இச் சகோதரிகளுக்கு ஒரு வருடமாக கல்வி போதித்த ஆசிரியையான வி.அனூஷா கூறுகையில், ‘இந்த இரட்டையர்களுடன் நான் உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் என்னை தமது மூத்த சகோதரியாக கருதினர்’ எனத் தெரிவித்துள்ளார்.
இச் சிறுமிகள் மிகுந்து புத்திகூர்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என சிறுவர் இல்லத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீணா, வாணியை சத்திர சிகிச்சை மூலம் பிரித்துவிட முடியும் என்றாலும், வெற்றி வீதம் 20 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் தயங்குவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக