உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளிகளுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக ஃபேஸ்புக் அறிவித்த வசதி ஃபேஸ்புக் லைவ் வீடியோ. இதன் மூலம் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வீடியோ லைவ் செய்து மகிழலாம்.
இந்நிலையில் இந்த வசதி இதுவரை ஃபேஸ்புக் மொபைல் ஆப்ஸ்-க்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரிலும் லைவ் வீடியோ வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் லேப்டாப்பில் இருக்கும் கேமிரா மூலமோ அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வெப் கேமிரா மூலமோ தற்போது ஃபேஸ்புக் லைவ் வசதியை பயன்படுத்தி மகிழலாம். முதல்கட்டமாக இந்த வசதி செலிபிரிட்டிஸ், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தரப்படவுள்ளது. அவர்களுக்கு இந்த வசதி மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஃபேஸ்புக்கில் 5000 அல்லது அதற்கு மேல் ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கும் இந்த வசதி விரைவில் தரப்படவுள்ளது. மேலும் இந்த வசதியை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் பதிவு செய்யும் லைவ் வீடியோவிற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொறுத்து இந்த சலுகை அவர்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்.
மேலும் வீடியோ லைவ் செய்யும்போது அந்த வீடியோ குறித்த விவரங்கள் மற்றும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்யும் வசதியும் உண்டு. மேலும் லைவ் வீடியோவை தங்கள் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு ஷேர் செய்யும் வசதியையும் ஃபேஸ்புக் நிறுவனம் தருகிறது.
மேலும் லைவ் வீடியோக்கள் மட்டுமின்றி இந்த லைவ் வீடியோக்களை ரிகார்டிங் செய்து அதை ஒரே நேரத்தில் பல பக்கங்களில் பதிவு செய்யும் வசதியும் ஃபேஸ்புக் நிறுவனம் தரப் போகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக