கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு கமராவுடன் ஸ்மார்ட்போன் வந்தது. அதன் பின்னர் செல்பி கமராவுடன் வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் டூயல் கமரா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.
டூயல் கமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அபாரமான அவுட்புட்களை தருவதால் பின்பக்கம் இரண்டு கமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் டிரண்ட் ஆகிவிட்டன
போகஸ் (Focus):
ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஹூவாய் P9 (Huawei P9) மற்றும் ஹானர் 8 (Honor 8) ஆகிய மாடல்கள் நல்ல டூயல் கமரா போன்களுக்கு உதாரணம். இதில் உள்ள ஒரு கமரா கருப்பு வெள்ளையிலும், இன்னொரு கமரா கலரிலும் படம் பிடிக்கின்றது. இரண்டு கமராக்களுமே வேகமான போகஸ் மற்றும் லேசர் உதவியுடன் ஆட்டோ போகஸ் தன்மை அடங்கியுள்ளது.
வேகமான போகஸ் காரணமாக புகைப்படங்கள் ஷார்ப் ஆக படமாகிறது. இரண்டு கமராக்களினால் படமாக்கப்படும்போது கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படங்கள் மெர்ஜ் ஆகி நமக்கு நல்ல ரிசல்ட்டை தருகின்றன. பெரிதாக வெளிச்சம் இல்லை என்றாலும் டூயல் கமராவினால் போகஸ் செய்த புகைப்படங்கள் தெளிவாக இருக்கும்
போக் எபெஃக்ட் (Fog Effect)
ஒரு புரபொசனல் போட்டோகிராபர் புகைப்படம் எடுக்கும்போது ஒரு புகைப்படத்தின் பின்பக்கம் அதாவது பேக்ரவுண்ட் சிறிதளவு மங்கலான ஒருவிதமான எபெக்ட் உடன் எடுப்பார்கள். இதற்கு பெயர்தான் போக் எபெக்ட். இந்த சொல ஜப்பானிய சொல்லில் இருந்து கொண்டு வரப்பட்டது.
ஸ்மார்ட்போனில் உள்ள லென்ஸ் மிகவும் சிறியதாக இருப்பதால், ஒரு புரபொசனல் கமராவில் எடுப்பது போன்று போக் எபெக்ட் உடன் எடுப்பது சிரமம். ஆனால் அதே நேரத்தில் டூயல் லென்ஸ் கமரா போன்களில் இதுபோன்ற போக் எபெக்ட் உடன் கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும்.
12 MP பின் கமரா உள்ள ஐபோன் 7 பிளஸ் (iphone 7 plus) மாடலில் போக் எபெக்ட் உடன் கூடிய புகைப்படம் எடுக்க முடியும். ஹுவாய் போன்கள், ஐபோன்கள் ஆகிய இரண்டு வகை மாடல்களில் ஐபோன் 7 ப்ளஸ் மாடல் இந்த போக் எபெக்ட்டுக்கு சிறந்த போனாக கருதப்படுகிறது.
ஸூம் (Zoom):
ஆப்பிள் மற்றும் லெஜி மாடல்களில் டூயல் கமரா லென்ஸ் உடன் ஸூம் லென்ஸ் உள்ளதால் இந்த மாடல் போன்களில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து தள்ளலாம். ஒரு புரபொசனல் கமராவிற்கு கிட்டத்தட்ட இணையாக இந்த போன்களில் புகைப்படங்கள் எடுக்கலாம். அதேபோல் சாம்சங் K ஸூம் ஸ்மார்ட்போனும் ஸூம் லென்ஸ் உள்ள போன் ஆகும். மேலும் எல்ஜி G5 மாடலும் நன்றாக ஸூம் செய்யக்கூடிய கேமிராக்களை கொண்டது.
ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilization)
எல்ஜி மற்றும் ஆப்பிள் ஐபோன் போன்ற மாடல்களில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதி இருப்பதால் புகைப்படம் எடுக்கும்போது கை ஷேக் ஆனாலும் மங்கலான ரிசல்ட்டை தராமல் புகைப்படத்தின் தரத்தை பாதுகாக்கும் தன்மை உடையது. ஆனால் ஹூவாய் டூயல் கமரா மாடலில் இந்த வசதி இல்லை. இதனால் இந்த போன்களில் புகைப்படம் எடுக்கும்போது கை ஷேக் ஆனாலோ அல்லது மங்கலான வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலோ நல்ல ரிசல்ட்டை தராது.
எனவே புதுப்புது வசதிகளை அதிகரிப்பதன் மூலம் ஒரு DSLR கேமிராவில் உள்ள வசதியை ஸ்மார்ட்போன் கமராக்களில் கொண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். டூயல் கமரா லென்ஸ் செட் அப் உள்ளதால் இது சாத்தியமாகிறது. மேலும் உங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் அசத்தலான புகைப்படங்களை எடுக்கும் கமராக்கள் இன்னும் புதிது புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக