ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.



இது ஒரு அசுர முயற்சி என சுவிஸ் பொலீஸ் கூறுகிறது. சுமார் 8 வருட முயற்சியின் பின்னர் பயங்கரவாதிகளுக்குப் பணம் திரட்டியதாக சுவிற்ஸலாந்து உயர் நீதிமன்றத்தில் 13 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 12பேர் தமிழர்கள். ஒருவர் ஜேர்மானியர்.

இலங்கையில் 26 ஆண்டுகளுக்கு மேலான போரில் சுமார் 100,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இப் படுகொலைகளை நோக்கிய பயணத்தில் எதிர்ப்பினை நடத்திய தமிழர்கள் சிறுவர்களைக்கூட முன் அரங்குகளில் நிறுத்தினார்கள்.

அரச ராணுவம் பலரைச் சிறைக்கு அனுப்பியது. இரண்டு தரப்பிலும் போர்க்குற்றம் இடம்பெற்றது. இந்த வதை 2009ம் ஆண்டு மே மாதம் சிறுபான்மைத் தமிழர்களின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

இதே மாதம் சுவிஸ் அரசின் வழக்குத் தொடுநர் புலிகளின் நிபுணத்துவம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்தார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னவெனில், சுவிற்ஸலாந்திலுள்ள தமிழ்ப் பிரமுகர்கள் பணத்தினைப் பயன்படுத்தி தாயகத்தில் இடம்பெற்ற போரை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளினர் என்பதாகும்.

இது பெரும் அசுர வேலையாக அமைந்தது. இதன் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். சுவிற்ஸலாந்தில் மட்டும் 24 வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

விசாரணைகளை நடத்தியவர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டவர்களைக் குறுக்கு விசாரணை செய்தனர். இதற்கான சட்ட உதவியை இணைப்பாட்சியிலுள்ள 23 அரசுகளிடம் கோரினர்.

இக் குற்றம் பல நாடுகளைச் சுற்றியதாக இருந்தது.

அயல் நாடுகளிலிருந்து ஆரம்பித்து உக்ரைன் முதல் மலேசியா பின்னர் இலங்கை என நீண்டிருந்தது.

தற்போது 8 வருடங்களின் பின்னர் 13 பிரதிவாதிகள் இக் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவ் விசாரணைகள் வழமையான வரைமுறைகளக்கு அப்பால் சென்றுள்ளது.

இவ் விசாரணைகளுக்கென நீதிபதிகள் 8 வாரங்களை ஒதுக்கியுள்ளனர்.

விசாரணைகள் வெள்ளி தவிர்ந்த திங்கள் முதல் வியாழன் வரை தொடர்ந்து நடைபெறும். கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரணைகள் ஆரம்பமாகும்.

எதிர்வரும் யூன் மாதம் 6ம் திகதியிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், மற்றும் வழக்குத் தொடுநர்களின் உதவியாளர்கள் என்போர் வேறெங்கும் செல்லாதபடி தடுக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸ் இணைப்பு அரசுகளில் ஒன்றான பெலின்சோனா (Bellinzona) இல் சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் நாட்டின் ரிஸினோ ( Ticino ) ஐத் தவிர நாட்டின் ஏனைய பாகங்கள் தமிழர் மீதே பிரதான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

பிரதிவாதிகள் யாவரும் உலக தமிழர் இணைப்புக் கமிட்டியைச் ( World Tamil Coordinating Committee ) சார்ந்தவர்கள் என சமஷ்டி வழக்கத் தொடுநர் காரியாலயம் கருதுகிறது.

சுவிற்ஸலாந்தில் புகலிடம் பெற்று வாழும் தமிழர்களிடத்தில், தாயகத்தில் இடம்பெறும் போருக்கு பணம் வாங்கினார்கள் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

தாயகத்து மக்களின் நிலை குறித்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக வழக்குத் தொடுநர் காரியாலயம் நம்புகிறது.

கடன் பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர் மீது அதிக அழுத்தங்கள், சில சமயம் குறைவாக அல்லது எதுவுமில்லாமல் இணைந்துள்ளனர்.

இங்கு எது கட்டாயத்தின் பேரில், எது சுயமாக என்பதை முடிவு செய்வது பிரதான மையப் பொருளாக விசாரணையாளர்களுக்கு இருந்தது.

குற்றச்சாட்டுகள் இவ்வாறு தொடர்ந்தன. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது பின்வருமாறு கூறப்பட்டது.

முதலில் கடன் வழங்கும் முறை ஒன்றை ஆரம்பித்தனர். கடன்களைப் பெறவதற்கென நிதி ஸ்தாபனங்களுக்கு இரு முகவர்கள் அல்லது இடைத் தரகர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மிகப் பெரும் தொகையான அளவில் போலியான சம்பள சான்றிதழ்களை வழங்கினர்.

இதனை சொலதூர்ன் அஞ்சலி நிதி நிறுவனம் ( Solothurn Anchali Finance GmbH ) , பேர்னர் அனிச் கொன்சல்ரிங் (Berner Anisch Consulting AG.) என்பன கையாண்டன.

இந்த நிதி நிறுவனங்கள் கிரடிற் சுவிஸி ( Credit Suisse ) என்ற வங்கி மூலமாக ஒரு பகுதி பணத்தை பெற்றுக்கொண்டனர்.

மிகவும் அதிக வருமானத்தைப் பெற்ற அவற்றின் அதிகாரிகள் இவர்களுக்கு கடன்களை வழங்கினர்.

இவ் வங்கி அதிகாரிகள் எவரும் ஒரே மாதிரியான பெரும் தொகையான போலி சம்பள சான்றிதழ்களை கவனத்தில் கொள்ளவில்லை.

பதிலாக பெரும் தொகையான கடன்களை 10.000 முதல் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்க் வரை சிபார்சு செய்தனர்.

இப் பணம் உலக தமிழர் இணைப்புக் கமிட்டியிடம் போய்ச் சேர்ந்தது.

Der Monsterprozess


சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் இப் பணங்களை எடுத்துச் சென்றனர். சில மாதங்களில் சுமார் 10 லட்சம் சுவிஸ் பிராங்க் பணம் வரை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

சமஷ்டிக் குற்றவியல் ஆய்வுகளின்படி சுமார் 15 மில்லியன்கள் வரை புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவிற்கென வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களுக்கு அப்பால் இவர்கள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்களின் ஆதரவாளர்களாக, அல்லது அங்கத்தவர்களாக உள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மோசடி, தவறான நடத்தை, சட்டவிரோத பணமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டுள்ளன.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது.

இவர்கள் மீதான பாய்ச்சல் விடுதலைப்புலிகள் என்பது குற்றங்களைச் செய்யும் (criminal) அமைப்பு என்பதற்காகவா? அல்லது விடுதலை அமைப்பு என்பதற்காகவா?

இதற்கு உலகில் அளவே இல்லை.

இவர்கள் குர்திஷ் விடுதலை அமைப்பு, ஹமாஸ், போல தீவிரவாத தமிழர் என்ற வரிசையில் உள்ளனரா?

ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் இதே மாதிரியான பிரச்சனைகளுக்கு பதிலைத் தந்துள்ளன.

இது சில சமயங்களில் பிரதிவாதிகளுக்கக் கேடாகவும் அமையலாம். ஏனெனில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள். சிலர் தண்டிக்கப்பட்டார்கள்.

இறுதியாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐரோப்பிய நீதிமன்றத்தின் சட்ட மா அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலிலிருந்து எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

சுவிற்ஸலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படவில்லை.

அல் கைடா, ஐ எஸ் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் சமஷ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றங்களை மேற்கொள்ளும் அமைப்பு என நிருபிக்க வேண்டும்.

குற்றம் புரியும் ஓர் அமைப்பு அதன் வடிவங்களையும், தனி நபர் தொடர்புகளையும் இரகசியமாகவே வைத்திருக்கும்.

இவர்களின் நோக்கம் வன்முறைகளை ஊக்குவிப்பதா? அல்லது குற்ற வழிகள் மூலம் தமது செல்வத்தைப் பெருக்கினார்களா?

இதுவே நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்காகும்.

தமிழ் ராணுவ தரப்பில் இது உண்மையா? ஒரு வேளை இக் கேள்விகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் பதில் கிடைக்காமல் போகலாம்.

இதற்காக இரண்டு நிபுணர்கள் அதாவது வரலாற்று மற்றும் சட்ட நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இறுதியில் பயங்கரவாதம் என்பது எது? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவுள்ளது.


சுவிஸ் பத்திரியைில் வெளிவந்த தொடர்புடைய செய்தி

தகவல் ச.சற்குணம்
சுவிஸ்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல