புதன், 1 பிப்ரவரி, 2017

4 வயது பெண்ணுக்கு, 29 வயது மாப்பிள்ளை - இதயத்தை உருக வைத்த அசாத்தியமான திருமணம்!

4 வயது பெண்ணுக்கு, 29 வயது ஆணுடன் கல்யாணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம் தான் இது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்தின் ஆசைக்கு வரம் கொடுத்து அருள்பாலித்திருக்கும் அவர் உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவர் தான்...



அப்பி சேலேஸ், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயதேயான குட்டி தேவதை. இவர் அல்பானி மெடிக்கல் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்பி சேலேஸ்-ன் மாமாவுக்கு திருமணமானது. அதை கண்ட அப்பி சேலேஸ்-க்கு தானும் அதை போல திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். தனக்கும் ஒரு காதல் வேண்டும் என அந்த குட்டி தேவதை விரும்பினார்.

அப்பி சேலேஸ்-க்கு அல்பானி மெடிக்கல் சென்டரிலேயே ஒரு காதலரும் இருந்தார். அவர் தான் மேட் ஹிக்ளிங். அவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் குழந்தை செவிலியர்.

தனது நோயாளிகள் மீது அதீத அன்பு செலுத்தும் குணம் கொண்ட ஹிக்ளிங் அப்பி சேலேஸ்-ன் விருப்பதை ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

விளையாட்டு திருமணமாக நடந்தாலும். பார்த்தவர் நெஞ்சை உருக வைத்தது அந்த சம்பவம். மருத்துவமனையிலேயே திருமணம் நடைப்பெற்றது.

மிட்டாய் மோதிரங்கள் விரல்களில் ஒருவருக்கு ஒருவர் அணிவித்தனர். கேக் வெட்டி ஊட்டினர். மேட்டை காணும் வரை அப்பி சேலேஸ் அந்த மருத்துவமனையை மிகவும் வெறுத்து வந்தார். மேட தான் தனது கவனிப்பால் அப்பி சேலேஸ்-ஐ அமைதிப்படுத்தினார்.

இப்போதெல்லாம் சிகிச்சைக்கு தனது கலாட்டா கல்யாண கணவனை காண்பதற்காகவே ஓடோடி வருகிறார் அப்பி சேலேஸ். இந்த நிகழ்வுக்கு பிறகு குட்டி தேவதை மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார் என கூறப்படுகிறது.







பிற்குறிப்பு: இச்சம்பவம் 2015ல் நடைபெற்றது. தற்சமயம் அந்த அப்பி சேலேஸ் பூரண குணமடைந்து சிறுவர்களின் பாடசாலைக்கு சென்று வருகிறார். அவரது அண்மைய புகைப்படம் அவருடைய முகநூலிலிருந்து பெறப்பட்டது.

 Abby Sayles, 5, Now a kindergartner, Abby has completed treatment, and is enjoying some of her favorite activities like soccer and dance.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல