கம்ப்யூட்டர் வாங்குகையில், அசெம்பிள்டு மற்றும் ஓ.இ.எம். நிறுவனக் கம்ப்யூட்டர் என வேறு படுத்துகின்றனர். இவை எந்த வகைக் கம்ப்யூட்டரைக் குறிக்கின்றன?
அசெம்பிள்ட் கம்ப்யூட்டர் என்பது, கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான அனைத்து பாகங்களையும் தனித்தனியே வாங்கி, நிறுவனமாக இல்லாமல், தனி நபராக அவற்றை இணைத்து விற்பனை செய்தலைக் குறிக்கிறது. தனி நபர் செய்து தருவதால், அதற்கான வரிகளை (எக்சைஸ் வரி, விற்பனை வரி) அரசுக்கு யாரும் கட்டுவதில்லை. இந்த வகைக் கம்ப்யூட்டருக்கு பொறுப்பேற்கும் நிறுவனம் இல்லையாதலால், வாரண்டி கிடைக்காது.
OEM என்பது Original Equipment Manufacturer என் பதன் சுருக்கமாகும். கம்ப்யூட்டர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள், அதற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும், அவர்களே தயாரிப்பதில்லை. மவுஸ் மற்றும் கீ போர்டினை லாஜிடெக் தரலாம்.
ஹார்ட் டிஸ்க்கினை ஸீ கேட் நிறுவனம் வழங்கலாம்; இதே போல சிப் செட் ஒரு நிறுவனத்தாலும், அதில் அமையும் பேன் இன்னொரு நிறுவனத்தாலும், எஸ்.எம்.பி.எஸ். என்னும் மின் சக்தியைக் கையாளும் சாதனத்தை பிறிதொரு நிறுவனத்தாலும் வழங்கப்படலாம்.
இவற்றை அந்த நிறுவனங்களிடமிருந்து, தங்கள் தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி, தங்கள் தொழிற்சாலையில் வைத்து, முறையாக இணைத்து, தங்கள் நிறுவனப் பெயரில் விற்பனை செய்திடும் நிறுவனங்களே ஓ.இ.எம். நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில நிறுவனங்கள், இவை பொருட்களை அதிகமாக வாங்குவதால், வாங்கும் நிறுவனத்தின் பெயரில் இவற்றை வழங்கும். பொருட்களில், கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள், இது போன்ற ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளாமல், தங்கள் நிறுவனப் பெயரினையே பொறித்து வழங்கும்.
இந்த வகை தயாரிப்பில் அரசு உரிமம் பெற்ற நிறுவனங்களே இயங்க முடியும். கம்ப்யூட்டருக்கான விலையில், அரசுக்கான எக்சைஸ் வரி, விற்பனை
வரி அடக்கம். கம்ப்யூட்டர் நிறுவனம், தான் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களுக்கு வாரண்டி கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக