வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா என எவ்வாறு அறிந்து கொள்வது ?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ள அல்லது ஒரு நிறுவனத்தை ஒருவர் தொடர்பு கொள்ள அல்லது ஒரு நிறுவனம் ஒரு தனிநபரை தொடர்பு கொள்ள என சிறந்ததொரு ஊடகமாக மின்னஞ்சல் உருவாகி உள்ளது.



இது எமக்கு ஆரம்பத்தில் எட்டாக்கனியாக இருந்திருந்தாலும் தற்போது இது அனைவராலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் நீங்கள் ஒரு நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அதற்கு பதிலை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றீர்களா?

அதற்கு பதில் வரவில்லை எனின் உங்களுக்கு பல கேள்விகள் எழலாம் அதில் முதாவது கேள்வி தான் அவர் அந்த மின்னஞ்சலை படித்து இருப்பாரா? என்பதாகும்.

இந்த கேள்விக்கு விடை காண உதவுகின்றது Mail Track எனும் இணைய உலாவிக்கான நீட்சி.

ஆனால் நீங்கள் Gmail மற்றும் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவராக இருத்தல் வேண்டும்.

இனி இதனை நீங்களும் உங்கள் இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

முதலில் Mail Track எனும் இந்த நீட்சியை உங்கள் இணைய உலாவிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்க.

பின் உங்கள் Gmail கணக்கை திறந்து கொள்ளுங்கள் இதன் போது Mail Track சேவையை உங்கள் கணக்கிற்கு செயற்படுத்த வேண்டுமா? என்றதொரு Pop Up Window தோன்றுவதனை அவதானிப்பீர்கள்.



பின் அதில் Active Mail Track என்பதனை அழுத்துங்கள்.

அதன் பின்னர் SING IN WITH GOOGLE எனும் சாளரம் தோன்றும் இனி அதனையும் சுட்டுக.



பிறகு புதியதொரு சாளரத்தில் Mail Track சேவையினை உங்கள் Gmail கணக்கிற்கு செயற்படுத்துவதற்கான உங்கள் அனுமதியை கேட்கும் (கீழே படத்தில் உள்ளவாறு)



அதில் Accept என்பதனை அலுத்துக.

அவ்வளவுதான் Mail Track சேவை உங்கள் Gmail கணக்கிற்கு செயற்படுத்தப்பட்டு விட்டது.

இனி நீங்கள் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பும் போது அதற்கு சிறியதொரு Tick அடையாளம் இடப்படும். பின் அந்த மின்னஞ்சல் படிக்கப்பட்டால் அதற்கு இன்னுமொரு Tick அடையாளமும் இடப்படும்.

இருமுறை Tick செய்யப்பட அந்த அடையாளத்துக்கு அருகில் Cursor ஐ நகர்த்துவதன் மூலம் அது எவ்வளவு நேரத்து முன் படிக்கப்பட்டது என்பதனை அறிந்து கொள்ளலாம்.



மேலும் நீங்கள் புதியதொரு மின்னஞ்சலை உருவாக்கும் போது தோன்றும் சாளரத்தில் இந்த Mail Track அடையாளத்தை சுட்டுவதன் மூலம் உங்கள் மின்னசல் படிக்கப்பட்டவுடன் அதனை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னஞ்சலை பெற்றுக்கொள்ளவும் முடியும். (கீழே படத்தில் உள்ளவாறு.)



அத்துடன் நீங்கள் அனுப்பக்கூடிய ஒவ்வொரு மின்னஞ்சலிலும் Sent with Mail Track என்ற Signature தோன்றும் நீங்கள் அதனை நீக்க விரும்பினால் Gmail தளத்தின் வலது மேற்பகுதியில் உள்ள Mail Track Button ஐ அலுத்துக பின் தோன்றும் சாளரத்தில் Signature என்பதில் இருக்கும் Tick அடையாளத்தை நீக்கிவிட்டு Update என்பதனை அலுத்துக.

சோதித்துப் பார்த்ததில் இது Gmail சேவைகளுக்கு மத்தியில் மாத்திரமே சிறப்பாக இயங்குகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல