புதன், 8 பிப்ரவரி, 2017

குறுந்தகவல்களுக்கென ஒரு இணையதளம்!

இன்றைய தகவல் தொடர்புக்குக் கணினியைத் தொடர்ந்து அலைபேசிகள் (Mobile Phones), திறன்பேசிகள் (Android Phone), கையடக்கக் கணினி (Tablet PC) போன்றவை வந்த பின்பு உடனுக்குடன் எளிமையாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. குறிப்பாக, இளம் வயதினர் அலைபேசிகளிலிருந்து குறுந்தகவல்கள் (SMS), மேற்கோள்கள் (Quotations), கவிதைகள் (Poems) என்று பல்வேறு தகவல்களைத் தங்களுடைய நண்பர்களுக்கிடையே பகிர்ந்து கொள்கின்றனர்.



தங்களுடையப் பகிர்வுகளுக்கு நண்பர்களிடமிருந்து விருப்பம் (Like), கருத்துகள் (Comments) போன்றவை அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று பலரும் ஒவ்வொரு நாளும் பதிவு செய்வதற்கானப் புதிய தகவல்களைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர். இவர்களின் தேடுதலுக்கு உதவும் விதமாகப் பல்வேறு குறுந்தகவல்களைக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆங்கில இணையதளத்தில் குறுந்தகவல்கள் (SMS), மேற்கோள்கள் (Quotations), கவிதைகள் (Poems), வேடிக்கையான முகநூல் நிலைத்தகவல்கள் (Funny Facebook Status), பிறந்தநாள் தகவல்கள் (Birthday Messages), அன்பு மேற்கோள்கள் (Love Quotes), கவர்ச்சித் தகவல்கள் (Cute Messages), கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (Christmas Greetings) போன்ற தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

குறுந்தகவல்கள் எனும் தலைப்பில், அறிவுரை, கோபம், அன்பு, உணர்வு, ஊக்கம், வயதானவர், நாப்பயிற்சி, கருணை, இனிப்பு, திருமணம், பிறந்தநாள், ஆண்டு விழா, தீபாவளி, ஹாலோவீன், அவமதிப்பு, வருத்தம், ஆறுதல், இரங்கல் என்பது போன்ற 120 வகையான தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான குறுந்தகவல்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. இதே போல், மேற்கோள்கள், கவிதைகள் போன்ற தலைப்புகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான மேற்கோள்களும், கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இது போன்று, முகநூலில் பதிவு செய்வதற்கான வேடிக்கையான நிலைத்தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கான தகவல்கள், அன்பை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு மேற்கோள்கள், கவர்ச்சியான தகவல்கள் என்று இந்தத் தளம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

தளத்திற்குச் செல்ல  இந்த  இணைய முகவரியைப் பயன்படுத்துங்கள்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல