நீ முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அமெரிக்க விமான நிலையத்தில் குத்துச் சண்டை உலகின் முன்னாள் ஜாம்பவான் முகமது அலியின் மகன், தாயாருடன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முகமது அலி மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்று, அந்த துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தார்.
கடந்த 3-6-2016 அன்று மரணம் அடைந்த முகமது அலியின் மகளான லைலா அலியும் குத்துச் சண்டை வீராங்கனையாக பல மேடைகளை சந்தித்துள்ளார்.
மறைந்த முஹம்மது அலியின் இரண்டாம் மனைவி கலிலா கமாச்சோ அலி. தனது 17-வது வயதில் முஹம்மது அலியை திருமணம் செய்து கொண்ட இவர், பத்தாண்டுகளுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து, பிரிந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.
மகன்களில் ஒருவரான முகமது அலி ஜூனியர்(47), அமெரிக்காவில் பிறந்தவராவார், பிலடெல்பியா பகுதியில் வசித்துவரும் இவரை புளோரிடா விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் மடக்கி வைத்து சரமாரியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தனது தாயார் கலிலா கமாச்சோவுடன் முகமது அலி ஜூனியர் ஜமைக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி விமானம் மூலம் வந்துள்ளார்.
இங்குள்ள ஃபோர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் ‘நீ முஸ்லிமா?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுள்ளனர்.
ஆம், நான் முஸ்லிம்தான் என்று அவர் ஒப்புக்கொண்ட பிறகும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டும், தேவையில்லாத பிற கேள்விக் கணைகளால் முகமது அலி ஜூனியரை சுமார் இரண்டு மணி நேரம் வறுத்தெடுத்துள்ளதாக தற்போது கெண்ட்டுக்கி மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பொதுவாக, அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் முஸ்லிம்களை இதுபோன்ற மன உளைச்சலுக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சில முறை அமெரிக்காவுக்கு சென்றபோதும் இதுபோன்ற அனுபவத்தை சந்திக்க நேர்ந்ததும், பல மணி நேரம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மனைவி, மகனுடன் முகம்மது அலி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக