ஞாயிறு, 5 மார்ச், 2017

"பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்.." - நான் கடந்து வந்த பாதை

ஓர் உயர்ந்த பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க சேர்ந்து, நடுவழியில் பாதை மாறி விபசாரத்தில் விழுந்து ஒரு அபலைப் பெண்ணின் துயரமான வாழ்க்கை.

"எனது மனநலம் மிகவும் மோசமானது. எப்படியாவது எனது டிகிரியை முடித்து விடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தேன். ஆனால், அது முடியாது என்றும் எனக்கு தெரியும்.



முடியாத என்ற நிலையில் மேற்படிப்பை பாதியில் விட்டு, நான் இளங்கலை பட்டம் பயின்ற லண்டனுக்கு மீண்டும் திரும்பினேன். அமெரிக்கவை விட லண்டனில் தங்குவதற்கும், ஒரு வேலை தேடுவதும் எளிதானதாக தோன்றியது எனக்கு."

"லண்டனில் இறங்கியதும் நான் வேலை தேடவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக போதைக்கு அடிமையானேன். நிறைய குடித்தேன், போதை... எனது சேமிப்புகள் மெல்ல, மெல்ல கரைந்தன.

ஒருநாள் பணம் இல்லாத காரணத்தால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே வீசப்பட்டேன். பிறகு அங்கிருந்து எனக்கு போதை பொருள் அளித்து வந்த டீலரின் இடத்திற்கு சென்றேன்."

"அந்த டீலர் ஏதாவது போதை பொருள் வாங்க வந்தாயா? என கேட்டார், இல்லை என்பதே என்னிடம் இருந்த ஒரே பதில். பணம் இல்லை, தங்க இடம் இல்லை என்பதை விளக்கினேன்.

அந்த டீலர் உதவுவதாக கூறி ஆபாச விடுதிக்கு அனுப்பி வைத்தார். அங்கு நான் சந்தித்த ஒரு நபரின் சேர்க்கை தான் என்னை விபச்சாரத்தில் தள்ளியது."

"மிகவும் பிரம்மாண்டமான இடம், வசதியான வாழ்க்கை, ஒரு நாள் இரவிற்கு 200 யூரோக்கள். ஏறத்தாழ இந்திய பணத்தின் மதிப்பில் ரூ.14,000. பெரிதாக அச்சம் ஏதுமின்றி எனது விபசார பயணம் இனிதே ஆரம்பித்தது.

அந்நபர் என்னிடம் மிகவும் இனிமையாக தான் அண்டந்துக் கொள்வார். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் எனக்கு இது பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டுமே தெரிந்தது."

"வரிசையில் நிற்க வேண்டும். உடல் அமைப்பை வைத்து தான் தேர்ந்தெடுப்பார்கள். சிலர் அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்தும் கூட. கொஞ்சம் கொடுமையானது தான். ஆனால், இது பழகிவிட்டது.

சில இரவுகளில் போதுமான பணம் சம்பாதித்து ஓய்ந்துவிட்ட பிறகும் கூட வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முடியாது என்பது அகராதியில் இல்லாத சொல். சொல்லக் கூடாத சொல்."

"வாடிக்கையாளர்களின் பார்வை வெவ்வேறு மாதிரியானது. யார் எதை தேர்வு செய்வார்கள் என அறிய முடியாது. என்னை தேடி வந்த ஆண்கள் எல்லாம் நன்கு சம்பாதிக்கும் நடுவயது திருமணமான ஆண்கள் தான். "

அந்த ஒரு நாள்...

"ஒரு நாள், ஒரு வாடிக்கையாளர் கோக் மற்றும் கோகைன் எடுத்து வந்தார். ஓவர்டோசான அந்த கோகைனை எனது பிறப்புறுப்பில் செலுத்தி போதை கொண்டார். நிற்காமல் உடலில் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. அறையை விட்டு வெளியேற எண்ணினேன். ஆனால், அரை பூட்டப்பட்டிருந்தது.

விபச்சாரம் நடத்தும் அந்த பெண்மணி அந்த நபரிடம் அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் பணம் பெற்றிருந்தார். நேரம் கொடுமையின் உச்சத்தை எட்ட ஆரம்பித்தது. அச்சம் என்பதை முழுமையாக நான் உணர்ந்த தருணம் அது."

பால்வினை நோய்கள்!

"இருப்பதிலேயே பெரிய அச்சம் பால்வினை நோய்கள். பல சமயங்களில் ஆணுறை கிழிந்து போகும். கிளமீடியா எனும் பால்வினை நோய் தாக்கத்திற்கு ஆளானேன்.

24 வயதில் பணத்திற்காக ஆண்களுடன் படுக்கையை பகிர துவங்கியது ஒரு உறவின் மீதான பார்வை என்னிடம் முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது.

ஏனெனில், என்னை தேடி வரும் ஆண்கள் அனைவரும் அவர்களது மனைவிக்கு துரோகம் செய்பவர்கள். இங்கு வருபவர்கள் யார் தான் உத்தமன். நான் மோசமானவள் என்றால், அவர்கள் என்னைவிட மோசமானவர்கள் தானே?

செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்ற பார்வை கொண்டிருந்த ஆண்கள் மட்டுமே எனக்கு பரிச்சயம் ஆனவர்களாக இருந்தனர்."

வெறுப்பு, அவமானம், தர்மசங்கடம்!

"ஒரு நிலையில் நான் என்ன வேலை செய்கிறேன் கூறும் நிலை ஏற்படும் போது, என்னிடம் பதில் ஏதும் இருக்காது. வெறும் வெறுப்பு, அவமானம், தர்மசங்கடம் மட்டுமே இருக்கும்.

அனைவருக்கும் விடியல் சுறுசுறுப்பாக இருக்கும். நான் மட்டுமே கைகளில் பணத்துடன் சோர்வாக, தளர்ந்து போய் காணப்படுவேன். நிறைய நிறைய பணம் ஆனால் பதட்டம் அதை விட நிறைந்த காணப்பட்டது."

"மெல்ல, மெல்ல எனது விபச்சார நேரத்தை குறைத்துக் கொண்டேன். கால் செண்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். வேறு இடத்தில் தங்கினேன்.

இன்று பி.எச்.டி முடித்து, எனது தோழர் ஒருவருடைய ட்ராவல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். வாழ்க்கையில் பலமுறை நமது பாதைகள் மாறும். ஆனால், தவறு என உணர்ந்த பிறகும் அதே பாதையில் பயணத்தை தொடர்வது தான் நாம் செய்யும் பெரிய தவறு. இதை திருத்திக் கொண்டாலே நாம் மனிதராகிவிடலாம்."
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல