சனி, 11 மார்ச், 2017

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொட்டாலே ஷாக் அடிக்கும்!

ஆண்கள் மின்சாரம்

தொ ட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய மின்சாரத்தைத்தான் ஆண்களின் செக்ஸ் நிலைக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்.

ஏனெனில், செக்ஸ் ஆசை ஆண்-பெண் இருவருக்கும் உண்டு என்றாலும், உடனடியாக ‘சட்’டென்று தூண்டப்படுவது ஆண்கள்தான்.



கவர்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பார்த்தால்கூட, உடனடியாக எழுச்சி அடையும் ஆண்கள், உடனடியாக செக்ஸ் அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.

எப்பாடு பட்டாவது காம ஆசையை நிறைவேற்றி உச்சகட்ட இன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அந்த இன்பத்தை அனுபவிப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அதனால்தான், இந்த உலகில் காம சுகத்துக்காகப் பெரும் குற்றங்களையும், அதிக அளவு கொலைகளையும் ஆண்கள் செய்திருக்கிறார்கள்.

ஆண்களின் செக்ஸ் ஆர்வமானது உடனடியாகத் தோன்றி, தீயைப்போல் உடல் முழுவதும் பரவி, படக்கென்று அணைந்துவிடக்கூடியது.

அதனால்தான், அவர்கள் முரட்டுத்தனமாகத் தன்னுடைய ஆசையை உடனே தீர்த்துக்கொள்ள ஏங்குகிறார்கள்.

ஆண்களின் உச்சகட்டம் என்பது விந்து வெளியேற்றம் என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், விந்து வெளியேற்றம் மட்டுமே உச்சகட்ட இன்பம் கொடுத்துவிடுவதில்லை. ஏனென்றால், கலவி மேற்கொள்ளும் அனைத்து நேரங்களிலும் விந்து வெளியேற்றம் நிகழ்வதில்லை.

வயதுக்கு வராத சிறிய பையன்களும் உச்சகட்ட இன்பத்தை அவர்களது உறுப்பின் மூலம் அடைந்துவிட முடியும்.

அப்போது அவர்களுக்கு விந்து வெளியேற்றம் இருப்பதில்லை என்றாலும், அது இன்பத்துக்குத் தடையில்லை.

சில ஆண்கள், உச்சகட்ட இன்பத்தை அடைந்த சில நொடிகளுக்குப் பின்னரே விந்துவை வெளிப்படுத்துவார்கள்.

விந்து வெளிப்படுத்தமுடியாத நிலையில் இருக்கும் ஆண்களும் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க முடிகிறது.

சில ஆண்கள், தொடர்ந்து உறவுகொள்ளும்பட்சத்தில், இரண்டு அல்லது மூன்றாவது முறை விந்து வெளியேற்றம் இல்லாமலே உச்சகட்ட இன்பத்தை அனுபவித்துவிட முடிகிறது.

இது தொடர்பாக, ஆண்கள் மனத்தில் எழும் முக்கியமான சில கேள்விகளைப் பார்க்கலாம்.

ஆண் உறுப்பு நீளமாக இருந்தால் அதிக அளவில் இன்பம் கிடைக்குமா?

‘மூக்கு பெரிதாக இருப்பவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாகச் சுவாசிக்கிறார்கள்.

மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாகச் சுவாசிக்க முடிவதில்லை’ என்று சொல்வது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான், ஆண் உறுப்பின் நீளத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள தொடர்பு.

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மன்ன ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும் சில ஆண்கள், தன்னுடைய பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர்.

இது தேவையில்லாத ஒரு கவலையாகும்.

ஏனெனில், பொதுவாக ஒரு பொருளைப் பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளைத் தூர விலகி நின்று பார்க்கும்போது பெரிதாகத் தெரியும் (ஆக்டிகல் இல்லூஷன்).

மேலும், எல்லோருக்கும் எல்லா உறுப்புகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இனி, ஆண் உறுப்பு பற்றிய நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்க்கலாம்.

முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

ஏனெனில், அப்போது அதனுடைய வேலை சிறுநீர் கழிப்பது மட்டும்தான்.

ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால், விறைப்புத்தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அதாவது, பெண் உறுப்பின் உள்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போது, பிறப்புறுப்பின் உள்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தி அடைகிறாள் என்பது நம்பிக்கை.

அதைவிட பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது உண்மைதான்.

இனி விஞ்ஞான ரீதியான, மருத்துவ ரீதியான உண்மையான முடிவுகளைப் பார்க்கலாம்.

சராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பு இல்லாத ஆண் உறுப்பு இரண்டு அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரை இருக்கும்.

விறைப்படைந்த நிலையில் ஐந்து அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.

ஆனால், பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குலப் பகுதியில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை வெகுவாக அனுபவிக்கிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்தப் பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், எந்த உபயோகமும் இல்லை.

எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஓர் ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட இரண்டு அங்குலப் பிறப்புறுப்பு போதுமானது.

ஆனால், இதைவிட அதிகமான நீளம் கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்குப் பிறப்புறுப்பு அமைந்துள்ளது.

எனவே, ஆண் பிறப்புறுப்பு சிறிதாக உள்ளதா, பெரிதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.

ஒரு பெண், ஓர் ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ, அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவில் திருப்தி அடைகிறாள்.

ஒரு பெண், ஓர் ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்கவழக்கங்களைப் பொறுத்தது.

எனவே, பெண்ணைத் திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும்படியாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியம்.

ஆகவே, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது, தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.

ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியுமா?

சிறிய உறுப்பு இருந்தால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாது என்று ஆண்களிடம் இருக்கும் பயத்தைப் போலி டாக்டர்களும், மருந்து தயாரிப்பாளர்களும் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிறிய உறுப்பு கொண்டவர்களின் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பணம் சம்பாதிக்கும் விஷயமாக மாற்றிக்கொள்வதற்கே, ‘ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியும்’ என்ற ரீதியில் விளம்பரம் செய்கிறார்கள்.

‘சிறு வயதில் செய்த செக்ஸ் லீலைகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி இருக்கிறது.

மருந்து சாப்பிடவில்லை என்றால் மேலும் மேலும் சுருங்கிவிடும்’ என்று அதிகம் பயம் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி பெரும்பாலும் நின்றுவிடுகிறது.

வளர்ந்த எந்த உறுப்பும் எக்காரணம் கொண்டும் சிறிதாகாது என்பதுதான் மருத்துவ நிதர்சனம்.

எந்த மருந்து மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் ஆண் உறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞானரீதியான உண்மை.

பொதுவாக, இதுபோன்ற பயங்களும், தாழ்வுமனப்பான்மையும் உள்ள ஆண்களுக்கு நம்பிக்கையை விதைக்க வேண்டியது முக்கியம்.

இந்த விஷயத்தில் பெண்களுக்கும் முழுமையான புரிதல் தேவை.

அப்போதுதான், ஆண்களின் உறுப்பைப் பற்றித் தவறான எண்ணங்கள் இருக்காது.

தன் உடலைக் காதலிக்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

என்ன இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதல்ல, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.

நம்பிக்கையும், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் இருந்தால்போதும், உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். ஒரு சில ஆண்களுக்குப் பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும், விதைப்பைகள் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இந்த நிலையைச் சரிசெய்ய போதுமான சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை.

‘ஜி ஸ்பாட்’ ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்..
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல