புதன், 26 ஏப்ரல், 2017

வடகொரிய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத்தேட 10 நிமிடங்களே கிடைக்கும் என்று ஜப்பான் தனது மக்களுக்கு அறிவுறுத்தல்!!

கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் பட்சத்தில் வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு 10 நிமிட முன்னெச்சரிக்கையை மட்டுமே வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதற்குள் ஜப்பானிய மக்கள் தமக்கான பாதுகாப்பை தேடிக்கொள்ளவேண்டும் என்றும் ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.



இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இப்போதுதான் முதல் தடவையாக ஜப்பானில் இத்தகைய ஒரு எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கபப்ட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜப்பானின் அமைச்சரவை செயலக பொதுமக்கள் பாதுகாப்பு இயையத்தளம் வடகொரியாவின் தாக்குதல்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு தேடிக்கொள்வது என்பதுகுறித்தும் எப்படி எச்சரிக்கை விடுக்கப்படும் என்பது குறித்தும் வழிகாட்டல்களை நேற்று செய்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு தனது நாட்டு மக்களை அனர்த்தம் அல்லது ஆபத்து ஒன்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பிலான எச்சரிக்கை திட்டம் ஒன்றை அமைப்பட்டுள்ளது.

அண்மையில் வடகொரியா தனது இராணுவ ஆற்றலை வெளிப்படுத்திய காட்சியின்போது

இதன்படி தாக்குதல் அபாயம் பற்றிய தகவல் செய்மதிகள், தொலைபேசிகள், இயைத்தளங்கள் மற்றும் வீதிவழியான ஒலிபெருக்கி அறிவிப்பு ஆகியவை மூலம் விடுக்கபப்டும்.

வடகொரியாவில் இருந்து ஏவுகணை ஒன்று ஜப்பானை நோக்கி ஏவப்படும்போது அது ஜப்பானை தாக்குவதற்கு 10 நிமிடங்கள் எடுக்கும் என்றும் அதன்படி ஏவுகணை அதன் உந்துசெலுத்தியில் இருந்து ஏவப்படுவதை அறிவதன் மூலம் ஜப்பானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபபடவுள்ளது.

ஆனாலும், வடகொரிய ஏவுகணை ஒன்று செலுத்தப்பட்ட உடனையாகவே அதனை அறிவது சிரமமாக இருக்கும் என்றும் சில நிமிடங்கள் தாமதமாகியே அதனை அறிய முடியும் என்பதால் உண்மையில் 10 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஜப்பானிய மக்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ள கிடைக்கும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஏவுகணை வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் ஜப்பானிய மக்களை மிகவும் வலுவான சீமெந்து கட்டடங்கள் மற்றும் நிலக்கீழ் பதுங்குகுழிகளுக்குள் பாதுகாப்பது தேடுமாறு அறிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் 57 இலட்சம் மக்கள் இந்த பாதுகாப்பு வழிகாட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ பிரசன்னம் காணபப்டும் ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இராணவ ரீதியாக மிகவும் வலிமையாக இருந்த ஜப்பானின் இராணுவ ஆற்றல் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்பின்னர் முடிவுக்கு வந்தது.

இந்த யுத்தத்தில் சுமார் 27 இலட்சம் ஜப்பானிய மக்கள் பலியாகினர். இந்த யுத்தத்தின் பின்னர் ஜப்பானின் புதிய அரசியமலமைப்பை உருவாக்கிய அமெரிக்கா அதனை ஒரு சமாதான நாடாக இருக்கும் வகையில் எந்த ஒரு இராணுவ கட்டமைப்பையும் உருவாக்குவதை தடைசெய்திருந்தது.

ஆனால் 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தின் பின்னர் குறிப்பாக சீனாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் பொருட்டு தற்பாதுகாப்புக்காக மட்டும் ஆயுதம் ஏந்தும் ‘ தற்பாதுகாப்பு படையை’ உருவாக்கியது.

அன்றில் இருந்து இன்றுவரை ஒரு துப்பாக்கி வேட்டையேனும் இந்த தற்பாதுகாப்பு படை சச்சரவு ஒன்றின் நிமித்தம் தீர்த்தது கிடையாது. ஆனால் ஐ. நா பாதுகாப்பு படை மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்த படை காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

இதனால் இந்த படை ‘பல் இல்லாத புலி’ என்று வர்ணிக்கப்படுகிறது. மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே தற்போதைய அரசியல் அமைப்பின்கீழ் ஜப்பானிய தற்பாதுகாப்பு படை நாடுகளின் கூட்டணி ஒன்றுக்கு உதவமுடியும்.

அவையாவன:

1. யப்பானின் இருப்பு ஆபத்தில் இருக்கும்போது

2. இராணுவம் சாரா முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடையும் போது

3. ஒரு ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்க்கான ஆகக்குறைந்த படைபல பிரயோகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்போது.

இதேவேளை ஜப்பான் தனது பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ராணுவ ரீதியாக வலுப்பெறும் பொருட்டு அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளூரில் வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றன.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல