ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஜேர்மனியில் அகதிகள்

dpa/Sven Hoppe
Flüchtlinge auf dem Hauptbahnhof in München. Im vergangenen Jahr kamen deutlich weniger Asylsuchende nach Deutschland als 2015

“வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு ஜேர்மனி“ தான் என்ற கூற்று
உண்மையாக இருந்தாலும் இன்றைய நிலையில் இந்த நாட்டுக்குள் வந்த
அகதிகளால் இந்த நாடே பல நெருக்கடிகளைச் சந்தித்துவருவது நிஜமாகும்.
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் குண்டு வெடிப்புக்களும் பயங்கரவாத
நடவடிக்கைகளும் இந்த நாட்டு மக்களை அகதிகள் மீது வெறுப்படைய
வைத்திருப்பதும் கவலைக்குரிய விடையமாகும்.

உலகில் பல நாடுகளில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பங்கள், போர்,
உள்நாட்டுப்போர், கலவரம், பயங்கரவாத நடவடிக்கை, அணு ஆயுதப்
போட்டிகள், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார சீர்குலைவு, வறுமை,
பசிபட்டினி, கொடிய நோய்கள் போன்றவற்றால் இன்று மக்கள் இடம்பெயர்வும்அகதி வாழ்வும் பெருகிய வண்ணம் இருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று குறிப்பாக சிரியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், லிபியா, எகிப்து,
சோமாலியா, எந்தியோப்பியா, கென்யா, ஈரான், ஈராக், துருக்கி போன்ற
நாடுகளில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையால் கோடிக்கணக்கான மக்கள்
தமது சொந்த நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக இடம்பெயர்ந்து
வாழவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இன்னும் பலர்
பொருளாதார அகதிகளாகவும் இடம்பெயர்வுகளைச் சந்தித்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐரோப்பா நாடுகளை நோக்கிப் படை எடுக்கும் அகதிகள்
பெருவாரியானோர் ஜேர்மனி நாட்டை நோக்கியே வந்து சேர்வதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் அதாவது
ஐரோப்பாவில் ஜேர்மனி நாடுதான் முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்துள்ளது.

பசிபட்டினியோடு உயிராபத்துக்களைச் சந்தித்து வரும் அகதிகளாகவரும் பல
நாடுகளின் அகதிகளுக்குத் தஞ்சம் அளித்து பாதுகாப்புக் கொடுத்து, உணவு,
மருத்துவம், கல்வி, பணம் போன்ற பல சேவைகளை வழங்கிப் பிற
நாட்டவர்களை வாழ வைக்கும் நாடுகளில் இன்று முதன்மை வகிக்கும் நாடு
ஜேர்மனிதான். ஜேர்மனிய மக்களின் மனிதநேயத்தை நாம் பாராட்டியே
ஆகவேண்டும்.

இந்த நாட்டுக்குவரும் அகதிகள் மிகவும் உயிராபத்துக்கள் நிறைந்த
கடற்பிரயாணம், எல்லைகளைக் கடத்தல், பனி குளிர் எனக்காடுகள் அனைத்தும் தாண்டித்தான் சொல்லொணாத் துயர்களைச் சந்தித்து அனுபவித்தே வந்துசேருகிறார்கள். அப்படிவரும் மக்களில் ஒருசிலர் செய்யும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஜேர்மனிய மக்களை அச்சம் கொள்ளவும் வெறுப்புக்கொள்ளவும் வைக்கின்றன என்றேகூறவேண்டும். இந்த வெறுப்புணர்வுகளால் எதிர்காலத்தில் பல விளைவுகள் நெருக்கடிகள் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.

இன்று உலகில் பல நாடுகளில் இடம்பெயர்வும், அகதி வாழ்வும் நீடித்து
நிலைத்துவிட்டன. ஏன் எங்கள் தாயகத்தில் நடந்து முடிந்த இன
வன்முறைகளால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெயர்ந்த மக்கள்
மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறமுடியாமல் இன்னல்படுகிறார்கள்.

அந்த அளவுக்கு நம் நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்கதையாக
நீடித்துவருகின்றன.

இன்று இப்படியாக இடம்பெறும் அனர்த்தங்களால் உலகிலேயே மிகப்பெரிய
அகதிகள் முகாம் கென்யா நாட்டில் காணப்படுவதாகவும் இங்கு சுமார் இரண்டு
லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் ஓரிடத்தில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள்
சபையின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஜேர்மனியில்
அகதிகள் பற்றிய சிறு புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...

-2015ம் ஆண்டில் நாட்டுக்குள் வந்த அகதிமக்கள் -8.90.000 பேர்
-2016 “ “ “ “ -2.80.000 பேர்
-2015ம் ஆண்டில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் - 4.70.000 பேர்
2016 “ “ “ - 7.46.000 பேர்
-2015,2016 ஆண்டுகளில் ஆகக்கூடுதலாக வந்த அகதிகளின் எண்ணிக்கை 1.000
பேருக்கு என்ற அடிப்படையில் தற்காலிக வதிவிட அனுமதி
வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..

சிரியா நாட்டவர்கள் 1.000 பேருக்கு - 632 பேர்
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் 1.000 பேருக்கு - 798 பேர்
ஈராக் நாட்டவர்கள் 1.000 பேருக்கு - 463 பேர்
ஈரான் நாட்டவர்கள் 1.000 பேருக்கு - 528 பேர்
எரித்திரியா நாட்டவர்கள் 1.000 பேருக்கு - 248 பேர்

-இந்த நாட்டுக்குள் அகதிகளாக வந்து அகதி அந்தஸ்த்துக் கோரி
விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஜேர்மனிய அதிகாரிகள் அகதி
அந்தஸ்த்து வழங்குவதற்கு எடுக்கும் காலம் 2 – 3 மாதங்களாகும்.

-2016ம் ஆண்டு ஜேர்மனிக்குள் அகதிகளாக வந்தவர்களில்..
சிறுவர்கள் - 26 வீதம்பேர்
பெண்கள் - 17 வீதம்பேர்
ஆண்கள் - 57 வீதம்பேர்

-2016ம் ஆண்டு முடிவடைய ஜேர்மனியில் ஆகக்கூடிய அகதிகள் வரிசையில்
துருக்கி நாட்டவர்கள் - 2.5 மில்லியன்பேர் (25 லட்சம்)
பாக்கிஸ்தான் நாட்டவர்கள் - 1.6 “ (16 லட்சம்)
லெபனான் நாட்டவர்கள் - 1.1 “ (11 லட்சம்)
ஈரான் நாட்டவர்கள் - 1.0 “ (10 லட்சம்)

-மொறோக்கோ, அல்ஜீரியா, ருனீசியா, லிபியா, எகிப்து, கிறீஸ்லாந்து, இத்தாலி நாடுகளின் வழியாகக் கடல் மார்க்கமாக ஐரோப்பா நாடுகளுக்குள் வந்து சேர்ந்த அகதிகள்..

2015ம் ஆண்டில் - 10.22.890 பேர்
2016ம் ஆண்டில் - 3.66.600 பேர்

-உலகில் போர், உள்நாட்டுப்போர், இயற்கை அனர்த்தம், பசி, பட்டினி, அரசியல்,
சமயம் , இனம், சமூகக் குழப்பங்களால் தமது சொந்த நாட்டைவிட்டு
இடம்பெயர்ந்தோரில் முன்னணி வகிப்போர் 2016ம் ஆண்டு முடிவடையும்வரை...

சிரியா நாட்டவர்கள் - 6.3 மில்லியன்பேர் (63 லட்சம்)
ஈராக் நாட்டவர்கள் - 3.1 “ (31 லட்சம்)
ஸ்சாட் நாட்டவர்கள் - 2.4 “ (24 லட்சம்)
யெமன் நாட்டவர்கள் - 2.0 “ (20 லட்சம்)
தென்சூடான் நாட்டவர்கள் - 1.3 “ (13 லட்சம்)

-மேற்கூறிய பல பாதிப்புக்களால் உலகம் பூராகவும் தற்போது 65 மில்லியன்
மக்கள் (6 கோடி 50 லட்சம்) மக்கள் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலுமாக
அகதிகளாக வாழ்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம்
அறிவித்துள்ளது.

புள்ளிவிபரங்கள்:- ஐக்கியநாடுகள்சபையின் அகதிகள் பிரிவு
ஜேர்மனிய அரச புள்ளிவிபரப் பிரிவு
ஜேர்மனிய வெளிநாட்டவர்கள் பிரிவு

தகவல்@- ஜேர்மனிய “Focus” சஞ்சிகை 4-2017
சிவராசா – ஜேர்மனி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல