ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய இலவச வசதி வொர்க்பிளேஸ்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தற்போது 'வொர்க்பிளேஸ்' என்னும் புதிய வசதியை ஆரம்பித்துள்ளது. இப்போதைக்கு இலவச சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிடலாம்.



கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த வசதியின் தரத்தை அறிந்து பல முன்னணி நிறுவனங்கள் கட்டணப்பிரிவில் இணைந்து சேவை பெற்று வருகின்றன கிட்டத்தட்ட மொத்த அலுவலகமும் ஒரே ஃபேஸ்புக் பக்கத்திற்குள் சுருங்கிவிடும் நிலை உள்ளதால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் நிர்வாகம் செய்வது மிக மிக எளிது.

இந்த வொர்க்பிளேஸ் மூலம் குரூப்புகள் உருவாக்கலாம், பதிவுகளை இடலாம், சக ஊழியர்களுக்கு ஒரு விஷயத்தை டேக் செய்யலாம், ஃபைல்களை பகிர்ந்து கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருடன் சேட்டிங் செய்யலாம் என பலவிதமான வசதிகள் இதில் உள்ளதால் வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அலுவலகத்திற்கு இதுவொரு பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

மேலும் மெசஞ்சர் வசதி, வீடியோ அழைப்பு வசதி, குரூப் அழைப்பு வசதி ஆகியவையும் இதில் உண்டு. மேலும் இன்னும் ஒருசில வசதிகள் குறித்து ஃபேஸ்புக் ஆலோசித்து வருவதால் விரைவில் இன்னும் அதிகப்படியான வசதிகளை எதிர்பார்க்கலாம்.

அனைத்து நிறுவனங்களுமே ஃபேஸ்புக் வொர்க்பிளேஸில் சேர வேண்டும் என்ற நிலை இல்லை என்றாலும் நாங்கள் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு பல நிறுவனங்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் எங்களுடைய முயற்சி நல்ல வெற்றியையே அடைந்துள்ளதாக கருதுகி'றோம் என்று ஃபேஸ்புக்கின் மேனேஜர்களில் ஒருவரான சைமன் கிராஸ் கூறியுள்ளார்.

இலவச வொர்க்பிளேஸ், 'வொர்க்பிளேஸ் ஸ்டாண்டர்டு என்றும் கட்டண சேவையுடன் கூடிய வொர்க்பிளேஸ், 'வொர்க்பிளேஸ் பிரிமியம்' என்றும் அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த வொர்க்பிளேஸ் வசதி லிமிட் ஆக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் டிசைன் அளவில் பார்க்கும்போது கட்டண சேவையில் உள்ள கூடுதல் டூல்ஸ் ஸ்டாண்டர்ட் சேவையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வொர்க்பிளேஸில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மற்றும் முக்கிய விஷயங்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியாட்களுக்கு ஷெர் ஆகாதவாறு ஃபேஸ்புக் பாதுகாப்பு வசதிகளை செய்துள்ளது. மேலும் இந்த வெர்ஷனில் மிக விரைவில் ஃபேஸ்புக் அப்டேட் செய்யவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வசதி நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரம் இதேபோன்ற சேவைகளை செய்து மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஸ்லாக் போன்ற நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு போட்டியாக இருக்கும் என்பதையும் பார்ப்போம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல