தனது 64 வயது மனைவியுடன் இமானுவேல் மக்ரோன். | படம்: ராய்ட்டர்ஸ்
பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது.
பிரான்ஸ் அதிபருக்கான 2-ம் மற்றும் இறுதிச் சுற்றுத் தேர்தல் வரும் மே 7-ம் தேதி நடைபெற வுள்ளது. முதல் சுற்று தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெற்று மக்ரோன் முதலிடம் பிடித்துள்ளார். லி பென் 21.53 சதவீத வாக்குகள் பெற்று, 2-வது இடத்தில் உள்ளார். முதல் சுற்றில் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், 2-வது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மக்ரோனின் வெற்றி ஏறத்தாழ முடிவாகியுள்ளது.
இந்நிலையில் மக்ரோனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது 15-வது வயதில் (1993-ல்) ஒரு நாடக அரங் கேற்றத்தின் போது வகுப்பு ஆசிரியர் டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார். அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும், மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இத னால் டிராக்னஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார்என அனை வரும் புரிந்து கொண்டிருந்தனர்.
ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தி யுள்ளார். அப்போது 3 குழந்தை களுக்கு தாயாக இருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோ னுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து 2007-ல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது 64 வயதான டிராக்னஸுக்கு 7 பேரக் குழந்தை கள் இருக்கின்றனர்.
Hindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக